இந்தியத் தாயின் பணிக்கு இளைஞர்களே வருக

1. நமது பாரம்பரியம்

ஜனவரி 15ம் நாள் கொழும்பில் பேசியது
என்னால் செய்யப்பட்ட ஏதோ சிறிதளவு பணி என்னுள் இருக்கும் ஆற்றலால் செய்யப்பட்டதல்ல. மிகுந்த அன்பிற்குரியதும் மிகப் புனிதமானதும் பிரியமானதுமான இந்த நமது தாய்நாட்டிலிருந்து என்னைத் தொடர்ந்து வந்த உற்சாக மொழிகளாலும் நல்வாழ்த்துக்களாலும் ஆசிகளாலுமே செய்யப்பட்டது. சிறிது நற்பணி நடைபெற்றுள்ளது, உண்மைதான். ஆனால் எனக்குத்தான் அதனால் அதிக நன்மை விளைந்துள்ளது. ஏனெனில், ஒரு வேளை என் உண்ர்ச்சிப் பெருக்கின் விளைவாக இருந்த என் பணி இப்போது திடவுறுதி பெற்றுள்ளது; அதைச் செயல்படுத்துவதற்கான வலிமையும் திறமையும் இப்போது எனக்கு வந்துள்ளது.

ஒவ்வோர் இந்துவும் நினைப்பதைப்போல் இந்த நாடு புண்ணிய பூமி, கர்ம பூமி என்று நானும் முன்பு நினைத்திருந்தேன், அவ்வளவுதான். நமது அவைத்தலைவரும் சற்று முன்பு அதையே குறிப்பிட்டார். ஆனால் இன்று, இதோ இங்கே நின்று கொண்டு, அது அப்படியே உண்மை என்று உண்மையின் உறுதிப்பாட்டுடன் சொல்கிறேன். இந்த உலகத்தில் புண்ணிய பூமி என்று சொல்லத்தக்க ஒரு நாடு இருக்குமானால், தங்கள் வினைப்பயன்களைத் தீர்த்துக் கொள்வதற்காக ஒவ்வோர் உயிரும் வந்தாக வேண்டிய ஓர் இடம் இருக்கிறது என்றால், கடவுளைத தேடிச் செல்கின்ற ஒவ்வொரு ஜீவனும் வந்துசேர வேண்டிய கடைசி வீடு ஏதாவது இருக்கிறது என்றால், மென்மையிலும் தாராள மனப்பான்மையிலும் புனிதத்திலும் அமைதியிலும், இவையனைத்திற்கும் மேலாக அக நோக்கிலும் ஆன்மீகத்திலும் மனித சமுதாயம் உச்சத்தை அடைந்த நாடு ஏதாவது உண்டென்றால் அது பாரதத் திருநாடே. எனவேதான் மிகப் பழங்காலத்திலிருந்தே ஆச்சாரிய புருஷர்கள் இந்ததப் பூமியைப் புனிதமான, வற்றாத ஆன்மீக வெள்ளத்தால் மீண்டும் மீண்டும் நிறைத்திருக்கிறார்கள். அதனால்தான் இங்கிருந்து கிளம்பிய தத்துவப் பேரலைகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று உலகின் எல்லா திசைகளிலும் பரந்துள்ளன. அதனால்தான் உலகாயதக் கலாச்சாரத்தை ஆன்மீக மயமாக்கப்போகின்ற அலையும் இங்கிருந்தான் எழுந்தாக வேண்டும். மற்ற நாடுகளிலுள்ள லட்சக்கணக்கான மக்களின் இதயத்தின் அடியாழங்களைச் சுட்டுப் பொசுக்குவதனா உலகாயதப் ப்பெருந்தீயைத் தணிக்கின்ற, வாழ்க்கை வளத்தை நல்குகின்ற நீர் இங்கேதான் உள்ளது. என்னை நம்புங்கள் நண்பர்களே, இது நடக்கத்தான் போகிறது.

இதை நான் காண்கிறேன். உங்களுள், மனித இனங்களின் வரலாற்றப் படித்தவரகளுக்கு இந்த உண்மை தெரிந்திருக்கும். நமது தாய்த் திருநாட்டிற்கு இந்த உலகம்பட்டுள்ள கடன் அளவற்றது. ஒவ்வொரு நாடாகப் பாருங்கள்; அமைதியான, சாதுவான இந்துவிற்குக் கடன்பட்ட அளவிற்கு உலகம் வேறெந்த இனத்திற்கும் கடன்பட்டதில்லை. ‘சாதுவான இந்து’ என்ற சொல் சில வேளைகளில் குற்றம் சாட்டும் தொனியில்பயன்படுத்தப்படுகிறது. ஆனால் எந்தக் குற்றப்படுத்தலிலாவது அற்புதமான உண்மை ஒன்று எப்போதாவது மறைந்திருக்க முடியுமானால், அது, கடவுளின் ஆசீர்வதிக்கப் பிள்ளையாக என்றென்றைக்கும் இருந்துவருகிறானே, அந்த இந்துவைக் குறிக்கின்ற ‘சாதுவான இந்து’ என்னும் சொல்லில்தான்.

உலகின் மற்ற பகுதிகளில் கலாச்சாரங்கள் தோன்றியுள்ளன. வலிமையும் பெருமையும் வாய்ந்த இனங்களிலிருந்து மகத்தான சிந்தனைக் கிரணங்கள் அன்றும் இன்றும் எழுந்து பரந்துள்ளன. இனங்களுக்கிடையே அற்புதமான கருத்துக் கருவூலங்கள் அன்றும் இன்றும் பரிமாறப்பட்டுள்ளன. மகோன்னதமான உண்மை மற்றும் ஆற்றில்ன விதைகள், முன்னேறி வருகின்ற தேசிய வாழ்க்கையின் பேரலைகளால், அயல்நாடுகளில் அன்றும் இன்றும் பரப்பப்படுகின்றன.

ஆனால் நண்பர்களே, ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்; இவையனைத்தும் போர்முரசுகளின் காதைப் பிளக்கின்ற முழக்கங்களோடும் படைகளின் அணிவகுபு களோடமே சாதிக்கப்பட்டன. ஒவ்வொரு கருத்தும் ரத்த வெள்ள்தில் தோய்த்தே பரப்பப்பட்டது. லடசக்கணக்கான நம் உடன்பிறந்தவர்களின் ரத்தத்தன் மீது நடந்து சென்றே ஒவ்வொரு சிந்தனையும் பரப்பப்பட்டது. வலிமை மிக்க அந்தக் கருத்துக்கள் சென்ற இடங்களில் எல்லாம், அவற்றைத்தொடர்ந்த லட்ச்கணக்கானோரின் மௌன ஓலங்களும் அனாதைகளின் அழுகுரலும் விதவைகளின் கண்ணீரும்தான் எழுந்தன. மற்ற நாடுகள் முக்கியமாகக் கற்றுத் தந்த பாடம் இதுதான்.

ஆனால் இந்தியா ஆயிமாயிரம் ஆண்டுகளாக அமைதியுடன் வாழ்ந்து வருகிறது. கிரீஸ் என்ற நாடு தோன்றுமுன்னரே, ரோமப் பேரரசு கற்பனையில் கூட உதிக்குமுன்னரே, இன்றைய இதே ஐரோப்பியரின் மூதாதையர் தங்கள் உடம்புகளில் நீல நிறச் சாயத்தைப் பூசிக்கொண்டு காடுகளில் வாழ்ந்த காலத்திலேயே இங்கே மிகச்சிறந்து வாழ்க்கைமுறைகள் உருவெடுத்துவிட்டன. அதற்கு முன்புகூட, வரலாறு என்ற ஒன்று இருந்ததற்குச்சான்றுள் இல்லாத காலத்திலிருந்தே, கடந்த காலத்தின் இருண்ட கருவறைக்குள் தங்கள்பார்வையைச் செலுத்தப் பாரம்பரியங்கள் அஞ்சி நிற்கின்ற அந்தக்காலத்திலிருந்தே, இன்றுவரையில், ஒன்றன்பின் ஒன்றாகச் சிந்தனைப் பேரலைகள் இந்தியாவிலிருந்து அணிவகுத்து உலகெங்கும் சென்றுள்ளன. ஆனால் அந்த ஒவ்வொரு வார்த்தைகளும் உச்சரிக்ககப்பட்ட போதெல்லாம், முன்னால் அமைதியும் பின்னால் ஆசிகளும் மட்டுமே விளைவாக இருந்தது. நாம் மட்டுமே பிற நாடுகளை வென்று அடிமைப் படுத்தாத தினமாக வாழ்கிறோம். அந்தப் பேராசிகளின் படுத்தாத இனமாக வாழ்கிறோம். அந்தப் பேராசிகளின் காரணமாகத்தான் நாம் இன்றும் வாழ்ந்துவருகிறோம்.

கிரேக்கப் படைகளின் அணவகுப்பு முழக்கத்தைக் கேட்டு, இந்தப் பூமியே அதிர்ந்த ஒரு காலம் இருந்தது. அந்தப் பழம்பெரும் நாடு இன்று அழிந்துவிட்டது; தனது பெருமையை எடுத்துச் சொல்வதற்குக்கூட ஒருவரின்றி பூமியிலிருந்தே மறைந்துவிட்டது. மதிப்பு வாய்ந்தவையாக இருந்த அனைத்தின்மீதும் ரோமானியர்களின் கழுகுக்கொடி1உயர்ந்தோங்கிப்பறந்த காலம் ஒன்று இருந்தது. எங்கும் அதன் அதிகாரம் கொடிகொட்டிப் பறந்தது; அந்த அதிகாரம் மனித குலத்தின்மீது சுமத்தவும் பட்டது. அதன் பெயரைக் கேட்டே இந்தப் பூமி நடுங்கியது. ஆனால் இன்று கேபிடோலின் குன்று2 உடைந்து சின்னாபின்னப்பட்டுக் கிடக்கிறது. சீசர்கள் ஆண்ட இடத்தில் சிலந்திகள் வலைபின்னுகின்றன. அதுபோலவே பல நாடுகள் பெரும்புகழுடன் எழுந்தன; செல்வச் செழிப்புடனும்

1. ரோமானியப் படையினர் புலி, குதிரை, கரடி போன்ற உருவங்கள் பொறித கொடித்தாங்கிச் செல்வது வழக்கம் மாரியஸ் (கி.மு. 155-86) என்ற மன்னன் தன் காலத்தில் கழுகின் உருவம் கொண்ட கொடியை உடையவனாக இருந்தான்.
2. பண்டைய போம்ப் பேர்ரசு ஏழு குன்றுகளின் மீது அமைக்கப்பட்டிருந்தது. அவற்றுள பண்டைய ரோமானியர்களின் தெய்வமான ஜூபிடரின் ஆலயம் அமைந்திருந்த குன்று கேபிடோலின் (Mons Capitolinus). இதன்மீதுதான் அவர்களின் தலைநகரம் அமைக்கப்பட்டிருந்தது.

மகிழ்ச்சிப் பேரார்வத்துடனும் ஆதிக்க வெறியுடனும் கொடிய லட்சியங்களுடனும் வாழ்ந்தன; ஆனால் கணநேரத்திற்குத்தான், நீர்மேல் குமிழிபோல் எல்லாம் மறைந்து விட்டன. அவற்றின் அடையாளச்சுவடுகள் மட்டுமே இன்று மனித குலத்தின் நினைவில் நிழலாடுகிறது.

ஆனால் நாம் வாழ்கிறோம்; மனு இன்று மீண்டும் வந்தால்கூட, தான் ஏதோ அன்னி நாட்டிற்கு வந்து விட்டதாக எண்ணி அவர் அஞ்சி நடுங்க வேண்டியிருக்காது. ஏனெனில் அவர் வகுத்த நியதிகளே இன்றும் உள்ளன. இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் அந்த நியதிகளைக் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப ஏதோ சிறிது மாற்றியிருக்கலாம். ஆனால் நமது சிந்தனைசக்தியின் விளைவாக்க காலங்காலமாக இருந்தவருகின்ற பழக்க வழங்ங்கங்களும் நமது அனுபவங்களும் அழிவற்றவபோல் அப்படியே உள்ளன. காலப்போக்கில் துரதிர்ஷ்டத்தின் எத்தனையோ பேரடிகள் ஒன்றன்பின் ஒன்றாக அவற்றின் மீது வழுந்தன. ஆனால் அந்த அடிகள் ஒவ்வொன்றும் அவற்றைமேலும் வலுவுடையவையாக, மேலும் நிரந்தர மானவையாகச் செய்தனவே தவிர, அவற்றைச் சற்றும் அசைக்கவில்லை. வற்றின் மையப்பகுதி, ந்த இதயப்பகுதி, தேஞ்சிய வாழ்க்கையின் அடிப்படை ஆதார உற்று எங்கே உள்ளது என்றதை ஆராயந்து பார்த்தோமானால், அதி இங்கே உள்ளது என்றே என் உலக அனுபவம் சொல்கிறது. இதை நம்புங்கள்! மற்ற நாடுகளுக்கு மதம் என்பது வாழ்க்கையின் எத்தனையோ அம்சங்களுள் ஒன்றுழ அரசியல் உள்ளது, சமுதாய ஆழ்வின் சுகபோகங்கள் உள்ளன; பணத்தால் வாங்கக்கூடிய, அதிகாரத்தால் சாதிக்கூடிய எல்லாம உள்ளன; புலன்களால் அனுபவிக்க முடிந்தவை எல்லாம் உள்ளன. இவற்றுக்கிடையே, ஏற்கனவே சுக அனுபவங்களால் திகட்டிப்போன புலன்களுக்கு மேலும் கொஞ்சம் இன்பம் தருபவற்றைத் தேடுகின்ற தேடலுக்கு இடையே மதத்திற்கும் ஏதோ ஒரு சிறு இடம் உள்ளது, அவ்வளவுதான்.

ஆனால் இங்கே இந்தியாவில் மதம் ஒன்றுதான் வாழ்க்கை. சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர்1 நடந்ததுபற்றி உங்களுள் எத்தனை பேருக்குத் தெரியும்? தெரிந்திருந்தாலும் அது ஏதோ ஒருசிலருக்குத் தான். மேலை நாட்டின் சமுதாய அமைப்பை மாற்றுவதற்காக மகத்தான அரசியல் இயக்கங்களும் சோஷலிச இயக்கங்களும் முயற்சி செய்துவருவதைப் பற்றி உங்களுள் எத்தனை பேருக்குத் தெரியும்? நிச்சயமக மிகச் சிலருக்கே. ஆனால் அமெரிக்காவில் சர்வ சமயப் பேரவை ஒன்று கூடியது. அதில் கலந்துகொள்ள இந்துத் துறவி ஒருவர் அனுப்பப்பட்டார்- இதை இங்கே ஒரு சாதாரணக் கூலியாள்கூட அறிந்திருப்பது எனக்குப் பிரமிப்பைப் தருகிறது. நமது பாதை எது, நமது தேஞிய வாழ்க்கை எதை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. உலகைச் சுற்றிவருகின்ற, குறிப்பாக அன்னிய நாட்டு யாத்திரிகர்கள் எழுதிய நூல்களை நான் படிப்பதுண்டு. கீழை நாட்டு மக்களின் அறியாமையைப் பற்றி அவர்கள் ஏதேதோ எழுதியிருக்கிறார்கள்; அதில் ஓரளவிற்கு உணைமை இருந்தாலும் பொய்யும் கலந்தே உள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் அல்லது ஜெர்மனியிலுள்ள ஒரு குடியானவனிடம், ‘நீ எந்தக்கட்சியைச் சேர்ந்தவன்?’ என்று கேட்டால், தான் ரேடிகல்(Radical) அல்லதுத கான்சர்வேடிவ் கட்சியைச் (Conservative) சார்ந்தவன்,
————
1. கொரியாவின் மீது யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதை நிலைநாட்ட இரு நாடுகளிக்கும் இடையே 189 ஆம் ஆண்டு நடைபெற்ற போர். பின்னர் 1895 – இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி ஜப்பான் அந்த அதிகாரத்தைப் பெற்றது.

இன்னாருக்கு ஓட்டளிக்கப் போகிறேன் என்பதையெல்லாம் பளிச்சென்று கூறுவான். அமெரிக்கனாக இருந்தால், தான் ரிபப்ளிக் (Republic) கட்சியைச் சார்ந்தவன் அல்லது டெமாக்ரடிக் (Democratic) கட்சியைச் சார்ந்தவன் என்பான்; ஒருவேளை வெள்ளிப் பிரச்சினையைப்1 பற்றிக்கூடச்சிறிது அறிந்திருப்பான் ஆனால், ‘உன் மதம் எது?’ என்று கேட்டாலோ, ஏதோ ஒரு பிரிவின் பெயரைச் சொல்லுவான். தினமும் சர்ச்சுக்குப் போவதாகவும் கூறுவான். அவனுக்குத் தெரிந்ததுஅவ்வளவுதான், அதுபோதும் என்றே அவன் நினைக்கிறான்.

இந்தியாவை எடுத்துக்கொள்வோம். இங்குள்ள ஒரு குடியானவனிடன், உனகு அரசியலைப்பற்றி ஏதாவது தெரியுமா? என்று கேட்டுப்பாருங்கள். ‘அது என்ன?’ என்று கேட்பான் அவன். சோஷலிச இயக்கங்கள் பற்றியும் அவனுக்குத்தெரியாது, முதலாளி- தொழிலாளி வர்க்கத்திற்கு இடையே உள்ள உறவு, அது இது என்றதெல்லாமும் அவனுக்குப் புரியாது இவற்றைப்ப ற்றி அவன் கேள்விப்பட்டதும் இல்லை. அவன் கடினமாக உழைக்கிறான், வேண்டியவற்றைச் சம்பாதிக்கிறான், அவ்வளவுதான். ஆனால் அவனிடம், ‘உனது மதம் எது?’ என்று மட்டும் கேட்டுப்பாருங்கள். ‘நண்பா, அதை என் நெற்றியிலேயே இட்டிருக்கிறேன் பார்’ என்று தாமதமின்றிப் பதிலளிப்பான். மதத்தைப்பற்றி ஓரிரு விளக்கங்களைக்கூட அவனால் கொடுக்க முடியும். இது என் அனுபவம். இதுதான் நமது தேசிய வாழ்க்கைமுறை.

1. Silver Question: அமெரிக்காவில் தங்க, வெள்ளி நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. 1873 – இல் வெளி நாணயங்கள் நிறுதப்பட்டன. நாட்டில் நாணயத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அவதிக்குள்ளான குடியானவர் போன்ற கடைநிலை வர்க்கத்தினர்மீண்டும் வெள்ளி நாணயங்களைக் கொண்டு வருமாறு போராடினர். இந்தக் காலத்தில் சுவாமிஜி அமெரிக்காவில் இருந்தார். அவர் மிஸ். மேரிஹேலுக்கு எழுதிய கடிதத்தில் (1.11.1896) இதைக் குறிப்பிடுகிறார்.

ஒவ்வொருவரும் தனித்தன்மைகளைப் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் தான் வளர்வதற்கான ஒரு தனிப்பட்ட முறை உள்ளது. அவனது வாழ்க்கை கூட – இந்துக்களாகிய நாம் சொல்கிறோமே அதுபோல், முடிவற்ற தனது முற்பிறவிகளால், வினைப்பயனால் நிர்ணயிக்கப்பட்ட – தனிவாழ்க்கையாகவே உள்ளது. கடந்கால வினைகளின் மொத்தச் சுமையுடன் அவன் இந்த உலகத்திற்கு வருகிறான். முடிவற்ற அந்தக் கடந்தகாலம் நிகழ்காலத்தை நிர்ணயிக்கிறத. நிகழ்கால வாழ்க்கையை நாம் பயன்படுத்துகின்ற விதம் எதிர்காலத்தை உருவாக்குகிறது. இவ்வாறு இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு வருக்கும் தனிப்பாதை உள்ளது; அவன் எந்த திசையில் போக வேண்டும். எப்படி வாழ வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனிமனிதனின் விஷயத்தில் எது உண்மையோ அது ஓர் இனத்தைப் பொறுத்தவரையிலும் உண்மை. எனவே ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு தனிப் பண்பு உள்ளது; அது இருப்பதற்குத் தனிக் காரணம் உள்ளது; இந்த உலகத்தில் தடத்தி முடிக அதற்கென்று தனிப் பணியும் உள்ளது. தன் லட்சியத்தை அந்த இனமே முடிவு செய்ய வேண்டும்; அதுவே அதனைச்சாதிக்கவும் வேண்டும்.

அரசியல் மகோன்னதமோ ராணுவ அதிகாரமோ நம் இனத்தின் தனிச் செய்தி அல்ல. அப்படி இருந்ததும் இல்லை, இருக்கவும் இல்லை; என் வார்த்தையைக் குறித்துக் கொள்ளஙுக்ள், இனி இருக்கப்போவதும் இல்லை. ஆனால் நமக்கென்று மற்றொரு லட்சியம் தரப்பட்டிருக்கிறது. அது, நம் இனத்தின் எலா ஆன்மீக சக்தியையும் ஒன்று திரட்டி, அதனைப்பாதுகாத்து, அதை ஒரு ‘டைனமோ’ விற்கள் சேமிப்பது போல் சேமித்து, ஒருங்கிணைந்த அந்தச் சக்தியை, தகுந்த வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், உலகம் முழுவதும் வெள்ளம் போல் பெருக்கெடுக்கச் செய்வதாகும். பாரசீகனும் கிரேக்கனும் ரோமானியனும் அரேபியனும் ஆங்கிலேயனும் படைகை நடத்தட்டும், உலகை வெல்லட்டும், அதன்மூலம் வெவ்வேறு நாடுகளை இணைக்கட்டும். அந்த இணைப்புப பாடையின வழியாக இந்தியாவின் தத்துவமும் ஆன்மீகமும் உலக நாடுகளின் நாடிநரம்புகளுள் பயாவதற்குத் தயாராக இருக்கும். மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் இந்துவின் அமைதியான மூளையும் தன் பங்கைக்கொடுத்தே ஆக வேண்டும். ஆன்மீக ஒளியே உலகிற்கு இந்தியாவின் நன்கொடையாகும்.

இவ்வாறே கடந்த காலங்களில் நடந்துள்ளது. எப்போதெல்லாம் உலகை வெல்லும் ஒரு நாடு தோன்றி பல்வேறு இன மக்களை வென்று, இந்தியாவை அவைகளோடு இணைத்ததோ, தனக்குள் ஆழ்ந்திருந்தது போலிருந்த இந்தியாவைத் தனிமையிலிருந்தும் ஒதுங்கிய நிலையிலிருந்தும் விலக்ககி உலகத்தோடு ஒன்று சேரும்படி வைத்ததோ, அப்போதெல்லமாம், அத்தகைய சூழல் உருவாக்கப்பட்ட போதெல்லாம், அதன் விளைவாக உலக நாடுகள் முழுவதும் இந்திய ஆன்மீகம் பாய்ந்து சென்று பரவி இருக்கிறது

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெர்மனியின் சிறந்த தத்துவ ஞானியான ஷோபனேர் (Schopenhauer) வேதங்களின் லத்தீன் மொழிபெயர்ப்பைப் படித்தார். அது முதலில் பாரசீக மொழியிலும் பின்னர் அதிலிருந்து பிரெஞ்சு இளைஞன் ஒருவனால் லத்தீனிலும் மொழி பெயர்க்கப்பட்டது.1அவ்வளவு சிறப்பான மொழி

1. முகலாய சக்கரவர்த்தியான ஷாஜஹானின் மூத்த மகனான தாராசிகோ உபநிடதங்களை ப் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கச்செய்தார். சுஜா உத்தௌலாவின் சபையிலுள்ள ஒரு பாரசீகர் அதனைச் செய்தார். அதன் பெயர் ‘உபயோகத்’ என்பதாக இருந்தது. ஆதேதில் துபேரோம் அதனை லத்தீனில் மொழிபெயர்த்தவர். இந்த மொழிபெயர்ப்பையே ஷோபனேர் படித்தார்

பெயர்ப்பாக அதனைக் கருதுவதற்கில்லை. இருப்பினும் அதைப் படித்தபின் அவர், ‘உபநிடத்களைப்போல் நன்மையளிப்பதும் உன்னதமான நிலைக்கு அழைத்துச் செல்லுவதுமான நூல் எதுவும் இலை. அது என் வாழ்விற்கு அமைதியைத் தருவதாக உள்ளது; என் மரணத்திற்கும் அமைதியைக் தருவதாக உள்ளது; என் மரணத்திற்கும் அமைதியை அளிப்பதாக இருக்கும். என்று கூறியுள்ளார். இந்த மகத்தான ஜெர்மானியப் பேராசிரியர் முன்பே தீர்க்கதரிசனமாக, ‘கிரேக்க இலக்கியங்களால் உலகச் சிந்தனையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியைவிட மிக ஆற்றல் வாய்ந்த, மிகவும் தீவிரமான சிந்தனை மறுமலர்ச்சி ஏற்படப் போவதை உலகம் காணப்போகிறது’ என்று கூறினார். இப்போது அவரது வார்த்தைகள் உணைமையாகிக் கொண்டிருக்கின்றன. யாரெல்லாம் கண்களைத் திறந்து வைத்துள்ளனரோ, யாரெல்லாம் ல்வேறு நாடுகளைப்பற்றிப் படிக்கின்ற சிந்தனையாளர்களோ, அவர்கள், மெதுவாக ஆனால் தொடர்ச்சியாக எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டிருக்கின்ற இந்த இந்தியச் சிந்தனைகளால் உலக இலக்கியங்களின் கண்ணோட்டமும் போக்கும் வழிமுறைகளும் வெகுவாக மாறி வருவதைக் காண்பார்கள்.

ஆனால் முன்புநான் கோடி காட்டியதுபோல் மற்றொரு விசித்திரம் இதில் உள்ளது. நாம் ஒருபோதும் நம் கருத்துக்களை வாள்மூலமோநெருப்பின் மூலமோ பரப்பவில்லை. இந்தியா உலகிகுத் தந்த கொடையை விளக்குவதற்கு ஒரு சொல் ஆங்கில மொழியில் இருக்கிறதென்றால், இந்திய இலக்கியங்களால் மனித சமுதாயத்தில் ஏற்பட்ட விளைவுகளை விளக்குவதற்கு ஒருசொல் இருக்குமானால், அது, Fascination (வசீகரம்) என்பதே. அது திடீரன்று ஒருவரை அப்படியே பற்றிப் பிடித்துக் கொள்கின்ற கவர்ச்சி அல்ல; உணர முடியாத வகையில் ஒருவர் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற வசீகரம் அது. இந்தியர் சிந்தனை, இந்தியப் பழக்க வழக்கங்கள், இந்தியத்தத்துவம், இந்திய இலக்கியம் முதலானவை எடுத்த எடுப்பில் பலருக்கு வெறுப்பைத் தருவதாக இருக்கும். ஆனால், அவர்கள் பொறுமையைக் கற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து படிக்க வேண்டும். அந்தக் கொள்கையில் அடிஊற்றாக ஓடுகின்ற பகத்தான கருத்துக்களோடு நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டும். அப்போது நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது பேரும் அதன் தாக்கத்தைப் புரிந்துகொள்வார்கள், அந்த வசீகரத்தை உணர்வார்கள். அதிகாலையில் மெதுவாக அமைதியாக உதிர்கின்ற பனித்துளிகளைக் காணவோ, கேட்கவோ முடியாது, இருந்தாலும் அவை எத்தனை அற்பதங்களை நிகழ்த்திவிடுகின்றன! அமைதியான, பொறுமையான, துயரத்தைதே அனுபவித்து வந்துள்ள இந்த ஆன்மீக இனமும் அதுபோலவே உலகின் சிந்தனைப் போக்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வரலாறு மீண்டும் திருப்பப் போகிறது. ஏனெனில் ஆற்றல் மிக்கவையாகவும் தகர்க்க முடியாதவை போலவும் தோன்றிய பழங்கால நம்பிக்கைகள் எல்லாம் இன்று நவீன விஞ்ஞானத்தின் கண்கூசுகின்ற ஒளி வெள்ளத்தில் வேருடன் சாய்க்கப்படுகின்றன; மனித குலத்தின் கடமை இதுதான் என்று பல்வேறு மதப் பிரிவுகளும் வகுத்தளித்த விசேஷ ஆணைகள் எல்லாம் அணு அணுவாகச்சிதறி, காற்றோடு காற்றாகக் கரைந்து மறைகின்றன; பழங்காலத்தைப் பற்றிய நவீன ஆராய்ச்சிகளின் கூர்மையான சம்மட்டி முறைகள் புராதனத்தின் குறுகிய கருத்துக்களை எல்லாம் பீங்கான் சில்லுகளைப் போல் நொறுக்கித் தூள்தூளாக்குகின்றன. மேலை நாட்டின் மதமோ அறிவற்றோரின் கைகளில் சிக்கிக் கிடக்கிறது. அதனால அறிஞர்கள் மத்ததைச் சார்ந்த எதையும் வெறுப்போடுபார்க்கின்றனர். இந்த நிலையில்தான், இந்திய மனங்களின் மிகவுயர்ந்த ஆன்மீக லட்சியங்களின் வெளிப்பாடாக இருப்பதும், தத்துவ உண்மைகளின் சிகரங்களைத் தொடுகின்ற, அதே வேளையில் மக்களின் அன்றாட வாழ்வில் செயல்முறைப் படுத்தக்கூடியதாக இருப்பதும் ஆகிய இந்தியத் தத்துவ ஞானம் முன்னே வருகிறது. எல்லோரும் ஒன்றே என்னும் கருத்து, எல்லையில்லா தன்மை, அருவக்கொள்கை, கருத்து, எல்லையில்லா தன்மை, அருவக் கொள்கை, மனிதனின் ஆன்மா அழிவற்றது என்னும் அற்புதக் கோட்பாடு, உயிர்களின் முன்னேற்றத்திலுள்ள தடையற்ற தொடர்ச்சிபற்றிக் கூறும் கொள்கை, முடிவயில்லாத அண்ட சாரசரங்களைப்பற்றிக் கூறும் கொள்கை – இவை அவர்களை மீட்பதற்குத் தாமாகவே வருகின்றன.

உலகத்தை ஒரு சிறிய சேற்றுக்குட்டை என்றும், காலம் என்பது சிலநாட்களுக்கு முன் துவங்கியது என்றும் பழங்கால மதங்கள் நினைத்து வந்தன. ஆனால்நம் சாஸ்திரங்களில், நம் சாஸ்திரங்களில் மட்டுமே முடிவேயில்லாத மகத்தான காலத்தையும் பிரபஞ்சத்தைப் பற்றியும், தோற்றங்களின் காரணம் பற்றியும் இவற்றுக்கு எல்லாம் மேலான மதங்களின் தேடலுக்குமுக்கியப் பொருளான ஆன்மாவின், மனிதனின் எல்லையற்ற பெருமை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்காலத்தின் பரிணாமக்கொள்கைகள்1, ஆற்றல் மாறாக் கொள்கை2 முதலிய கொள்கைகள், குருட்டுத்தனமான மதக் கோட்பாடுகளுக்கு மரண அடி கொடுத்து

1. Theory of Evolution: ஓர் இனத்தைச் சேர்ந்த உயிர், தேவையை முன்னிட்டும் சூழ்நிலையின் தாக்கத்தாலும் இன்னோர் உயர்நிலை உயிராகப் பரிணமிக்கிறது என்ற கொள்கை. டார்வின்கொள்கை இது.
2. Law of Conservation of Energy: சக்தி ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறுகிறதே தவிர, அளவில் மாறுவதில்லை, எப்போதும் ஒரே அளவாகவே இருக்கிறது.

வருகின்றன. இந்த நிலையில், மனித மனத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பான, ஆண்டவனின் அற்புதக் குரலான வேதாந்தம் கூறுகின்ற மிகவும் ஆச்சரியகரமா, நம்பிக்கையைத் தருகின்ற, மனத்தை விரிவுபடுத்துகின்ற மகத்தான கருத்துக்களைத் தவிர வேறு எது பண்பட்ட மனித சமுதாத்தின் அன்பைப்பெறுவதாக இருக்க முடியும்?

இந்தியாவிற்கு வெளியே உள்ள நாடுகளில் நமது மதம் செயல்படுகிறது என்று கூறினேன். இங்கு நான் மதம் என்று குறிப்பிடுவது,மதத்தின் கோட்பாடுகளை, அதன்பின்னணியை, எந்த அடிப்படைமீது மதம் கட்டப்பட்டுள்ளதோ அந்த அடிப்படையை மட்டுமே. பல்வேறு விளக்கங்களோ, சமுதாயத்தின் தேவைகளுக்காகப் பல நூற்றாண்டுகளாக ஏற்படுத்திக்கொண்ட நுட்பமான கருத்துக்களோ, சமுதாய நலனிற்காக பழக்க வழக்கங்களுக்குக் கொடுத்த காரணகாரிய விளக்கங்களோ அந்த மத்தத்தில் இடம்பெறாமு.

இரண்டு தனித்தனியான உண்மைகளை நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒன்று, என்றென்றும் நின்று நிலவுகின்ற உண்மகள்; மனிதனின் இயல்பு, ஆன்மாவின் இயல்பு, இறைவனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பு, இனைவனின் இயல்பு, பூரணத்துவம் போன்றவற்றின் மீது எழுப்பப்பட்டவை இவை. மேலும் பிரபஞ்சத்தின் படைப்பு, சரியாகச் சொல்வதானால் பிரபஞ்சத்தின் வெளிப்பாடு, பிறப்பு இறப்பாகிய சுழற்சி பற்றிய அற்புத மான விதி- இவை போன்றவையும் இதில் அடங்கும். இவையெல்லாம் இயற்கையில் காணப்படுகின்ற பிரபஞ்சம் தழிவிய நிலையான நியதிகளின் மீது அமைக்கப்பட்டவ.

மற்றொருபகுதி அன்றாட வாழ்க்கைக்கக்கப்பயன்படுகின்ற சாதாரண விதி முறைகள். அவை பெரும்பாலும் புராணம், ஸ்மிருதி, முதலிய பகுதிகளைச்சார்ந்தவை;வேதங்களைச் சேர்ந்தவையல்ல. இந்த விதிகள் முதல்வகை உண்மைகளுடன் மிகவும் சிறிதும் தொடர்புடையவை அல்ல. நமது நாட்டில்கூட இந்த விதிகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. ஒரு காலத்தின் ஒரு யுகத்தின் பழக்கங்கள், மற்றொரு காலத்தின், யுகத்தின் பழக்கங்களாக இருக்காது. யுகங்கள் மாறிமாறி வருவதற்றுக் ஏற்ப அவையும் மாறிக்கொண்டே இருக்கும். மாபெரும் ரிஷிகள் தன்றி அந்த யுகத்தின் சூழலுக்கும் இயல்பிற்கும் தேவையான புதிய பழக்க வழக்கங்களை உருவாக்கி நம்மை வழி நடத்திச்செல்வார்கள்.

மனிதனையும் கடவுளையும் உலகையும் பற்றிய இநுத ஆச்சரியகரமான, முடிவே இல்லாத, உன்னதமான, மிகப் பரந்த கருத்துக்களின் அடிப்படையாக விளங்குகின்ற மகத்தான கோட்பாடுகள் இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்டன. இந்தியாவில் மட்டும்தான் மனிதன் பல்வேறு குழுக்களின் தெய்வங்களுக்காக எழுந்து நின்று,’என் தெய்வம்தான் உண்மை, உன் தெய்வம் உண்மையில்லை. இதைக் குறித்து நாம் கடுமையாகச சண்டைக்கு அழைக்கவில்லை. அத்தகைய எண்ணங்கள் இங்கு ஏற்படவே இல்லை. இந்த மகத்தான அடிப்படைக் கோட்பாடுகள், மனிதனின் அழிவற்ற இயல்பின் மீது எழுப்பப்பட்டுள்ளதால், அவை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போலவே, இன்றும் மனித இனத்தின் நன்மைக்காகச் செயல்படும் திறன் படைத்தவை; அவ்வாறே, இந்தப் பூமி இருக்ககும் வரை, கர்ம நியதி இருக்கும் வரை, நமதுகர்மங்களை நமது ஆற்றலினாலேயே வாழ்ந்து முடிப்பதற்காக நாம் தனி மனிதர்களாகப் பிறந்து கொண்டிருக்கும்வரை அவை நிலைத்து நிற்கவும் செய்யும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா உலகிற்குக் கொடுக்க வேண்டியது இதுதான். பல்வேறு இனங்களில் மதம் தோன்றி வளர்ந்த வரலாற்றை நாம் கவனித்தால், ஆரம்பத்தில் ஒவ்வோர் இனத்திற்கும் சொந்தமாக ஒரு தெய்வம் இருப்பதைக்காணலாம். ஒன்றுக்கொன்று சுமுகமான உறவுள்ள இனங்களின் தெய்வங்களின் பெயர்களிலும் பொதுமை இருக்கும். பாபிலோனிய தெய்வலங்களின் பெயர்களைப் பார்த்தால் இது புரியும். யூதர்கள் பல்வேறு இனங்களாகப் பிரிந்தபோது, அவர்களின் தெய்வங்கள் மொலாக் (Moloch) என்ற பொதுப்பெயரைப் பெற்றனர்ந அதுபோல்தான் பாபிலோனியர்கள் பிரிந்த போது அவர்களின் தெய்வங்கள் பால்(Baal) என்ற பொதுப்பெயரைப் பெற்றனர். இவர்களுள் ஓர் இனம் மற்ற இனங்களைவிட ஆற்றல் பெரும்போது, அந்த இனத்தின் அரசனே எல்லா இனங்களுக்கம் அரசன் ஆவான். அதுபோலவே அந்த இனம் தங்களக் தெய்வத்தை மற்ற இனங்களுக்கம் தெய்வம் ஆக்குகிறது. இப்படித்தான் பாபிலோனியர்பால் – மெரோடக் (Baal – Merodach) தான் உயர்ந்த தெய்வம், மற்றவர்கள்தாழ்ந்தவர்கள் என்ற சொன்னார்கள். மொலாக் – யவஹ் (Moloch – Yavah) மற்ற எல்லா மொலோக் தெய்வங்களுக்கும் மேலானவர். இந்தப் பிரச்சினைகள் போரின் வெற்றியால் தீர்மானிக்கப்பட வேண்டியிருந்தது.

இங்கேயும் இதே போராட்டம் இருந்தது. இந்தியாவிலும் தெய்வங்கள் தங்கள் தலைமைக்காகப் போராடினர். ஆனால் இந்த நாட்டின் மகத்தான நற்பேற்றின் காரணமாகவும் உலகத்தின் நற்பேறு காரணமாகவும் அந்தக்கூச்சலுக்கும் குழப்பங்களுக்கும் இடையே ஒரு குரல் எழுந்து, ‘ஏகம் ஸத் பஹூதா வதந்தி1 (இருப்பது ஒன்றே; மகான்கள் அதைப்பல பெயர்களால் அழைக்கிறார்கள்)’ என்று முழங்கியது. சிவன் விஷ்ணுவிற்கு
1. ரிக் வேதம். 1.164.46
மேலனாவர். விஷ்ணு மட்டும்தான் எலா ஆற்றல்களையும் உடையவர். சிவபெருமான் ஒன்றுமே இல்லாதவர் என்பதெல்லாம் இல்லை. சிவன், விஷ்ணு என்றெல்லாம் எத்தனையோ நூறு பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே கடவுள்தான். பெயர்கள் வேறு, ஆனால் இருப்பது ஒன்றுதான். இந்தச் சின்னசஞ்சிறு வாக்கியத்தில் இந்தியா முழுவதையுமே படித்துவிடலாம்! வரலாறு முழுவதிலும் இந்த மையக் கருத்தே அற்புதமான மொழியில் மகத்தான ஆற்றலுடன் திரும்பத் திரும்பச்சொல்லப்படுகிறது. இந்தக் கருத்து நாட்டின் ரத்தத்தில் ஊறும்வரை, அதன் நாடி நரம்புகளில் ஓடுகின்ற ஒவ்வொரு சொட்டு ரத்தத்தோடு ரத்தமாககலந்து துடிக்கும்வரை, உயிருடன் உயிராக மாறும்வரை, அது உண்டாக்கப்பட்டிருக்கிறதே அந்தப் பொருட்களின் கூறுகள் அனைத்திலும் ஊடுருவும்வரை இந்தக் கருத்து மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வந்தது. அந்தக் காரணத்தால் நமது இந்தப் புராதனமான தாய்நாடு வியக்கத்தக்க பொறுமை யின் உறைவிடமாக மாற்றப்பட்டுவிட்டது; எல்லா மதங்களையும் எல்லா நெறிகளைகளையும் தன்னிடம் வரவேற்கின்ற உரிமை பெற்றதாக விளங்குகிறது. இதற்கான நிரூபணத்தை, ஒன்றுக்கொன்று முற்றிலும் முரணானவை போல் தோன்றுகின்ற மதப்பிரிவுகள் வியக்கத்தக்க சமரசத்துடன் நிலவுவதை இங்கேதன் காண முடிஉம். நீங்கள் உவைதியாக இருக்கலாம், நான் அத்வதைதியாக இருக்கலாம்; நீங்கள் இறைவனின் நிலையான ஞேவகன் என்று உங்களை நம்பலாம், நான் என்னைக் கடவுளுடன் ஒன்று பட்டவனாக்க கூறிக்கொள்ளலாம். என்றலும் நாம் இருவரும் நல்ல இந்துக்களாகவே இருப்போம். இது எப்படி முடிகிறது? ‘ஏகம் ஸத் விப்ரா பஹூதா வதந்தி – இருப்பது ஒன்றே; மகான்கள் அதைப் பல பெயர்களால் அழைக்கிறார்கள்’ என்பது நம் மனத்தில் ஊறி இருப்பதால்தான். என் நாட்டு மக்களே! எல்லாவற்றுக்கும் மேலாக நாம் உலகத்திற்குப் போதிக்க வேண்டியது இந்த மகத்தான உண்மையைத்தான்.

பிற நாடுகளிலுள்ள பேரறிஞர்கள்கூட, நமது மதத்தை உருவ வழிபாடு என்று கூறித்தங்கள் மூக்குகளை 45 டிகிரி கோணத்தில் திருப்பிக் கொள்கிறார்கள். நான் நேரிலேயே அதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் தங்கள் மூளையில் எவ்வளவு மூட நம்பிக்கைள் குவிந்து கிடக்கின்றன என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. கீழ்த்தரமான இந்தப் பிரிவினைவாதம் இன்னும் எல்லா இடங்களிலும் அப்படியேதான் இருக்கிறது.

தன்னிடம் இருப்பதே உயர்ந்தது,தகுதியானது; பணத்தையும் பண தேவதையையும் வணங்கி வாழ்கின்ற குறுகிய வாழ்க்கையே வாழத்தக்கது, தனது சிறிய சொத்து மட்டுமே மதிப்பு வாய்ந்தது – வேறு எதுவும் தகுதியுடையதாக அவனுக்குத் தெரிவதில்லை. பன்றற ஏதோ ஒன்றை வெறும் களிமண்ணில் செய்துவிடுவான், எந்திரம் ஒன்றைக்கண்டுபிடித்துவிடுவான், அவ்வளவுதான், அதை மகத்தானதாக எல்லோரும் பாராட்ட வேண்டம்! இவ்வளவு அதிகமாகப் படிப்பும் சிந்தனையும் இருந்தும் உலகம் என்பது இனிதான் வர வேண்டும். பண்பாடு- அது இதுவரை எங்கேயும் தோன்றவே இல்லை. 99.9 சதவீத மக்கள் இன்றும் ஏறக்குறைய காட்டுமிராண்டிகள் போலவே உள்ளார்கள். விட்டுக்கொடுத்தல், மதங்களிடையே சகிப்புத் தன்மை என்றெல்லாம் புத்தகங்களி படிக்கலாம். ஆனால் அதில் இம்மியளவுகூட உலகில் காணப்படவில்லை- இது என் அனுபவம்; நூற்றுக்குத் தொண்ணுற்று ஒன்பது பேர் அதுபற்றி நினைப்பது கூட இல்லை. நான் பார்த்த எல்லா நாடுகளிலும் மதத்தின் பெயரால் படுகொலைகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன;புதியனவற்றைக் கற்பதற்கும் கடுமையான தடைகள் முன்பு போலவே விதிக்கப்படுகின்றன.

மதங்களிடேயே ஏதோ சிறிதளவு சகிப்பத்தன்மையும் ஏதோ சிறிது அனுதாபமுமாது உலகில் காணப்படுகிறது என்றால், அது ஆரியர்களின்பூமியான இந்த இந்தியாவில் தான்; வேறு எங்கும் இல்லை. இங்கேதான் இந்தியர்கள் முகமதியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கோயில்களைக்கட்டித் தந்திருக்கிறார்கள்; வேறெங்கும் இல்லை. நீங்கள் வெளி நாடுகளுக்குச்சென்று அங்கு முகமதியர்களிடமோ மற்ற மதத்தினரிடமோ உங்களுக்கா ஒரு கோயிலைக் கட்டித்தரும்படி கேளுங்கள்; அவர்கள் எப்படி உதவி செய்கிறார்கள் என்பதை அப்போது காண்பீர்கள். உங்களுக்க