அங்கேரி

 • அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது.
 • உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.

தொடர்ந்து படிக்க….

அயர்லாந்து

 • அடிமைபோல் உழைத்திடு; அரசனைப்போல் வாழ்ந்திடு.
 • எவன் ஒருவன் புகழை வெறுக்கிறானோ,அவனுக்கு உண்மையான புகழ் தானாகவே வந்தடையும்.

தொடர்ந்து படிக்க….

அல்பேனியா

 • ஆயிரம் எதிரிகளைவிட ஒரு போலி நண்பனால்தான் அதிகத் தீமை.
 • ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும்.

தொடர்ந்து படிக்க….

அர்மீனியா

 • அச்சத்தைவிட மோசமானதொரு ஆலோசகர் இல்லை.
 • எதுவும் தெரியாதவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.

தொடர்ந்து படிக்க….

அரேபியா

 • பற்களுக்கிடையில் மனிதன் மறைந்துள்ளான்.
 • தண்டிப்பதற்கு அதிகாரம் பெற்றிருக்கும்போது மன்னிப்பதும் ஆகிய இரு வழிகளில் விவேகம் தோன்றுகிறது.

தொடர்ந்து படிக்க….

அமெரிக்கா

 • ஆலயத்திற்கு அருகில் இருப்பவன்தான் தொழுகைக்குக் கடைசியாக வருவான்.
 • உன்னிடம் வம்பளப்பவன் உன்னைப்ப்ற்றியும் வம்பு அளப்பான்.

தொடர்ந்து படிக்க….

ஆப்பிரிக்கா

 • ஓர் ஆண்டின் களையெடுப்பு ஏழாண்டுகளின் விதை.
 • அவர்கள் அவனைப் பிடிக்கும் நாள் வரை ஒவ்வொருவரும் நேர்மையானவரே!

தொடர்ந்து படிக்க….

இத்தாலி

 • சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்.
 • விரும்பியதைப் பெறமுடிவில்லையானால் பெற்றதையே விரும்புவோமாக.

தொடர்ந்து படிக்க….