3 வருடத்தில் 10,000 சார்ஜிங் ஸ்டேஷன்-களை இந்தியா முழுவதும் நிறுவத் திட்டமிட்டு உள்ளது

இதற்காக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியன் ஆயில் நிறுவனம் அடுத்த 3 வருடத்தில் 10,000 சார்ஜிங் ஸ்டேஷன்-களை இந்தியா முழுவதும் நிறுவத் திட்டமிட்டு உள்ளது. பெட்ரோல், டீசல், எல்பிஐ ஆகியவற்றில் வர்த்தகம் செய்து வந்த இந்தியன் ஆயில் இனி எலக்ட்ரிக் வாகனங்கள் வர்த்தகத்திலும் இறங்க உள்ளதாக இந்தியன் ஆயில் தலைவர் எஸ்எம் வைத்தியா தெரிவித்துள்ளார். … Continued

வீடு தேடி வரும் முதியோர்களுக்கான புதிய சேவை:தபால் துறை விரைவில் அறிமுகம்

சென்னை:சென்னையில் முதியோர் வசதிக்காக பணம் பெறுதல், கொடுத்தல் உள்ளிட்ட சேவைகளை, தபால் ஊழியர்கள் வீட்டிற்கே சென்று வழங்கும் புதிய திட்டத்தை, இந்திய தபால் துறை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

சீனாவின் இடத்தை நிரப்புக: மாண்டெக் சிங்

ஜவுளி, தோல் காலணிகள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்போவதில்லை என்று சீனா முடிவெடுத்திருப்பதால் அந்த இடத்தை இந்தியாவின் ஏற்றுமதியாளர்கள் நிரப்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா கூறியுள்ளார். டெல்லியில் ஏற்றுமதியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாண்டெக் சி்ங், “சீனா தனது 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதுவரை … Continued

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவால்தங்கத்தின் விலை மேலும் குறையுமா?

மும்பை:கடந்த ஒரு சில வாரங்களாக, உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச சந்தைகளிலும், மதிப்பு மிகு உலோகமான தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

சீனா, பாகிஸ்தான் நாடுகளின் போட்டியால்இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி பாதிப்பு

சென்னை:சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கடுமையான போட்டியால், இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து வருவதால்இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை உயரும்

பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -சர்வதேச கரன்சிகளுக்கு நிகரான டாலர் மதிப்பு உயர்ந்து வருவதையடுத்து, நடப்பாண்டு இந்தியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 60 லட்சத்திற்கும் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரிவுடன் துவங்கியது இந்தியபங்குசந்தை

மும்பை: அமெரிக்காவின் பொருளாதார நிலை, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார பிரச்னை காரணமாக உலகளவில் பங்கு வர்த்தகம் ஆட்டம் கண்டது.

12வது முறையாக வட்டி வீதங்களை உயர்த்தியது ரிசர்வ் வங்கி- வங்கிக் கடன்கள் காஸ்ட்லியாகும்

மும்பை: நாட்டின் பொதுப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தைத் தொடாமல் தவிர்க்க முக்கிய வட்டி வீதங்களை மீண்டும் உயர்த்தியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.