காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் – பாகம் IV

1. ஒற்றுமையே பலம்

தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். காந்தியடிகள் ஒரு சிறையிலிருந்து மற்றொரு சிறைக்கு மாற்றம் செய்யப்படுவதாக இருந்தார். போலக்கும் ஏனைய நண்பர்களும் பார்க ரயில் நிலையத்தில் அருடைய வருகையை எரித்ரபார்த்து நின்றுகொண்டிருந்தார்கள். இந்திய நாட்டைச் சேர்ந்த பல அன்பர்களும் அவரைத் தரிசிப்பதற்காக அங்கே கூடியிருந்தன. புகை வண்டி வந்து நின்றதும், உடனே உயரமான உடல் மெலிந்த மாநிறமுள்ள ஒரு மனிதர் விரைவாகக் கீழே இறங்கினார். அவருடைய கண்கள் அமைதியாகவும், தோற்றம் கம்பீரமாகவும் இருந்தது. அவருடைய தலையில் சிப்பாய்த் தொப்பி ஒன்று இருந்தது. நாளடைவில் அது காந்திக் குல்லாயாக மாறிற்று. உடம்பில், இலக்கங்கள் பொறிக்கப்பட்ட, பழுப்பிநிற முரட்டுத் துணியாலான தொளதொளப்பான அரைக்கைச் சட்டையும், முழங்கால் வரை கால்சட்டையும் – இவையே சிறைக்கைதி காந்தியடிகளுடைய சீருடையாகும். அவர், தம் துணிமணிகளும் வேறு பொருட்களூம் உள்ள ஒரு கோணிப்பையும், புத்தகங்கள் நிறைந்த ஒரு பெட்டியும் வைத்துக்கொண்டிருந்தார்.

ஏதோ ஒன்றைக் கேட்பதற்களாஅவர் வார்டர் பக்கம் திரும்பியபோது அனைவரும் அவரை வணங்கினார்கள். வார்டர் அவரிடம் பணிவுடனும் மரியாடையடனும் நடந்துகொண்டார். ஒருவேளை, அவர் ஒரு குறிப்பிட்த்தக்க சிறந்த மனிதர் என்பதை வார்டர் அறிந்திருந்தார் போலும்! சிறை வரைக்கும் நடந்து செல்ல்லாம் என்று வார்டர் அவரிடம் கூறினார். வண்டியில் ஏறிச் செல்ல விரும்பினால், கைதி தன் பையிலிருந்தே வண்டிச் சத்தம் கொடுக்க வேண்டியிருக்கும்.

காந்தியடிகள் உடனே தம் பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஏறக்குறைய ஒரு கல் தொலைவில் சிறை இருந்தது. கோணிப்பையை தம் தோளில் தொங்க விட்டுக் கொண்டு, பட்டப்பகலில், சிறைக் கைதி வேடத்தில் நடந்தார். ஏனோயோரும் அவருடன் சேர்ந்து பின்னால் நடக்கத் தொடங்கினார்களே தவிர அவரிடம் சென்று பேச எவருக்கும் துணிவு பிறக்கவில்லை. சிறிது நேரத்தில் அதே மௌனத்துடனும் அமைதியுடனும் அவர் ஜோஹன்னாஸ் பர்க் சிறையின் கொடிய இரும்புக் கதவுகளுக்குப் பின்னால் மறைந்தார்.

சிறைவாசலில் டச் மொழியில் கருத்து வாசகம் ஒன்று பொறிக்கப்படிடிருந்தது – ”ஒற்றுமையே பலம்”

தம்முடைய மௌனமொழி வாயிலாக இதே செய்தியைத்தான் காந்தியடிகள் அப்போது மக்களுக்குத் தெரிவத்தாற் போன்று இருந்தது. அவர், தன்னளவில் இறுதிவரை இக்கருத்தைப்பற்றிக் கொண்டிருந்தார்.!

2. இதுதான் நீ படித்த படிப்பா?

சேவாக்கிராமத்தில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் நோய்வாய்ப்பட்டால் காந்தியடிகளிடம் மருந்து கேட்க வருவது வழக்கம். ஒரு நாள் வயது முதிர்ந்த சலவைத்தொழிலாளியின் மனைவி ஒருத்தி வந்தாள். வயது 75 ஆகியிருக்கும். வாயாற் சொல்லமுடியாத அளவு அவளக்குச் சொறிசிரங்கு உண்டாகி இருந்தது. இருந்து இருந்து அழுவாள, மண் ஓட்டால் உடன்பு முழுவதையும் தேய்த்துக்கொள்வாள். ”இந்தச் சொறி என்னைச் சாப்பிட்டுவிடும் என்று அவள் காந்தியடிகளிடம் கூறினாள்.

காந்தியடிகளும் அவளுக்கு ஆறுதல் சொல்லி மருந்துவரை அழைத்துவர ஆளை அனுப்பினார். மருத்துவர் வந்ததும் அவரிடம், ‘இந்தக் கிழவிக்கு சொறி சிரங்கு இருக்கிறது. இதற்கென்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

மருத்துவர் பதிலுரைத்தார், ”தாங்கள் எவ்வாறு சொல்கிறீர்களோ அவ்வாறே செய்கிறேன்”

காந்தியடிகள் கூறினார்: ”எலுமிச்ச இலையை அரைத்து இவளுக்கு ஊட்டு. குடிப்பதற்குமோர் கொடு.”

மருத்துவர் எலுமிச்சை இலையை அரைத்து ஒரு லட்டுபோல் உருட்டி அந்தக் கிழவியிடம் கொடுத்து, ”இதைச் சாப்பிட்டு மோர் குடி” என்றார்.

இலையை எந்த அளவு சாப்பிடவேண்டும் என்ற எல்லா விபரமும் அவளுக்குச் சொல்லப்பட்டிருந்தது. அவள் சென்றுவிட்டாள். அதற்கடுத்த நாள் காந்தியடிகள் மருத்துவரைக் கூப்பிட்டுக்கேட்டார், நோயாளிக்கு எவ்வளவு மோர் குடிக்க வைத்தாய்.?”

மருத்துவருக்கு அது பற்றி ஒன்றும் தெரியாதிருந்தது. அவர் நேராக்க்கிராமத்தை நோக்கி ஓடினார். கிழவியின் வீட்டை விசாரித்துக் கொண்டு, அவளிடம் கேட்டார்: ”நீ எவ்வளவு மோர் குடித்தாய்?”

கிழவி அழுதுகொண்டே சொன்னாள், ”என்னிடம் மோர் எங்கே இருக்கிறது, குடிப்பதற்கு!”

மருத்துவர் திரும்பிவந்து அப்படியே விஷயத்தைக் காந்தியடிகளிடம் கூறினார். கேட்டதும் உடனே அவர் மிக்க கவலையுற்றார். ”அமெரிகாவிலிருந்தும், ஜெர்மனியிலிருந்தும் நீ இதைத்தான் கற்றுக்கொண்டு வந்தாயா? அவளுக்கு மோரைக் குடிக்கவை என்று நான் உனக்குச் சொல்லியிருந்தேன். கிராமத்திலிருந்து வரவழைத்து அவளுக்கமோரைக் குடிக்க வைக்கவேண்டியது உன் கடமையாகும். இப்பொழுதாவது நீ அடைச் செய்திருந்தால் சரி; ஆனால் அவளை அங்கே அழவிட்டு இதையெல்லாம் சொல்ல இங்கே வந்திருக்கிறாய். இது தான் நீ படித்த படிப்பா?”

3. அந்தராத்மாவின் ஆணையே உண்மையான சக்கி

ஒரு தடவை விடுதலை நாள் கொண்டாடும்போது, கனு காந்தி நடத்திய பயிற்சி முகாமைகச் சேர்ந்த சுமார் 250 மாணவர்களும், சேவாக் கிராமத்திலுள்ள ஏனைய நிர்மாண ஸ்தாபனங்களின் உறுப்பினர்களும் சேர்ந்து ஊர்த் துப்புரவு செய்யத் தீர்மானித்தார்கள்.

அனைவரும் கூடை, வாளி, துடைப்பம் முதலியவைகளை எடுத்துக்கொண்டு இரண்டு இரண்டு பேராக வரிசையில் நின்று வேலைக்குப்புறப்பட்டார்கள். கொஞ்ண தூரம் சென்றிருப்பார்கள். அதற்குள் போலீஸ் வந்து அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். ”நீங்கள் வரிசையை விட்டு அகலுங்கள், இல்லை யெனில் முன்னே செல்ல முடியாது.

அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்து அனைவரும் அப்படியே கீழே அமர்ந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் சத்தியாக்கிரகிகள். போலீஸின் முற்றகையைத் தகர்ப்பதை அர்களை சரியெனக் கருதவில்லை.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. இருப்பினும் அவர்கள் அவ்வாறு அமர்ந்த வண்ணமே இருந்தார்கள். கடைசியில் அவர்களூடைய இந்த உறுதிக்கு முன்னால் போலீஸ் பணிந்தது. பின்னர், அவர்கள் வரிசையில் நின்று வேலைக்குப் புறப்பட்டார்கள்.

அன்று மாலை- வழுபாட்டிற்குப் பின் காந்தியடிகள் இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு அஹிம்சையின் ஆற்றலை விளக்கினார்: ”நீங்கள் கோபத்திற்காளாகி போலீஸின் முற்றகையைத்தகர்க்க முற்பட்டிருந்தால், ஒருவேளை போலீஸ் சுடவேண்டி ஏற்பட்டிருக்கலாம். ஆனால் உங்களுடையை கௌரவமான மரியாதையுடன் கூடிய நடவடிகையையக் கண்டு அபோலீஸின் ஆயுதங்கள் பயனற்றுப் போயின. நீங்களோர போலீஸ் சுடவதற்கு அவர்களைத் தூண்டவுமில்லை. நீங்களும் நிலை பிறழாமல் இருந்தீர்கள். அந்தராத்த்மாவின் ஆணையே உங்களுடைய உண்மையான சக்தியாகும். இதனைத்தான் இறைவன் என்றும் சத்தியம் என்றும் நான் கூறுகிறேன்ந இந்தச் சின்னஞ்சிறு நிகழ்ச்சியே நம்முடைய அனைத்து விடுதலைப் போராட்டங்களின் உள்ளுரைத் தன்மையாகும்.”

4. கொடுத்துப் பெறவிரும்புவது தானமல்ல

ஒருமுறை காந்தியடிகளிடம் ஒரு வணிகர் வந்தார். ணிறிது நேரம் ஒதோ பேசிக்கொண்டிருந்தார். பின்னர் தடீரென்று குறைபட்டுக்கொண்ட குரலில், பாபு பார்த்தீகளா, இந்த உலகம் எவ்வளவு நாணயமற்றுப் போய்விட்டது. ஐம்பதினாயிரும் ரூபாய் செலவழித்து நான் ஒரு தரும சத்திரத்தைக் கட்டுவித்தேன். இப்போது சத்திரம் கட்டி முடிந்த பின்னர், நானே அதன் செயற்குழுவிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறேன். அது கட்டப்படுவதற்கு முன் எவருமே வந்தார்களில்லை. கட்டி முடிந்த பின்னர் அதிகார்ம செலுத்த ஐம்பது பேர் கூடி விட்டார்கள்”.

வணிகர் பேசியதைக் கேட்டு காந்தியடிகள் சற்று சிந்தித்த வண்ணமிருந்தார். சிறிது நேரம் கழித்து, ”நீங்கள் இவ்வளவு சஞ்சலமடைவதற்குக் காரணம்’ ‘தானம்” என்ற சொல்லின் பொருளைச் சரியாக உணராத்துதான். எந்தப் பொருளையாவது கொடுத்து மாற்றாக ஏதேனும் பெற ஆசைப்படுவது தானமல்ல, அது வியாபாரமாகும். நீங்கள் வியாபாரம நடத்தி விட்ட பிறகு அதனால் ஏற்படக்கூடிய லாப நஷ்டத்திற்கு ஆயத்தமாயிருக்கவேண்டும். லாபமும் ஏற்படலாம், நஷ்டமும் உண்டாகலாம்” என்றார்.

இதைக் கேட்ட வணிகர் வாய் அடங்கிப்போனார்.

5. இயற்கையின் வழியே போகவிடுங்கள்

இயற்கை மருத்துவ மாநாட்டை நடத்தும் நணபர்கள் ஒரு முறை காந்தியடிகளைச சந்தித்து, ”நாங்கள் இயற்கை மருத்துவ முறையைப் பற்றித் தங்களுடம் பேச வந்திருக்கிறோம். இம்மாநாட்டின் தலைவர் பொறுப்பைத் தாங்கள் ஏற்றருள மாட்டீர்களா?” என்று கேட்டார்கள்.

சிறிது நேரம் காந்தியடிகள் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். பின்னர் சட்டென்று சற்று கடுமையான குரலில் சொன்னார். ”இயற்கை விதிகளைப் பின்பற்றுவதையே முக்கியமென்று நீங்கள் கருதுகிறீர்களல்லவா அவ்வாறானால் தயவு செய்து என்னை இயற்கையின் வழியே போகவிடுங்கள். காங்கிரசின் இலுவலாக நான் இங்கே வந்துள்ளேன், உங்களுடைய இயற்கை வைத்திய மாநாட்டிற்காக அல்ல. எனவே அதுபற்றி உங்களுடன் பேசுவது இயற்கையின் சட்டத்தை மீறுவதாகும். என்னுடைய இந்த அறைக்குள் உங்களை நுழையவிடாமல், வெளியிலிருந்தபடியே உங்களை அனுப்பியிருப்பேன். ஆனாலும் அவ்வாறு செய்வது பண்பாட்டிற்கு உகந்ததல்ல; ஆன் முதலில் சட்ட ஒழுங்கைச் சற்று விட்டுக்கொடுத்தேன். எனவே இது பற்றி நீங்கள் என்னுடன் பேச வேண்டுமானால் ஆசிரமத்திற்கு வாருங்கள்.”

6. எனக்கு யாரும் சம்பளம் கொடுப்பதில்லை

விடுதலை கிடைப்பதற்குச் சில நாட்கள் முன்னதாக நாட்டின் பல பகுதிகளில் பெரிய அளவில் வகுப்புக் கலவரங்கள் நடந்தன. அந்நாட்களில் காந்தியடிகள் பீஹார் மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார். இது பாட்னாவில் நடந்த நிகழ்ச்சி. அன்று கடுமையான வெயில். எனவே காந்தியடிகள் குளிர்ந்த நீரால் ஒத்தடம் செய்து கொண்டார். டாக்டர் சையத் மஹமூத் அவர்களோ பனிக்கட்டி வாங்கிவரச் சொல்லியிருந்தார். ஆனால் வீண் செலவு செய்யக் காந்தியடிகள் மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக மண்குடத்தின் மீது ஈரத்துணியைப் போட்டு வைத்து அதைத் தலைக்கு கட்டிக்கொண்டார். அரை மணி நேரத்திற்கொருமுறை மண்குடத்தின் மீதிருந்த இரண்டு துணிகளை ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி மாற்றி கட்டிக்கொண்டார்.

டாக்டர் அவர்கள் இதைப்பற்றி மனு பஹனிடம் கூறினார். ”பாபுஜி உங்களுடைய வேலையை அதிகப்படுத்தி விட்டார். நாள்தோற்மு ஒருரூபாய்க்குப் பனிக்கட்டி வாங்கிக்கொண்டால் நாள் முழுவதற்கும் சரியாக இருக்கும். அத்துடம் பாபுஜிக்கும் அதிகக் குளிர்ச்சிக் கிடைக்கும்.

டாக்டர்கள் அவர்கள் இந்த விஷயத்தை காந்தியடிகளிடம் கூறிபோது அவர் கலகலவென்று சிரித்தார். ”நீங்களோ வருமானம் செய்கிறீர்கள். உங்களுடைய மைந்தர்களும் வருமானம் செய்கிறார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்குஓ அல்லது எனக்கோ யாரும் சம்பளம் கொடுப்பதில்லை. இப்படியிருக்கையில் இவள் பனிக்கட்டியைப் பயன்படுத்துமளவுக்உக நான் அவ்வளவு நவநாகீர மானவனும் அல்ல. ஈரத் துணியைப் போட்டுக்கொண்டாலே அது பனிக்கட்டியின் வேலையைச் செய்துவிடுகிறது. பனக்கட்டித்தண்ணீரைக் குடிக்கக்கூட முடியாது. அப்படிக் குடித்தாலும், இந்த அளவில் சளி பிடிக்கும்’

7. நாட்டில் பசிப் பிணி இருக்கையில் நீங்கள் இனிப்பு வழங்கவீர்களா!

டில்லியிலுள்ள பங்கி காலனியில் நடந்த நிகழ்ச்சி, நாடு முழுமையாக விடுதலை பெற்றிருக்காவிட்டாலும், மத்தியில் இடைகால தேசிய அரசு ஏற்பட்டிருந்தது. இதற்கிடையில் செப்டம்பர் 22 -ம் நாள் வந்தது. நாட்டுப் பஞ்சாங்கத்தின்படி அந்த நாளே காந்தியடிகளின் பிறந்த நாளும் ஆகும்.

தேசிய அரசு ஏற்பட்ட பிறகு, இதுவே அவருடைய முதல் பிறந்த நாள். எனவே காலனியில் குடியிருந்தவர்கள் இந்த நாளைக் கொண்டாட மிகுந்த ஆவலாயிருந்தனர். நூற்பு வகுப்பு ஏற்கெனவே நடைப்பெற்றுக்கொண்டிருந்தது. அத்துடன் ஒரு கண்காட்சியும் ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் மிகப்பெரிய அளவில் பொதுநூற்புக்கு ஏற்பாடாகியிருந்தது. காந்தியடிகளும் ஏனைய தலைவர்களும் அதில் கலந்து கொள்வதாக இருந்தனர். நாள் முழுவதற்கான நிகழ்ச்சிகள், பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களின் கொடி வணக்கத்துடன் தொடங்கவிருந்தது.

இதற்குப் பின்னர், தொண்டர்களுக்கும் பங்கி காலனியைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் சில பழங்களைப்பிரசாதமாக வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. அதன்படியே எல்லாப் பொருட்களும் கொண்டு வரப்பட்டன. அன்றைய நிகழ்ச்சி நிரல்முழுவதும் காந்திடிகளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இந்தப் பிரசாதம் வழங்கும் செய்தி அவ்வளவு முக்கியமான தல்ல என்று கருதி யாரும் அவருக்குச் சொல்லவில்லை.

தம் பிறந்த நாளன்று வழக்கம்போல் காந்தியடிகள் அதிகால் எஉந்த உலாவுவதற்குப் புறப்பட்டார். அப்போது தான் யாரோ ஒருவர் வந்து அவரிடம், ”இன்று கொடி வணக்கத்திற்குப் பிறகு ராஜேந்திர பாபு தங்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு இனிப்பு வழங்குவார்” என்று கூறினார்.

இதைக் கேட்டு காந்தியடிகள் மிகவும் வருத்த மடைந்தார். இதற்கு முன்னர் என்றுமே அவர் இவ்வளவு கவலைப்பட்டதில்லை. கிருஷ்ண நாயரும் பிரிஜ்கிருஷ்ண சாந்திவாலாவும் அவருடன் இருந்தார்கள் மிக்க கோபத்துடன் அவர்களிடம் காந்தியடிகள் கூறியதாவது, ”நாட்டில் பஞ்சம் இருக்கிறது. பசிப்பிணியால் மக்கள் நிலைகுலைந்திருக்கின்றனர். உண்ணுவதற்கத் தனியம் கிடைப்பதிலலை. இப்படியிருக்க நீங்கள் இனிப்பு வழங்குவீர்களா! இத்தனைகாலம் என்னுடனிருந்து நீங்கள் கற்றது இதுதானா? என் நெஞ்சு எரிந்து கொண்டிருக்கிறுது. உங்களுடைய இந்தச் செய்கை அதை மேலும் பற்றி எரியச் செய்யும். நான் என் செய்வது என்று நினைத்துப் பார்க்க வேண்டும்”

மறுபடியும் துயரார்ந்த குரலில் பேசினார், ”இப்படி 125 ஆண்டுகள் நான் உயிர்வாழ்வது எங்ஙனம்? என்னில் பூரண அனாசக்தி இல்லை. நான் இன்னும் முழுமையாகப் பற்ற்றுக்கவில்லை. ஆகாயால்தான் இவ்வளவு உணர்ச்சி வசப்படுகிறேன். இல்லையேல், இந்த நிகழ்ச்சியைப் பற்றி நான் இவ்வளவு கவலை கொள்வானேன்? நீங்களோ ஹரிஜனங்களுக்கும் தொண்டு செய்வதில்லை, தொண்டர்களுக்கும் சேவை செய்வதில்லை. நீங்கள் இந்த அற்பமான பொருளைக் கொடுப்பதுற்கு ஹரிஜனங்கள் அப்படி பிச்சைக்காரர்களல்லர். இது அஹிம்சையும் ஆகாது. என்னுடைய பிறந்த நாளை நீங்கள் கெடுத்துவிட்டீர்கள்.”

8. இராமனே என்னுடைய காவலன்

அந்தமுறை காந்தியடிகள் டில்லியிலுள்ள பிர்லா மாளிகையில் ஏறக்குறைய ஐந்து மாதங்கள் தங்கினார். வழக்கப்படி அவருடன் ஒரு பெரிய கூட்டமே வந்தது. புதுப்புது அன்பரகள் அங்கு வருவதுமாகவும் பழையவர்கள் போவதுமாகவும் இருந்தனர். ஒரு பெரும் கூட்டம் என்றே சொல்லலாம். மாளிகை முழுவதுமே அவரிடம் ஒப்படைகப்பட்டிருந்தது. ஏன், பிர்லாஜியும் அவருடன் இருந்தவர்களுமே விரும்பாத அநேக விருந்தினர் காந்தியடிகளிடம் வந்தார்கள். பிர்லா மாளிகையில் குண்டு விழுந்தபிறகு, அவர் பெரிய கும்பல – கூட்டங்களில் நுழைந்துபோவதைப் பலர் ஒப்புக்கொள்ளவில்லை. சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் அவருக்காக மிலிடரிபோலீஸாரையும், ஒற்றர்களையும், பிர்லா மாளிகளையில் ஆங்காங்கே காவல் செய்ய நியமித்திருந்தார். அவர்கள், கூட்டத்தில் அங்கு எங்கும் சுற்றிக்கொண்டிருப்பவர்கள். இருப்பினும் இவற்றாலெல்லாம் காந்தியடிகளுக்குப் பாதுகாப்பு கிடைத்துவிடாது என்பது எல்லோருக்கும் தெரியும். அங்கு வருபவர்கள் அனைவரையும் சோதிக்கவேண்டுமென்று போலீஸ் நினைத்தது. ஆனால்காந்தியடிகள் அதை நிறுத்திவிட்டார். எந்தக் கேள்விகுகம் அவரிடம் ஒரே விடைதன், ”இராமனே என்னுடைய காவலன்”.

போலீஸின் இந்தக் கெடுபிடி பிர்லாவுக்கே பிடிக்கவில்லை. அவர் காந்தியடிகளிடம், ”என்ன, வழிப்பாட்டைக்கூட நாம் துப்பாக்கியின் நிழலில் நடத்துவுத் தங்களுக்கு முறையற்றதாகத் தோன்றவில்லையா?? தங்களுடைய உயிர் மிகவும் விலையுயர்ந்ததாகும். தங்களுடைய புகழ், தங்களுடைய கீர்த்தி. எனவே, வாழ்நாள் முழுவதும் இதை வெறுத்து வந்த தாங்கள், போலீஸின் இம்மாதிரியான அளவுக்கு மீறிய அதிகமான கட்டுப்பாட்டை விரும்பிகிறீர்களா?” என்று கேட்டார்.

பிர்லாஜியின் கருத்துக்கு இசைவு தெரிவித்த காந்தியடிகள், ”இதைப்பற்றி நீங்கள் வல்லபாயுடன் பேசுங்கள். அவர்தான் இவ்வளவு ஏற்பாட்டையும் செய்தவர் இவ்வகையான் ஏற்பாட்டை நான் வெறுத்து வந்தவன். ஆனால், இவை யனைத்தையும் நான், என்னுடைய பாதுகாப்பிற்காக அல்ல, அரசாங்கத்தின் புகழ் பாதுக்கப்படுவதற்காக, பொறுத்துகொள்ள வேண்டியிருக்கிறது.” என்று கூறினார்.

9. அப்படியானால் இன்னும் பத்து ரூபாய் கொடுக்க வேண்டும்

அன்று காந்தியடிகள் மாலை வழிபாட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அன்பர் அவரிடம் வந்தார். ”நான் தமிழ் எழுத்தில் தங்களுடைய கையொப்பம் பெற விரும்புகிறேன்” என்று வந்தவர் காந்தியடிகளிடம் மிக்க பணிவான குரலில் வேண்டினார்.

”நான் முயன்று பார்க்கிறேன். பிழை ஏதுமிருந்தால் திருத்தம் சொல்லிவிடுங்கள். ஆனால், இதற்காக நீங்கள் இருமடங்கு விலை கொடுக்க வேண்டும்.” என்று காந்தியடிகள் பதிலுரைத்தார்.

தமிழ் அன்பர் அவருக்குப் பத்துரூபாய் கொடுக்க ஒப்புக்கொண்டார். காந்தியடிகள் மெதுவாக நினைவு படுத்திக்கொண்டு எழுதலானார். கடைசஞியில், அவர்தூய தமிழில் ‘மோ.க. காந்தி’ என்று எழுதுவதில் வெற்றி கண்டார். ”பாருங்களி , சரியாக எழுதியிருக்கிறேனா?” என்று கேட்டார்.

தமிழ் அன்பர், ”தங்களுக்குச் சரியாகத் தமிழ் எழுத வராது என்று சொன்னீர்கள், ஆனால் தாங்கள் முற்றிலும் சரியாக எழுயிருக்கிறீர்களே” என்றார்.

இதைக்கேட்ட காந்தியடிகள், ”நான் முற்றிலும் சரியாக எழுதியிருக்கிறேனா, அப்படியென்றால் நீங்கள் இன்னும் பத்து ரூபாய் அதிகமாக எனக்க்து கொடுக்க வேண்டும்” என்றார்.

ஆனால் அந்த அன்பரிடம் அவ்வளவு பணம் அச்சமயம் இல்லை. அவருடைய கஷ்டத்தைப் புரிந்துகொண்டு ”காந்தியடிகள், ”நாளைவரை நான் இங்குதானிருப்பேன், பின்னால் வந்து கொடுக்கலாம். உங்களை நம்புகினேன்” என்று கூறினார்.
காந்தியடிகளிடம் ஈர்க்கப்பட்டிருந்த அந்தத் தமிழ் அன்பர் உடனே தன் விரலில் மாட்டியிருந்த மோதிரத்தைக் கழற்றி, காந்தியடிகளை வணங்கி, அவருடைய கரங்களில் வைத்துவிட்டார்.

10. பழைய துணியில் ஒட்டுப்போட்டுக் கொள்வேன்

குளிர் காலத்தில் கம்பளித் துணியைத் தலையில் கட்டிக்கொள்வது காந்தியடிகளின் வழக்கம். நாளடைவில் அது பழுதாகிவிட்டது. இதைக் கண்டு மனு அவருக்குப்புதிய கம்பளித் துணி ஒன்றைக் கொடுத்தாள்.

காந்தியடிகள் அவளிடம் கூறினார், ”நீயோ ஒரு காசும் சம்பாதிப்பதில்லை, நானும் சம்பாதிப்பதில்லை. அல்லது செலவுகளுக்காக பணம் அனுப்புவதற்கு உன்னுடைய தந்தையாரைப் போன்று, எனக்குத் தந்தையார் இருக்கிறாரா? நானோ பரம ஏழை. இவ்வளை பழைய துணியை எறிய என்னால் முடியாது. அந்தப் பழைய துணியை என்னிடம் கொண்டு வா. அதைத் தைத்து ஒட்டுப்போட்டுக் கொள்வேன்.”

மனுவுக்கு நன்றாய்த் தெரியும். காந்தியடிகள் சொன்ன படியே செய்வாரென்று. அவள் ஊசியும் நூலையும் கொண்டு வந்தாள். உடனே காந்தியடிகள் அதைத் தைப்பதற்கு உட்கார்ந்து கொண்டார். இரவு 11.30 மணி அடித்ததும், ”இப்பொழுது நான் தைக்கிறேன்.’ய என்று மனு கூறினாள்.

அதற்கு காந்தியடிகள், ” நீ பார்த்துகொண்டிருந்தாலே போதுர். எனக்கு இந்த வேலை செய்ய வருகிறதா இல்லையாவென்று கவனித்துக்கொண்டிரு.” என்றார்.

அவர் வேலையை முடித்துவிட்டபிறகே எழுந்தார். மனு பார்த்தாள் தேர்ந்த தையல்காரனோ அல்லது திறமையான பெண்ணோ செய்தாற் போன்று அவ்வளவு நேர்த்தியாகத் தையல் போடப்பட்டிருந்தது. ஓரம் வரைக்கும் ஒரே நேராகத் தைக்கப்பட்டிருந்தது.

11. அவளிருந்ததால்தானே நான் ‘மகாத்மா’ வானேன்!

அந்நாட்களில் காந்தியடிகள் டில்லியிலுள்ள பங்கி காலனியில் தங்கியிருந்தார். அப்போது ஒரு நாள் 80 வயதான ஒரு ‘மேர் பாபாவும்’வும், அவருடைய மகனும் மருமகளும் அவரைச் சந்திப்பதற்காக அங்கே வந்தனர். அவர்களைப் பார்த்ததும் கத்தியவாரைச் சேர்ந்தவர்கள் என்று மனு கண்டு கொண்டாள். இருப்பினும், ”பாபா, நீங்கள் எந்த ஊர்?” என்று மனு விசாரித்தாள்.

மேர் பாபா பதில் சொன்னார், ”மகளே, நாம் வெகு தூரத்தில் இருப்பவர்கள். போர்பந்தர் – சுதாமாபுரி இருக்கிறதல்லவா அங்கே வசிப்பவர்கள், நாம் யாத்திரைக்குப் புறப்பட்டோம். எங்களுடைய திவானின் மகன் மோகன்பாய் பெரிய ‘மாத்மா’ (மகாத்மா) ஆகிவிட்டானென்றும், அவன் இந்தியாவக்குச் ‘சுவராஜ்’யம்(சுயராஜ்யம்) வாங்கிக் கொடுத்திருக்கிறான் என்றும் கேள்விப்பட்டோம். குழந்தையாய இருக்கும்போது மோகன்பாய் என்னுடன் விளையாடியிருக்கிறான்.. இப்போது அவன் எப்படி என்னை அறிந்து கொள்ளப்போகிறான்!. ஆனால் கோகுலம் – மதுரா வரைக்கும் வந்து விட்டோம். சரி, சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்தேன். எனக்கும் வயதாகிவிட்டது. மூப்டைந்துவிட்டேன் மகளே! யார் கண்டார்கள், மறுமுறை இப்பக்கம் வரமுடியுமோ, இல்லையோ. அவன் டில்லியில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டு இங்கு வந்திருக்கிறோம். உண்மையாகச் சொல்கிறேன், மோகன்பாயின் தகப்பனாரும் மிக உயர்ந்த மனிதராக இருந்தார்.”

”பாபா உட்காருங்கள். சிறிது நேரம் கழித்து காந்திஜி இப்பக்கம் வருவார். அப்போது நீங்கள் அவரைத் தரிசிக்கலாம்” என்று மனு கூறினாள்.

சில மணித்துளிகளில் காந்தியடிகள் வந்துகொண்டிருப்பதைக்கணிட மனு பெரியவரிடம் சொன்னாள், பாபா, உங்களுடைய குழந்தைப் பருவ நண்பர் மோகன்ராய் வந்து கொண்டிருக்கிறார்.”

பாபா தம்முடைய தொப்பியைத் தலையில் அணிந்து கொண்டார். தாங்குவதற்காகாக் கையில் தடி எடுத்துகொ கொண்டார். இதற்குள் காந்தியடிகளிடம் சென்று எல்லாவற்றையும் மனு கூறினார். கேட்டுக்கொண்டே காந்தியடிகள் மேர்பாபாவிடம் வந்தார். ”அடே, மோகன்பாய் உன் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டுக் கொள்கிறேன்.” என்று சொல்லிக் கொண்டே பாபா குனிந்து கந்தியடிகளின் கால்களை வணங்கினார். கலகலவென்று சிரித்துக்கொண்டே காந்தியடிகள் அவரை மேலே தூக்கி எழுப்பி மார்புடன் தழுவிக் கொண்டார். இக்காட்சியைக் கண்ட அங்கிருந்தவர்கள் அனைவரும் மெய் மறந்தார்கள். தான் எவ்வாறு மோகன்பாயை மறக்கவில்லையோ அதைப்போன்றே மோகன்பாயும், தன்னை மறக்கவில்லையென்பதை பாபா புரிந்துகொண்டார். அவர் சொன்னார். ‘மோகன்பாய், நீ மிகப்பெரியமனிதனாகிவிட்டாய் எங்கே என்னை அறிந்துகொள்ளப்போகிறாய் என்று எண்ணியிருந்தேன். ஆனா நீயோ என்னைக் கண்டு கொண்டாய். சிறு பிள்ளைகளாக இருந்தபோது நாம் ஒன்றாக விளையாடுவோமல்லவா? நான்அம்மாவின் வேலைகளில் உதவுவேன்; நாள் தோறும் நான் கேட்காமலேயே அன்புடன் அம்மா எனக்கு ரொட்டி கொடுத்துவந்தாள். நாம் அனைவரும் இரவு இராமர் கோவிலுக்குச் செல்லோமல்லவா? மோகன்பாய், நான் எப்படி இருந்தேனோ அப்படியே இருக்கிறேன். ஆனால் நீயோ இந்த நாட்டின் ‘மாத்மா’ (மகாத்மா) ஆகிவிட்டாய். எதற்கும் அதிர்ஷடம் வேண்டும். கபா பாபாவும் (காந்தியடிகளின் தந்தையார்) எவ்வளவு நல்ல உள்ளம் படைதவராயிருந்தார்!.”

போர்பந்தர் பாஷையில் ஒருமையிலேயே அதிகம் பேசுவார்கள். இருப்பினும் ஒருமையில் எத்துணை அன்பு த்தும்பியிருந்தது. காந்தியடிகள்குத் தம் பெற்றோருடைய நினைவு ஏற்பட்டது. குழந்தை- நண்பர் இருவரும் சிறிது நேரம் வரை பழைய விஷயங்களை நினைவு படுத்திக் கொண்டிருந்தார்கள். கடைசியில் மேர்பாபா விசாரித்தார். ”மோகன்பாய், என் அண்ணியும் இங்குதானே இருக்கிறாள. அவளடைய கால்களையும் தொட்டு வணங்கிக் கொள்கிறேன். இத்துடன் என்னுடைய (ஜாத்ரா) யாத்திரை முடிந்தது. நான் கட்டாயம் ‘மாத்மா’ (மகாத்மா’)விடம் செல்லவேண்டுமென்று இச்சிறுவனிடம் சொன்னேன். ஆனால் இவனோ என்னை மோகன்பாயிடம் அழைத்து வந்தான்”.

பாபா சொன்ன அண்ணி என்ற சொல் பாபுவைக் கண நேரத்திற்கு திடுக்கிடச் செய்த்து. ஆனாலுமு உடனே கஸ்தூரிபாவைப் பற்றி விசாரிக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார். ‘சகோதரா, அள் சிறையிலிருந்தபோதே ஆண்டவனில் சந்நிதானத்தை அடைந்துவிட்டாள். அவள் இருந்ததால் தானே நான் ”மாத்மா” வானேன்!” என்றார்.

இச்சொற்களை காந்தியடிகள் மேர்பாபாவின் பாணியில் பேச முயன்றார். ஆனால் எற்றி பெறவில்லை. இதைக்கண்டு அங்கிருந்த அனைவரும் உரக்கச் சிரித்தார்கள். இருப்பினும் காந்தியடிகள் மேர்பாபாவுடன் அவருடைய குடும்பத்து க்ஷேமலாபங்களைப் பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தார். அவரிடம்பேசிக்கொண்ணிருக்க நேரமில்லை, எனவே பாபாவிடம் அவருடைய பேத்தி எல்லாச் சமாச்சாரங்களைப்பற்றியும் கூறுவாள். நல்லது இப்போது நான் சென்று வருகிறேன்”

இவ்வாறு கூறி காந்தியடிக் உள்ளே சென்று விட்டார். மேர்பாபா திரும்பும்போது தன் மருமகள் காதில் அணிந்திருந்த ஜிமிக்கு (ஆபரணம்) எட்க்கச் செய்து, அவர் தூரத்திலிருந்தபடியே காந்தியடிகளின் பாதங்களில் வைத்தார். காந்தியடிகள் உட்கார்ந்திருந்த மெத்தையைக் கீழே விழுந்து தொட்டு வணங்கிய பின் புறப்பட்டர்.

12. நீங்கள் கழுதையைச் சமாளியுங்கள்

திரு. ராஜ்மல்ஜி ல்ல்வானி கோ-சேவையில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். திரு. ரிஷபதாஸ் ரங்ககா என்பவர் கோ-சேவை சம்பந்தமாக்ப பேசுவதற்காக ஒருமுறை அவரைக் காந்தியடிகளிடம் அழைத்துச் சென்றார். பேச்சு வார்த்தைக்குப் பின்னர் காந்தியடிகளிடம் ‘அவர், ”பாபுஜி, கோ-சேவா சங்கத்தின் மூலமாகப் பசு பரிபாலனப் பணிக்ககுத்த தாங்கள் ஊக்கம் தந்திருக்கிறீர்கள். அது மிகவும் நல்லதே. ஆனால் மிகுந்த கொடுமைக்கு ஆளாகும் இன்னொரு பிராணி இருக்கிறது. அதுதான் கழுதை. நாள் முழுவதும் தீனி ஒன்றும் போடாமல் அதை அப்படியே விரட்டி விடுகிறார்கள். கழுதையின் சொந்தக்கார்ர் மட்டுமே அதற்குக் கொடுமை செய்கிறார் என்பதல்ல, அவற்றுடன் நேரடித் தொடர்பு இல்லாதவர்களும் பல வகையில் தீங்கிழைக்கிறார்கள். யாரையாவது முட்டாளாக்க நினைத்தால் அதன் பெயரைச் சொல்கிறார்கள். குறைவாகப் பெற்று நிறையத் தொண்டு செய்வதானது பாபத்தைப் போலும். எனவே பாபுஜி பசுக்களைப்போல் கழுதைகளின் சேவைக்காகவும் ஏதாவது செய்யவேண்டும்.” என்று கூறினார்.

காந்தியடிகள் அவரிடம் சொன்னார், ”நீங்கள் கூறியபடி கழுதைகள் மிகவும் தீங்கிழைக்கப்படுவதை நானும் கண்டிருக்கிறேன், அதற்குச் சேவை செய்ய வேண்டியது அவசியமே. ஒரு மனிதரே எல்லாக் காரியங்களையும் செய்வதென்பதும் இயலாது. ஆந்ன பசுவைச் சமாளிக்கிறேன், நீங்கள் கழுதையைச் சமாளியுங்கள். அத்துடன் ”கர்தப சேவா சங்கம்” ஒன்றை ஏற்படுத்தி இப்பணியைச் செய்யுங்கள்”

13. என் ஹாஸ்யத்திலும் பொருள் பொதிந்திருக்கிறது.

நவகாளி யாத்திரையின் போதும் என்றும்போல் காந்தியடிகள் அதிகாலை இரண்டரை மணிக்கு துயிலெழுவது வழக்கம். அவ்வாறே கண் விழித்தார். வழிபாடு முடிந்தது. ஆனாலும் அன்று வெந்நீர் கிடைக்கச் சற்று தாமதமாயிற்று. இரவே விறகை உள்ளே எடுத்து வைக்க மறந்துவிட்டிருந்தாள் மனு. எனவே பனிபெய்து அது ஈரமாயிருந்தது. விரைவில் தீப்பற்ற வேண்டுமென்பதற்காக மனு தன் போர்வையின் ஓரத்தை சிறிது கிழித்து அதை மண்ணெண்ணெயில் நனைத்தாள். தற்செயலாகக் காந்தியடிகள் அதைப்பார்த்துவிட்டார். அவள் தீக்குச்சியைத் தேய்த்தாளோ இல்லையோ உடனே, ‘எங்கே அந்தத் துணியைக் கொஞ்சம் காண்பி” என்றார் அவர்.

மனு அத்துண்டை காந்தியடிகளிடம் எடுத்துச் சென்றாள். அதைப்பார்த்து அவர் சொன்னார். ”இது நாடா செய்வதற்குப் பொருத்தமாகும். இதைக் கழுவிச் சுத்தம் செய்து உலர்த்து. எண்ணெய் மட்டுமே வீணாகும், பரவாயில்லை. ஆனால் நாடாவின் மதிப்பு அதைவிட அதிகமாகும். நான் எத்துணைப் பேராசைக்காரன் என்றதை நீ அறிவாய்! பனியா அலவா, வெந்நீர் சற்றுத் தாமதமாக் கிடைத்தால் என்னாகிவிடும்.!”

”இருந்தாலும் இப்படிக் கஞ்சனாக இருப்பானேனே?” என்றாள் மனு.

”ஆமாம், நீயோ பெரிய வள்ளலுடைய மகள்! எனக்கென்ன தகப்பனாரா இருக்கிறார், பணம் அனுப்பி வைக்க!” இவ்வாறு அவர் வேடிக்கையாகச் சொன்னார். ஆனால் மறுகணமே அவர் கடுமையாக, ”என்னுடைய ஹாஸ்யத்திலும் பொருள் பொதிந்திருக்கிறது. இதை நீ புரிந்துகொண்டால் போதும்” என்றார்.

கடைசியில் அந்தக் கிழிந்த துணி நாடா ஆனபிறகுதான் ஒருவாறு அவருக்கு ஆறுதல் ஏற்பட்டது.

14. மக்கள் பணியே மகேஸ்வரன் பணி

நவகாளி நாத்திரையின்போது தன் அலுவல்களைக் கவனிப்பதற்காகப் பெரும்பாலும் இரவு இரண்டரை மணிக்கே காந்தியடிகள் துயிலெழுந்துவிடுவார்; மனுவையும் எழுப்புவார். கடுமையான குளிர்காலம். அவ்வளவு சீக்கிரம் எழுந்திருப்பது மனுவுக்கு விருப்பமில்லை, ஆனாலும் எப்படியும் அவள் விளக்கைப் பொருத்தியாக வேண்டும் ஒருநாள் அவள் காந்தியடிகளிடம் ”இன்று தாங்கள் நள்ளிரவில் கண்விழிக்காது போனால் ஆண்டவன் பெயருகு ஒரு விளக்கேற்றுவேன்” என்று கூறினாள்.

”ஆண்டவன் அவ்வளவு பேராசைக்காரன் அல்ல”

என்று காந்தியடிகள் சிரித்துக்கொண்டே கூறினார்.

அவ்வாறு, உண்மையாகவே ஆண்டவன் பேராசைக்காரன் ஆகவில்லை. காந்தியடிகள் மறைப்படி எழுந்திருந்து மனுவின் கன்னத்தில் ஒரு தட்டுத்தட்டி, ”மனுடி எழுந்திரு உன் ஆண்டவன் பேராசைக்காரன் ஆகவில்லை.” என்றார்.

மனு சொன்னாள், பாபுஜி, தாங்கள் இரண்டு மணி நேரத்திற்காக விளக்கை அணைப்பானேன்? விளக்கின் வெளிச்சம் பெரிதாக இல்லாவிட்டாலும் இருக்கட்டும், ஆனால் விளக்கை மட்டும் அணைக்காதீர்கள்.”

”நீ பேசுவது என்னவோ உண்மைதான். ஆனால் இவ்வளவு காசை எனக்கு யார் கொடுப்பார்? விளக்கை அணைப்பதால் எனக்கு இரண்டு வேலைகள் நடைபெறுகின்றன. ஒன்று, நீ எழுந்து விளக்கை எரிப்பதால் உன் தூக்கம் போய்விடுகிறது. ஆகையால் எழுத உட்கார்ந்தாலும் நீ தூங்கிவிழுவதில்லை.. மற்றொன்று, காசும் மிச்சமாகிறது.

இவ்வாறு ஒரே கல்லில் இரண்டு கனிகள்.’ இந்தப் பழமொழியின் பொருள் உனக்குத் தெரியுமா?” என்றார் காந்தியடிகள்.

அவளுக்குத் தெரிந்த பொருளை மனு கூறினாள். காந்தியடிகள் மேலம் சொன்னார், ”இதற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. இரண்டு கனிகள் என்பதற்கு இரண்டு வேலைகள் என்று மட்டும் பொருள்ல்ல. நூற்றுக்கணக்க்கான பல