காந்திஜி வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் – பாகம் V

1. நான் சர்வாதிகாரியானால்

ஓய்வு பெறும் நோக்குடன் ஒரு சமயம் காந்தியடிகள் மசூரயில் தங்கியிருந்தார். காந்தியடிகள் எங்கு சென்றாலும் பத்திரிகை நிருபர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர் அப்பொழுது பிரிட்டிஷ் பந்திரி ணசபைத்தூது கோஷ்டியின்ர பாரத்த்திற்கு வந்திருந்தனர். இந்தியா சுதந்திரத்தைப்பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்ற்க் கொண்டிருந்தது. பாரத்த்தின் சர்ஆதிகாரியக உங்களை ஒரு நாளைக்கு நியமித்தால்நீங்கள் என்ன செய்வீர்கள்? என, வெளிநாட்டு பத்திரிகையின் பிரதியிதி ஒருவர் அண்ணலிடம் கேட்டார்.

”முதலில் நான் அப்பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் ஒரு நாளைக்காவது சர்வாதிகாரி ஆகியே விட்டால், டில்லி வைசிராய் மாளிக்யின் குதிரைலாயத்தைப்போன்றிருக்கிற ஹரிஜனங்கிள் குடிசைகளைச் சுத்தம் செய்வதில் அந்த நாளைச் செலவிடுவேன்.” என் அண்ணல் காந்தியடிகள் விடையளித்தார்.

மக்கள் உங்களது சர்வாதிகாரத்தை மேலும் ஒரு நாளைக்கு நீடித்தால் என்ன செய்வீர்கள்? என பத்திரிகைப் பிரதிநிதி கேட்டார்.

மறுநாளும் முதல் நாள் செய்த பணியைத் தொடர்ந்து செய்வேன் என மறுமொழி கூறினார் காந்தியடிகள்

2. வேர்க்கடலைப் பால் ஆராய்ச்சி

காந்தியடிகள் பால் குடிக்க விரும்பவில்லை. அதிலும் புட்டிப்பால் அவருக்கு அறவே பிடிக்காது. இருந்துபோதிலும் அவர் தென்னாப்பிரிக்காவில் போனிக்ஸ் பண்ணையில் இருந்தபோது காபி முதலிய பாணங்கள் உபயோகிக்கப்பட்டு வந்தது. அதற்குப் பால் தேவை. ஆனால் போதிய பால் கிடைக்கவில்லை. எனவே புட்டிப்பாலை உபயோகித்து வந்தார்கள்.

”எனக்கு இந்தப்பாலின் உபயோகம் பிடிக்கவில்லை. எனவே, இந்தப் பாலின் உபயோகத்தை நிறுத்திவிட வேண்டும். இதற்குப் பதிலாக பாதாங்கொட்டை பருப்புப்பாலை உபயோகப்படுத்த முடியுமா? முடியும் என எண்ணுகிறேன்” என ஒருநாள் காந்தியடிகள் ராவ்ஜீபாய் படேலிடம் கூறினார்.

”நான் செய்து பார்க்கிறேன்” என ராவஜீபாய் கூறினார்.

ஒருநாள் அவர் பாதங் கொட்டையைத் தண்ணீரில் அரைத்து அதிலிருந்து பால் தயாரித்துக் காப்பியில் கலந்து கொடுத்தார். காபி குடித்தவர்களுக்கு எத்தகைய வேறுபாடும் தெரியவில்லை.

காந்தியடிகள் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் இதற்குச் செலவு அதிகம் ஆகும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. இதைப்பற்றிச் சிந்தனை செய்த போது அவருக்கு ஒஉர உபாயம் தோன்றியது. அவர் ராவ்ஜீபாயிடம், ”பாதாம் பருப்பிலிருந்து பால் தயாரித்துக் காப்பிக்கு உபயோகிப்பதற்கு அதிகம் செலவாகும், அதற்கு பதிலாக வேர்க்கடலைப் பருப்பிலிருந்து பால் தயாரித்து ஆராய்ச்சி செய்து பார்” என்று கூறினார்.

மறுநாள் ராவ்ஜீபாய் அவ்வாறே செய்தார். அன்றும் காப்பி குடித்தவர்களுக்கு எத்தகைய வேறுபாடும் தெரியவில்லை. எனவே அன்றிலிருநுத் ‘போனிக்கா’ பண்ணையில் பாலுக்கு விடுதலை கிடைத்துவிட்டது.

3. எனக்கு பணத்தைப்பற்றிய கவலை இல்லை

காந்தியடிகளின் கட்டளைப்படி கோகலேஜீயின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சொற்பொழிவுகள், கட்டுரைகள் ஆகியவற்றின் தொக்ப்பைக் குஜராத்தி மொழியில் பிரசுரிப்பது என ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. அதைத் தொகுக்கும் பணி திரு நரஹரிதுவாரகாதாஸ் பரீக் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது மூக் கட்டுரையைப் படிப்பது போன்ற உணர்வு படிப்பவர்க்குஏற்படவேண்டும் அத்தகையவர்களிடம் மொழி பெயர்ப்புப் பணி ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மொழிப்பெயர்ப்பு நரஹரிதாஸூக்குப் பிடிக்கவில்லை. பல ஆசிரியர்கள் அதைப் புகழ்ந்த காரணத்தால் அப்புத்தகம் அச்சிடுவதற்காகக் கொடுக்கப்பட்டது. புத்தகம் முடியும் தறுவாயிலிருந்தது. அதை நரஹரிதாஸ் காந்தியடிகளிடம் காட்டி இதற்கு ‘நீங்களே முன்னுரை எழுதித்தரவேண்டும்’ எனக் கேட்டார்.

மறுநாள் காந்தியடிகள் நரைரிதாஸைக் கூப்பிட்டு, ”இந்த மொழிப்பெயர்ப்பு சரியில்லை; வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறுத். இதை யார் புரிந்து கொள்வார்கள்? இதை நீங்கள் எப்படி அச்சேற்ற அனுமதித்தீர்கள்?’ என்று கடிந்து கொண்டார்.

நரஹரிதாஸ் காந்தியடிகளிடம் உணமை நிலைமையைக் கூறினார். மற்ற ஆசிரியர்கள் புகழ்ந்த காரணத்தால் எனது சொந்தக் கருத்தை வெளியிட முடியவில்லை. ”பம்பாய்சர்வகலாசாலை சென்ற பட்டமளிப்பு விழாவின்போது அப்பொழுது தற்காலிக் கவர்னராக இருந்த லார்டு வெலிங்டன் இந்தியப்பட்டதாரிகளிடையே ‘இல்லை’ என்று சொல்லும் துணிவு இல்லை என தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இது உணைமை தானே. இந்த மொழிபெயர்ப்பு உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில், சரியாக இல்லை யென்பதை தெளிவாக நீங்கள் சொல்லியிருக்கவேண்டும். இதைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். நான் உங்களிடம் தொகுத்து வெளியிடும் ஆசிரியப் பணியை ஒப்படைத்திருந்தேன். நீங்கள் அக்கடைமையைச் சரிவர நிறைவேற்றவில்லை. சரி இருக்கட்டும். புத்தகம் முழுவதும் அச்சாகிவிட்டதா? அச்சாகி இருந்தாலும் இதை நான் நிராகரிக்கத்தான் வேண்டியிருக்கிறது” என்று காந்தியடிகள் கூறினார்.

இதுவரை எழுநூறு ரூபாய் செலவாகியிருக்குமே, அவ்வளவு பணமும் வீணாகவல்லவா போய்விடும்?” என நரஹரிதாஸ் கூறினார்.

”மேற்கொண்டு பைண்டு செய்வதின்மூலம் இன்னும் அதிக பணத்தை வீணாக்குவதா என்ன? எழுநூறு ரூபாய் என்ன, ஏழாயிரம் ரூபாய் வீணானாலும் வீணாகட்டும்; இத்தகைய புத்தகத்தை மக்களின் முன் ஏன் வைக்க வேண்டும். எனக்கு பணத்தைவிட கோகலேயின் பிறந்த நாளுக்கு இன்னும் இரண்டு மாத அவகாசம் தானே இருக்கிறது என்பதே கவலையளிக்கிறது.” என்று காந்தியடிகள் கூறினார்.

4. ஏழைகளின் பிரிதிநிதிக்கு இதுவே எல்லாவற்றிலும் தகுதியானது

வட்டமேஜை மாநாட்டிற்காகக் காந்தியடிகள் கப்பலில் லண்டன் சென்றிருந்தார். கப்பலை அடைந்ததும் முதன் முதலில் சாமான்களைச் சரிபார்த்துக்கொண்டார். அவரது கூர்மையான பார்வையிலிருந்து ஒன்றும் தப்பவில்லை. சாமான்கள் குவிந்திருப்பதைப் பார்த்து உள்ளம் நொந்தார். ‘நாம்நல்ல வேளையாக இரண்டாவது வகுப்பில் பிரயாணம் செய்கிறோம், கீழ்வகுப்புப் பிரயாணிகளாக இருந்தால் இத்தனை சாமான்களை எங்கே வைப்பது?’ எனக் கேட்டார்.

அதற்குத் திரு. மகாதேவ் தேசாய், ”குறைந்த அவகாசத்தில் பிரயாணத்திற்குத் தயாராக வேண்டியிருந்தது. இந்தப் பெட்டிகள் யாவற்றையும் இரவலாக வாங்கியுள்ளேன். திரும்பி வந்ததும் யாவற்றையும் திருப்பிக்கொடுத்துவிடுவேன். இவை தவிர அயேக நண்பர்கள் தங்களது பொருள்களை நம்மிடம் கொடுத்துவிட்டார்கள். நம்மால் மறுக்க முடியவில்லை. தெரிந்த நண்பர்கள் சிலர் தேவையான சில பொருட்களைத் தயாராக வைத்திருக்கும்படி ஆலோசனை கூறினார்கள். இவ்வாறாக நிறையச் சாமான்கள் சேர்ந்து விட்டன’ என பதில் கூறினார்.

இதைப்போன்று கூறப்பட்ட பல சமாதானங்களைக் கேட்டு காந்தியடிகள் அதிர்ச்சியுற்று, ”தயாரிப்பிற்காக நேரம் கிடைக்கவில்லையெனச் சாக்கு சொல்லுவது சரியல்ல, நண்பர்களிடம் இப்பொருட்கள் எங்களுக்குத்தேவையில்லையெனத் தெரிவித்திருக்கலாம். ஆனால், நீங்களோ இலண்டனில் ஐந்து ஆண்டு தங்குபவரைப் போன்று கிடைத்தைதையெல்லாம் வாங்கி வைத்துள்ளீர்கள். பெட்டிகளைத் திருப்பிக் கொடுத்து விடுவீர்ள். ஆனால் ‘ஏழ்மை’ ‘சேர்த்து வைத்தல்’ பற்றி தங்களது கருத்து என்ன? ஒன்று நீங்கள் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறீர்கள். அல்லது என்னை ஏமாற்ற விரும்புகிறீர்கள். நீங்கள் நண்பர்களின் ஆலோசனைகளை கேட்டுள்ளீர்கள். அவர்களுடனிருந்திருக்க வேண்டும். இங்கு என்னுடன் இருப்பதால் எனது ஆலோசனைப்படி நடக்கவேண்டும்’ என்று கூறி விட்டார்.

எல்லாப்பொருள்களையும் திருப்பிக்கொடுத்து விடுவது என தீர்மானிக்கப்பட்டது. இப்பணியில் மூன்று நாட்கள் கழிந்துவிட்டன. நான்காவது நாள் எஞ்சிய சாமான்களடங்கிய ஜாகிமாவைக் காந்தியடிகளடம் காட்டிபோது, ”உங்களது ஜாபிதாவில் தலையிட நான் விரும்பவில்லை. சிம்லா தெருக்களில் நீங்கள் நடந்து போவதைப் போன்று லண்டன் தெருக்களிலும் நடந்து செல்ல வேண்டும் என நான் விரும்புகிறேன். உங்களிடம் போதிய கம்பளி கிடைப்பதற்கு ஆவன செய்வேன். அங்குள்ளவர்கள் நம்மிடம் அழகான் பெட்டிகளைப் பார்க்கும்போது வருத்தப்படுவார்கள். இந்தியாவில் கதர்ப்பையை வைத்துக்கொண்டே சமாளிக்க முடியுமெனில் இங்கிலாந்திலும் ஏன் சமாளிக்க முடியாது? சாதாரண நிலையில் எந்தப் பொருளை வைத்துக்கொள்ள முடியாதோ அவற்றை நம்மிடம் வைத்துக் கொள்ளவே கூடாது.” என காந்தியடிகள் கூறினார்.

இதைக் கேட்டு தொலை நோக்கி, பிராயணக்கட்டில் ஆகயவற்றை திருப்பிக் கொடுக்க வேண்டியிருந்து. இந்தஞ் சந்தர்ப்பத்தில் காந்தியடிகள் நகப்பூட்டுவதிலும் தவறவில்லை. இந்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஸ்ரீ சூயேப் குரேஷி காந்தியடிகளைச் சந்திக்க வந்தார். அவரிடம், ”சூயேப், போபால் நவாபின் கூட்டத்தினரில் யாராவது ஒருவர் காஷ்மீர் சால்வையை வாங்க விரும்பினால் என்னிடம் சொல்லுங்கள். எனக்கு நண்பர்கள் பல சால்வைகளை கொடுத்துள்ளனர். அவற்றில் ஒன்று மோதிரத்துக்குள் செல்லும் அளவிற்கு அவ்வளவு மெல்லியதாக இருக்கிறது. கோடிகணக்கான இந்திய மக்களின் பிரிதிநிதியாக வட்ட மேஜை மாநாட்டிற்குச் செல்லும்போது இந்தச் சால்வையைப் போர்த்திக் கொண்டு செல வேண்டும் என நண்பர்கள் நினைத்தனர் போலும். ராணி அம்மையார் இந்த விலை உயர்ந்த சால்வையைப் பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக ஏழைகளுக்காகப் பயன்படுத்துவதற்குப் பணம் கொடுக்கட்டும். ஏழைகளின் பிரதிநிதிக்கு இதுவே எல்லாவற்றிலும் தகுதியானது” என்றார் காந்தியடிகள்.

5. சார்லி உங்களது நிகழ்ச்சி எவ்வாறு இருந்தது?

தென்னாப்பிரிக்காவில் இருந்த போது கோபால கிருஷணகோகலே ஆண்ட்ரூஸைக் காந்தியடிகளிடம் அனுப்பி வைத்தார். காந்தியடிகள் தனது கருத்தில் சிறிது மாறுதல் செய்ய வேண்டும் என ஆண்ட்ரூஸும் விரும்பினார். அப்பாவி ஆண்ட்ரூஸூக்கு இப்பணியில் சிறிதளவு வெற்றி கூடக் கிடைக்கவில்லை. மாறாக ஆண்ட்ரூஸ் தனது கருத்துக் களை மாற்றிக் கொண்டு அண்ணலின் சீடரானார்.

ஒரு நாள் காலை ஆண்ட்ரூஸிடம் காந்தியடிகளுக்கு ஒரு வேலை இருந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்பொழுது ஒருவர் வந்து, ”இன்று ஞாயிற்றுக் கிழமையாதலால் ஆண்ட்ரூஸ் மாதா கோவிலுக்குச் சென்றிருப்பார். இன்று அங்கு அவர் வழிபாடு நடத்திச் சொற்பொழிவாற்றுவார்” எனக் கூறினார்.

”சரி, நாமும் அங்கு சென்று அவரின் சொற்பொழிவைக் கேட்போம்” எனக் காந்தியடிகள் சென்றார்.

காந்தியடிகள் மாதாகோவிலுக்குச் சென்றார். அந்தக் கோவிலில் ஆங்கிலேயர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள். காந்தியடிகள் கருப்பராக இருந்த காரணத்தால் மாதா கோவிலில் நுழைய அனுமிக்கப்படாமல் தடுக்கப்பட்டார். அங்கிருந்தவர், நீக்ரோக்களுக்கென தனியாக மாதா கோவில் இருக்கிறது. விரும்பினால் அங்கு செல்ல்லாம் எனக் கூறினர்.

ஆண்ட்ரூஸின் சொற்பொழிவைக் கேட்கவே இங்கு வந்தேன். எனவே வேறு மாதா கோவிலுக்குப் போவது வீணே எனக் காந்தியடகிள் பதிலளித்தார்.

காந்தியடிகள் அங்கிருநுத் திரும்பி வந்து விட்டார். சிறிது நேரத்தில் ஆண்ட்ரூஸூம் திரும்பி வந்தார். அவரிடம் ‘இன்று உங்களது நிகழ்ச்சி எவ்வாறு இருந்தது, நான் உங்களது சொற்பொழிவைக் கேட்க வந்தேன். கருப்பர் என்ற காரணத்தால் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை.’ என்று காந்தியடிகள் கூறினார்.

இதைக் கேட்டு ஆண்ட்ரூஸின் கண்களில் நீர் மல்கியது. அவர் காந்தியடிகளின் கைகைளைத் தனது கைகளில் வைத்துக் கொண்டு, ”மோஹன், இது எவ்வளவு வெட்க்க் கேடானது, இன்று எனது சொற்பொழிவின் முக்கியப்பாத்திரம் நீங்களே, நான் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியைப் பற்றித்தான் பேசினேன் அனைவரும் ஒன்றிய மனத்துடன் கேட்டார்கள். ஆனால், அவர்கள் நீங்கள் உள்ளே வருவதைத் தடை செய்து விட்டார்களே” என வருத்தத்ததுடன் கூறினார்.

6. இப்பொழுது உன் முறை

தீண்டாமை ஒழிப்புச்சம்பந்தமாக ஒரிஸ்ஸாவில் காந்தியடிகள் யாத்திரை செய்துக் கொண்டிருந்தார். அவ்வமயம் நாள் தோறும் மலையில் இறைவழிபாடு நடைபெற்று வந்தது. வழிபாட்டுக் கூட்டத்திற்குப்பலர் வருவது வழக்கம். வந்தவர்கள் பணமாகவும் பொருள்களாகவும் காணிக்கைச் செலுத்துவார்கள். வழிபாடு, சொற்பொழிவுக்குப் பின்னர் அப்பொருள்களைக்காந்தியடிகள் ஏலம் போடுவார். மக்களும் அதை விரும்பி விலை கொடுத்து வாங்கி வந்தனர்.

காந்தியடிகள் கட்டாக்கிலிருந்தபோது, என்றும் போல் மக்கள் அவருக்கு அநேக பொருள்களைக் காணிக்கையாகக் கொடுத்தனர். அண்ணல் அவற்றையெல்லாம் ஏலம் விட்டார். இறுதியில் மட்பாண்டத் தொழிலாளி ஒருவர் பாலகிருஷ்ணனின் பொம்மை ஒன்றைக் காணிக்கையாகக் காந்தியடிகளுக்குக் கொடுத்தார். அதை ஏலம் விடும் சமயம் வந்தது. அண்ணல் அதைக் கையில் எடுத்துக்கொண்டு, ‘இப்பொழுது உன்னை ஏலம் விடும் முறை வந்துவிட்டது” எனக்கூறினார்.

அக்கூட்டத்தில் கல்காத்தாவின் தொழிலதிபரான திரு. பாகிரத் கானோடியாவும் அமர்ந்திருந்தார். அவர் அணலை நோக்கி, ”பாபு தாங்கள் கிருஷணனையும் ஏலத்தில் ஏற்றி விட்டீர்களே!” என புன்முறுவலுடன் வினவினார்.

காந்தியடிகள் கொல்லெனச் சிரித்து, ”ஐயா, இவரோ என்றும் ஏலம் விடப்படுகிறார் என்பதை நீங்கள் அறியீரோ! யாராவது ஏலம் போட வேண்டும்; யாராவது வாங்கித்தான் ஆக வேண்டும்” எனக்கூறினார்.

இது குறித்துக்காந்தியடிகள் பாகீரத் கானோடீயாவிற்கு மீராவின் பஜனைப் பாடலை நினைவூட்டினார்.

அன்று ஏலத்தில் எல்லவற்றைக் காட்டிலும் விக்கிரஹத்திற்கே அதிக விலை கிடைத்தது.

7.எனது உண்மையான வைத்தியன் இராமனே!

நவகாளி யாத்திரையின் போது ஒருநாள் மாலை பால் கிடைக்கவில்லை. ”பரவாயில்லை, ஆட்டுப் பாலுக்குப்பதில் தேங்காய்ப் பால் பயன்படும். ஆட்டு நெய்க்குப்பதிலாகத் தேங்காய் எண்ணெயைச் சாப்பிடலாம்” என அண்ணல் கூறினார்.

அச்சமயம் அண்ணலுடன் இருந்து பணிவிடை செய்து வந்த மனுபஹன், ஆட்டுப்பாலைப் போன்றே தேங்காய்ப் பாலைத் தயாரித்தார். ஆனால் தேங்காய்ப்பால் ஜரணிப்பது சற்று கடினமாக இருந்தது. இதனால் காந்தியடிகளுக்கு வயிற்றுப்போக்கு ஆரம்பமாயிற்று. அண்ணல் பலவீனமடைந்தார். வியர்வை கொட்டியது. ஒரு சமயம் தனது இரண்டு கைகாளலும் தலையைத் தாங்கிக் கொண்டு அமர்ந்துவிட்டார். இதைக் கண்ணுற்ற மனு கலக்கமடைந்து உடனிருந்த பேராசிரியர் நிர்மல் குமார் போஸை அழைத்தார். டாக்டர் சுசீலா நய்யாரை அழைத்து வரவேண்டி வரும் எனக் கருதினார். ஏதாவது நேர்ந்தால் நான் முட்டாளாகக் கருதப்படுவேனே என எண்ணி மனுபஹன் வேதனையுற்றார். டாக்டர் நய்யாரோ வழிபாடு தொடங்குமுன்னரே வெளியே போயிருந்தார்.

மனு இவ்வாறு எண்ணி, சுசீலா நய்யாருக்குக் கடிதம் எழுதி அதை நிர்மல்குமார் போஸ் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்தார். அச்சமயம் அண்ணல் விழித்தெழுந்தார். ”மனு, நீ நிர்மல்குமாரை அழைத்தது எனக்குப் பிடிக்கவில்லை. உனது வயதைக் கருதி உன்னை மன்னிக்கிறேன். இத்தகைய சந்தர்ப்பங்களில் வேறு ஒன்றும் செய்யாமல் உள்ளத்தில் இராம நாமத்தை ஜெபிக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கிறேன். நானும் இராம நாமத்தை உச்சரித்துக்கொண்டுதானிருந்தேன். நீயும் நிர்மல்பாபுவை அழைப்பதற்குப் பதில் இராம நாமத்தை உச்சரித்திருந்தால் மிக நன்றா இருந்திருக்கும். எனவே நீ இந்த தடவை சுசீலா நய்யாரிடம் இதைச் சொல்லாதே! கூப்பிடவும் வேண்டாம். எனக்கு உண்மையான வைத்தியர் இராமன் தான். என் மூலம் பணி நடைபெற வேண்டும் என்று அவர் எண்ணும் வரையில் என்னை உயிருடன் வைத்திருப்பார். இல்லையெனில் என்னை அழைத்துக் கொள்வார்” என அண்ணல் கூறினார்.

அண்ணல் கூறிய இவ்வார்த்தைகளைக் கேட்ட மனு, தனது கடித்த்தை உள்ளே கொண்டு போனார். இதைக் கண்ணுற்ற காந்தியடிகள், ”சுசீலாவிற்கு நீ கடிதமும் எழுதிவிட்டாயா?” என வினவினார்.

மனு: ‘ஆம்’

காந்தியடிகள்: இன்று உன்னையும் என்னையும் ஆண்டவன் காப்பாற்றினார். இக்கடித்த்தைப் படித்து விட்டு சுசீலா ஓடோடியும் வந்திருப்பார், அது எனக்குக் கொஞ்சமும் பிடித்திராது. உன் மீதும், என் மீதும் நான் சலிப்படைந்திருப்பேன். இராம நாம்ம் எனது உள்ளத்தில் ஆழ்ந்து பதிந்து விடுமேயானால் நான் ஒருபோதும் நோய் வாய்ப்பட்டு இறக்க மாட்டேன். இது எனக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.”

அன்று இரவே அண்ணல் பூரணமாகக் குணமடைந்து விட்டார்.

8. நீ கூறுவது உண்மேயே!

”உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் உங்களிடம் வநுத உரையாடுகின்றனர். தங்களது உள்ளக்கிட்கையை உங்களிடம் கூறுகின்றனர். நான் உங்களுத் மனைவ. எப்பொழுதும் தங்குடனேயே இருக்கிறேன். இருந்தபோதிலும் உங்களுடன் மனந்திறந்து உரையாடுவதற்கு வாய்ப்பே கிடைப்பதில்லை. இது சரிதானா? எனக்கும் உங்களிடம் உரையாடி எனது அறியாமையைப் போக்கிக்கொள்வதற்குரிய சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும். வெளியிலுள்ளவ்ரகள், நான் மாகத்மாவின் வாழ்க்கைத் துணைவி; நான் உங்களகிடம் தினமும் பேசி உண்மை அறிவைப் பெறுவேன் என எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால் எனக்கு ஐந்து நிமிட அவகாசம் கூட உங்களுடம் உரையாடக் கிடைப்பதில்லை என்பாதல் எனக்கிருக்கும் வருத்தம் யாருக்குத் தெரியும்?” என ஒரு முறை அன்னை கஸ்தூரிபா அண்ணலிடம் குறைப்பட்டுக் கொண்டார்.

அன்பு நிறைந்த குரலுடன், அன்னையிடம் ”நீ கூறுவது உண்மையே, உனக்குப் பேசுவதற்குச் சந்தர்ப்பம் நான் அவசியம் கொடுக்க வேண்டும். எவ்வளவு நேரம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நீயே சொல்” எனக் கேட்டார்.

அன்னையோ, சற்று சங்கோஜத்துடன் ”உங்களுக்கோ அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருப்பதிலிருந்து இருவு தூங்கும் வரையிலும் படிப்பது, எழுதுவது, சந்திக்க வருபவர்களிடம் உரையாடுவது ஆகிய பணிகள் தொடர்ந்து இருக்கின்றன. உங்களுக்குச் சிறிது நேரம் கூட அவகாசம் கிடைபது இல்லை. இந்நிலையில் எனக்கு இவ்வளவு நேரம் கொட்ட வேண்டும் என நான் எவ்வாறு உங்களிட் கூறுவேன். இதைப் பற்றித் தாங்கள் தான் கூற வேண்டும்” என் அண்ணலிடம் கூறினார்.

”நல்லது இன்றிலிருந்து இரவு தூங்கப்போகும் முன்னர் எனது தலையில் எண்ணெய்த் தேய்க்கும் பணியை நீ ஏற்றுக்கொள். அப்போது என்னுடன் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும் . இன்றிலிருந்து வேறு எவரும் எண்ணெய்த் தேய்க்க மாட்டார்கள். உனக்கு நேரமில்லையெனில் நீ சொல்லி வேறு யாராவது இப் பணியைச் செய்வார்கள்” என அண்ணல் கூறினார்.

9. எனக்குப் பணி செய்வதும் தரித்திரநாராயணனின் சேவையே

காந்தியடிகள் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். மகலநயன் பஜாஜூன் அவருடனிருந்தார். உணவுத் தட்டை மூடுகின்ற கதர்த் துணி ஒன்று காணாமற்போய்விட்டது. இவ்விஷயம் காந்தியடிகளுக்குத் தெரிந்ததால் கவலைப்படுவார். இதுப்பற்றி பத்துப் பதினைந்து நிமிடம் வரை கமலநயன் பஜாஜியிடம சொற்பொழிவாற்றுவார் என அனைவரும் தீர்மானித்திருந்தனர். எனவே அன்று அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. மறுநாள் காந்தியடிகளின் மௌனவிரத நாள். பெரிய தலைவர்ள்பலர் அவரைச் சந்திக்க வருவதாக இருந்தது. எனவே அன்றும் இதைப் பற்றிக் கூறுவது சரியில்ஐ என எண்ணினார். எனவே ஒருபுதிய கதர்த்துணியால் உணவுத் தட்டை மூடி, காந்தியடிகளிடம் கொண்டு சென்றார் கமலநாயன். பணியில் ஈடுபட்டுள்ளரா; எனவே காந்தியடிகள் இதைக்கவனிக்கமாட்டார் என எண்ணினார் கமலநயன். ஆனால் காந்தியடிகளின் பார்வையிலிருந்து எப்பொருளும் தப்ப முடியாது. புதிய துணியைப்பார்த்து புன் முறுவல் பூத்த அண்ணல் தனது விரலினால் சைகை காட்டினார்.

”உனது தந்திரத்தைப் புரிந்து கொண்டேன்” என்று சொல்லுவதைப் போன்று இருந்தது, அந்தச் சைகை.

மௌனவிரதம் முடிந்ததும் கமலநயனைக் கூப்பிட்டு நடந்த விஷயத்தைப் பற்றிக் கேட்டார்.

”எனது கவனக்குறைவால் கதர்த்துணி எங்கோ தவறிவிட்டது. ஆகையால் புதிதாக ஒன்று வாங்க நேரிட்டது” எனக் கமலநயன் கூறினார்.

அப்பொழுது வேறு ஒருவர் அண்ணலைச் சந்திக்க வருவதாக இருந்தது. எனவே காலைப் பிரார்த்தனைக்குப் பின் தன்னுடன் உலவுவதற்கு வருமாறு கமலநயனிடம் , இத்தகைய கவனக் குறைவு நமக்கு ஏற்படலாமா? நாமோ, ஏழைகளுக்குச் சேவை செய்யய விரதம் பூண்டுள்ளோம். இதைக் கவன்த்த்இல் கொண்டால் இத்தகைய தவறு ஒரு போதும் ஏற்படாது. நமதுத பணியில் நமது கவனம் இருந்தால்தான் மனம் ஒரு நிலைப்படுத். அறிவும் வளரம், பணியும் நிலைவேறும், இல்லையெனில் நமது சேவையும், பணியும் பொருளற்றதாகிவிடும்” எனக் கூறினார்.

”தரித்திர நாராயணுக்குச் சவை சேய்யத் தாங்கள் விரதம் எடுத்துள்ளீர்கள், உங்களுக்குப் பணி செய்யும் பொறுப்புத் தான் என்னடையது” என கமலநயன் காந்தியடிகளிடம் கூறினார்.

இவ்வாறு சொல்லி, அவ்விஷயத்தைத் தவிர்க்க விரும்பினார். ஆனால் காந்தியடிகளோ, ஆழ்ந்த சிந்தனைக்குள்ளானார். மேலும் விளக்கிக் கூறலானர். ”நான் திரத்திர நாராயணனின் சேவையில் ஈடுபட்டிருக்கும்போது, எனக்குச் சேவை செய்தும் தரித்திர நாராயணனின் சேவையேயாகும். நீயோ ஜம்னாலால் பூஆஜ் போன்ற இறமை வாய்ந்த வியாபாரியின் மகன். இத்தகையக் கவனக்குறைவு உனக்கு எப்படி ஏற்படலாம்? தவிர நீ நூல் நூற்கிறாய்.. இதில் எவ்வளவு உழைப்பு ஈடுபடுத்தபுபடிருக்கிறது என்பதும் உனக்குத் தெரியும். அந்தத் துணி காணாமல் போய்விட்டது. இது சிறய விஷயமன்றாலும், இதைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்தால் அந்த் துணியில் எதனை பேருடைய உழைப்ப ஈடுபட்டுள்ளது என்பது புலனாகும். காந்டில் பருத்தி விளைவிக்கும் குடஆனவன் முதல் பருத்தி எடுத்தல், அறைத்தல், பஞ்சுடைத்தல், நூற்றல், நெய்தல், சலவை செய்தல் வரை எத்தனை பேருடைய உழைப்பைப்பயன்படுத்தி இத்துணி தயாராகி உள்ளது. அந்த உழைப்பிற்கு மிதப்புக் கொடுப்பது போய், உனது கவன்க்குறைவால் அதை அவமதித்துள்ளாய், இதை எவ்வாறு சகிப்பது? இந்தக் கவனக் குறைவால் நமது தன்மானத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி நீ சிந்திப்பாயானால் பச்சாத்தாபப் படாமல் இருக்க முடியாது.

10. செல்வத்தை நல்ல முறையில் பயன்படுத்துவது நமது கடமை

சேவாக் கிராமத்திலிருக்கும் போது காந்தியடிகள் உலாவச் செச்னு கொண்டிருந்தார். அவருடன் வேறு சிலரும் கமலநயன் பஜாஜூம், அவரது தாயாரும் சென்று கொண்டிருந்தார்கள். போய்க்கொண்டிருக்கும்போது வழியில் பட்டைக் பஞ்சின் சிறு துண்டு ஒன்று கீழே கிடந்தது. அதை எடுக்கும்படி சைகை காட்டினார். ஆனால் சிறுமி எடுத்துக் கொண்டாள். சிறு பொருள் என்பதால் கமல நயன் சிறுமியிடம் அப்பட்டைப் பஞ்சைக் கேட்கவில்லை.

காந்தியடிகள் திரும்ப ஆசிரமத்திற்கு வந்து நூற்க அமர்நதபொழுது அப்பட்டைப் பஞ்சை நினைவு படுத்தினார். பட்டைப்பஞ்சை எடுத்த சிறுமியைத் தேடினார்கள். சிறுமியும் வந்தாள். ”நீ எடுடத்தத பட்டைப் பஞ்சுத்துண்டை இங்கே கொண்டுவா” எனக் கூறினார். ”அதை நான் குப்பைக்கூடையில் எறிந்துவிட்டேனே” என்றால் சிறுமி.

இதைக்கேட்டு அண்ணல் கோபமுற்று ”குப்பைக் கூடையில் போடுவதற்காக அதை எடுக்கும்படி நான் உன்னிடம் கூறவில்லை” என்றார்.

”அதைக்குப்பை எனக் கருதியே நான் எடுத்து வந்தேன். குபைக் இருக்க வேண்டிய இடத்தில் இலாமல் தவறான இடத்தில் இருக்கிறு எனக்கருதி குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டேன்” என்றாள் சிறுமி.

”அங்குகாசு கிடந்தால் அதை எடுத்து குப்பையில் போட்டு விட்டு வருவாயா?” என வினவினார் காந்தியடிகள்ழ

”மாட்டேன்” என்றாள் சிறுமி.

”அந்தப் பஞ்சும் பணமே, ஆசிரமத்திலிருக்கும் நீ உண்மைச் செல்வம் எது என்பதைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். பட்டைப் பஞ்சு முழுவதையும் நூற்காமல் எறிந்தவர், பணத்தையே எறிந்துகளார்; நான் அதை எடுக்கும்படி உன்னிடம் கூறினேன், அப்பொழுது கூட நிஈ அந்தச் செல்வத்தைப் புரிந்து கொள்ளவில்லைழ இப்பொழுது போய் அதை எடுத்து வா” எனப்பணித்தார் காந்தியடிகள்.

”பாபூ, நான் தவறு செய்துவிட்டேன், நீங்கள் கூறியதை நான்முற்றிலும் புரிந்து கொள்ளவில்லை, அந்தப் பட்டைப் பஞ்சை நானே நூற்றுவிடுகிறேன், அதற்காகத் தாங்கள் காத்திருக்க வேண்டாம்” என நாணம் நிறைந்த குரலில் சிறுமி பதில் கூறினாள்.

ஆனால் அண்ணலா இதை ஏற்றுக்கொள்வார்! அந்தப் பட்டையைப் பஞ்சைத் தானே நூற்க வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தார். ”அப்பட்டைப் பஞ்சைத் தேடிக் கொண்டு வா, இதகைய கவனக்குறைவு இனி ஏற்படாது என நான் எவ்வாறு நம்புவேன்? உழைப்பால் செல்வம் உண்டாகிறுது. உற்பத்தியாகும் செல்வத்தை உரிய வழியில் பயன்படுத்துவது நமுத கடைமயாகும்.

சிறுமி மிகவும் நாணமுறாள். உடனே சென்று குப்பையில் கிடந்த அந்தப் பட்டை பஞ்சுத்துண்டை தேடிக கண்டுபிடித்தாள். அதில் மண்ணும் தூசியும் ஒட்டியிருந்தது. பட்டைப்பஞ்சும் காற்றில் சற்று ஊதியிருந்தது. இருப்பினும் காந்தியடிகள் அதை முழுவதும் நூற்றார். அந்த நூல் சற்று அழுக்காக இருந்தது. அணல் அதைப் பொருட்படுத்தாமல் நெய்த பின்னர் சலவை செய்யும்போது மண் கரை மறைந்து விடும் எனக்கூறினார்.

11. அதிலும், நல்ல இந்தியத் தாயை நான் காணவில்லை

பாரத்த் தாயை நன்றாகப் பிரதிபலிக்கக் கூடிய ஒருபடம் காந்தியடிகளின் ‘நவஜீவன்’ வாரப் பதிப்பிற்குத் தேவையாக இருந்தது. அவரின் ஆணைப்படி அறிமுகமான ஓவியர் திரு. ரவிசங்கர் ரால் ஒரு படம் வரைந்தார். ரவிசங்கர் தனதுத சித்திரத்தைக் காந்தியடிகளிடம் காட்டிய போது, ஹரிபிரசாத் தேசாயும் அங்கு அமர்ந்திருந்தார். அவரிடம் இந்தப் படத்தை ரவிசங்கர் காட்டினார். காந்தியடிகளுக்குப் படம் பிடித்திருந்தது. அதை அடுத்த இதழில் பிரசுரிக்கவும் தீர்மானித்தார். இதைக் கேள்வியுற்ற ஹரிபிரசாத் தேசாய்க்குத் திருப்தியில்லை. அவர் காந்தியடிகளிடம் ”நீங்கள் இந்தப் படத்தை விரும்பியிருக்கிறீர்களே; இதுல் இந்தியத் தாயரின் கிரீடம் எங்கே? புழுதியில் பரண்டிமுந்தாலும் அது இருக்க வேண்டுமல்லவா? தலை முடியும் உலர்ந்திருக்கிறது. துணியும் அழுக்காக இருக்கிறது. இது இந்தியத் தாய் போன்று காட்சியளிக்காமல் ஏதோ ஒரு பிச்சைக்காரியைப் போன்று காட்சி அளிக்கிறது. ரவிசங்கரைப் போன்ற ஓவியரிடம், உங்களிடமும் நான் என்ன சொல்ல இருக்கிறது” என்று நொந்து கொண்டார்.

காந்தியடிகள் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தார். ரவிசங்களர்ஜீ கோர்ட்டிலு குற்றவாளி போல் நின்றிருந்தார். தேசாய் கூறி முடித்தப் பின் ”நான் பாரதம் முழுவதும் சுற்றியுள்ளேன், ரவிசங்க் வரைந்துள்ள ஓவியத்தைக்காட்டிலும் நல்லதொரு இந்தியத் தாயை நான் காணவில்லை” எனக் கூறினார் காந்தியடிகள்.

12. தன் குப்பையை அவலாருக்கு கொடுக்க இயலாது

காந்தியடிகளிடம் பம்பாயில் ரேவா சங்கரின் இலத்தில் தங்கியிருந்தார். பம்பாய் புற நகர்ப்ப பகுதி காங்கிரஸ் கமிட்டிகளின் தலைவராக விட்டல்பாயி படேலும், துணைக்காரியதரிசியாக ஜய்சுகலாலா மேதாவுமிருந்தனர். மேத்த சாந்தா குரூஸ் காங்கிரஸ் குழுவில் முக்கியமானவரும் கூட, காந்தியடிகள் அந்நியத் துணியை எரிக்கும் இயக்கத்தை திட்டத்தில் இருந்த கருத்து வேறுபாடு, காந்தியடிகளின் வேறு எந்தத் திட்டத்திலும் மக்களுக்கு இருக்கவில்லை. விட்டல்பாயிபடேல், ஜய்சுகலால் மேத்தா ஆகிய இருவருக்கும் காந்தியடிகளின் இப் பணி ஏற்புடையதாக இல்லை; ஏனெனில் முதல் உலகப்போரின் காரணமாக துருக்கி முதலிய நாடுகளில் துணிப் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. எனவே அந்நிய துணிகளை எரிபதற்குப் பதிலாக அந்நாடுகளிக்கு ஏன் அனுப்பக்கூடாத? என்பது மேற்கண்ட இருவரின் வாதம்.

இந்த நேரத்தில் தான் சாந்தா குரூஸிலிந்து அந்நியத் தணி எரிப்புத் திட்டம் தொடங்க வேண்டும் என அண்ணலிடமிருந்து ஆணை பிறந்தது. விட்டலபாய் படேல் ”நீங்கள் சென்று காந்தியடிகளிடம் நமது கருத்தைக்கூறி வாருங்கள்” என மேத்தாவிடிம் கூறினார்.

”காந்தியடிகள் ஒருமுறை முடிவு செய்துவிட்டால் அதை மாற்றுவதில்லை.” என மேத்தா பதிலளித்தார்.

இருப்பினும் மேத்தா காந்தியடிகளிடம் சென்று இரண்டு மணி நேரம் விவாதித்தார். ”தனது குப்பையை எடுத்து அயலானுக்குக் கொடுக்கக் கூடாது” இவ்வேள்வியை சாந்தா குரூஸிலிருந்தே நாம் தொடங்குவோம்” என அண்ணல் கூறிவிட்டார்.

அன்று இரவு எட்டு மணிக்கு அண்ணல் தமது கரங்கலாலேயே சாந்தா குரூஸில் அந்நியத்துணியை எரித்தார்.

13. தேவைக்கு அதிகமான சக்தியை ஏன் விரும்ப வேண்டும்?

ஆரம்ப காலத்தில் காந்தியடிகள் உணவில் ஆராய்ச்சி செய்து வந்தார். இந்த ஆராய்ச்சிகளில் ஒன்றில் திரு. ரவிசங்கர் வியாஸ் என்பவுர்ம வேக்வைக்காத உணவுப் பொருட்களைச் சாப்பிடும் பழக்கத்தை மேற்கொண்டார். காந்தியடிகளுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டதின் காரணமாக மிகவும் மெலிந்து விட்டார். ஆனால் திரு. வியாஸ் அவர்களுக்கு எத்தகைய துன்பமும் நேரவில்லை.

ஒரு மாத்திற்குப்பின்னர் அண்ணலுக்கு பேசுவதற்குக் கூட இயலாமற் போய்விட்டது. பேசக்கூடாது என டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். திரு. வியாஸ் அண்ணிலிடம் சென்றார். டாக்டர்களின் கட்டையையம் ம்பீறி அண்ண் ”உனது உடல் நலம் எவ்வாறு உள்ளது?” என வியாசிடம் கேட்டார்.

வியாஸ்: நன்றாக இருக்கிறது.

காந்தியடிகள் : எடை எவ்வளவு குறைந்துள்ளது?

வியாஸ்: அதிகமில்லை.3/4 ராத்தல் குறைந்துள்ளது. ஆனால் சோர்வு அதிகம் தோன்றுகிறது.

காந்தியடிகள் : என்ன வேலை செய்கிறீர்கள்?

வியாஸ்: நாள் முழுவதும் நூல் நூற்கிறேன், துப்புரவுபோன்ற இதர வேலை இருக்கும் நாட்களில் அவற்றையும் செய்கிறேன்.

காந்தியடிகள்: இவ்வளவு வேலைகளையும் செய்கிறீர்களா?

வியாஸ்: ஆமாம்.

காந்தியடிகள்: ”இதற்குமேல் அதிகமான சக்தியை ஏன் விரும்புகிறீர்கள்? தேவைக்கு அதிகமான உடல் சக்தியிருந்தால் உடலில் வகாரங்கள் தோன்றுகின்றன. ஆத்மசக்தி அழிவுறுகிறது. தென்னாப்பிரிக்காவில் இருக்கும்போத தினமும் இருபத்தொருமலைகள் நடந்தே வழக்குரைஞர் தொழிலை நடத்தி வந்தேன். அதிகாலையில் எழுந்து இரவில் தயாரித்த ரொட்டியையும் எலுமிச்சை உறைகாயையும் உடன் எடுத்துக்கண்டு நடப்பேன், வழியில் தண்ணீர் கிடைக்கும் இடத்தில் குளித்து விட்