ஸ்லெட்’ தேர்வு ஏப்ரலில் நடத்த திட்டம்
சென்னை: “பல்கலைக்கழக தேர்வுகளுக்கு பிறகு, ஏப்ரல் இறுதியில், ‘ஸ்லெட்’ தேர்வு நடத்தப்படும்,” என, கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் தெரிவித்தார். கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு, ‘நெட்’ அல்லது ‘ஸ்லெட்’ தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என யு.ஜி.சி., அறிவித்துள்ளது. தேசிய அளவிலான, ‘நெட்’ தேர்வு யு.ஜி.சி.,யால், ஒவ்வொரு ஆண்டு ஜூன் மற்றும் … Continued
ரூ.500 கோடி மோசடி வழக்கில் ஒப்புக்கு குற்றப்பத்திரிகை:டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் நோட்டீஸ்
மதுரை:மதுரையில் 500 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக சந்தேகிக்கப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த குற்றப்பிரிவு போலீசார் மீது நடவடிக்கை கோரிய மனு குறித்து பதிலளிக்க டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ஆஸி., நிறுவனங்களுக்கு சேர வேண்டிய தொகை : மந்திரி கிருஷ்ணாவுக்கு தர்மசங்கடம்
மெல்போர்ன் : காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் தொடர்பாக ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை அளிக்கும்படி அந்நாட்டு அரசு, வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் வற்புறுத்தியுள்ளது.
சிவிக் காருக்கு கண்ணாடி கூரை: ஹோண்டாவின் புது யுக்தி
வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு, கண்ணாடி கூரை (சன்ரூஃப்) பொருத்திய சிவிக் காரை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தி.மு.க., மும்முரம்: காங்கிரசுக்கு60, பா.ம.க.,வுக்கு 24 தொகுதிகள்?
சட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க., அணி, இறுதி வடிவம் பெற்று தயாராகி விட்டது. காங்கிரஸ் – பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க., எக்ஸ்பிரசில் பயணம் செய்வது உறுதியாகி விட்டதாக, அக்கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரேஷன் அரிசியை விட மணல் விலை அதிகம்: கட்டுமானப் பணிகள் தேக்கம்
ஒரு கிலோ ரேஷன் அரிசியை விட, ஒரு கிலோ மணல் விலை அதிகரித்துள்ளது, கான்ட்ராக்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் இழப்பு-பொறுப்புடன் செயல்பட சிபலுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பே ஏற்படவில்லை என்று பொறுப்பே இல்லாமல் பேசுவதா என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பால் விலை திடீர் உயர்வு-மக்கள் அவதி
சென்னை: தமிழகத்தில் பால் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தே.மு.தி.க.,வுடன் அ.தி.மு.க., கூட்டணியா? ஜெ.,பரபரப்பு பேட்டி
சென்னை : “”தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை,” என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்தார்.
அமெரிக்கா வந்துள்ள மஹிந்தவை கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அமெரிக்கா சென்றுள்ளார். இந்தநிலையில், யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.