ஊராட்சி தலைவரின் அதிகாரத்தை பறிக்க கலெக்டருக்கு உரிமையுண்டு : ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை : முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஊராட்சி தலைவரின் அதிகாரத்தை பறிக்க கலெக்டருக்கு உரிமையுண்டு என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.
இரண்டு லட்சம் விவசாய மோட்டார்களுக்கு இந்த ஆண்டுக்குள் கண்டிப்பாக இணைப்பு : ஆற்காடு வீராசாமி
சென்னை : “”இந்த ஆண்டுக்குள் இரண்டு லட்சம் விவசாய மோட்டார்களுக்கு கண்டிப்பாக மின் இணைப்புகள் வழங்கப்படும்,” என்று, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி உறுதி அளித்தார்.
ஜன. 15க்குப் பின் மத்திய அமைச்சரவையில் மாற்றம்-திமுகவுக்கு மீண்டும் கிடைக்குமா தொலைத் தொடர்புத்துறை
டெல்லி: ஜனவரி 15ம் தேதிக்குப் பின்னர் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
ஹோம் சயின்ஸ் படித்தால் ஆசிரியர் வேலை கிடையாது’
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி பேசும்போது,”ஹோம் சயின்ஸ் பாடத்தில் பி.எட்., படித்த ஏராளமானோர், அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.
வருமானம் கூடும் போது விலைவாசி கூடுவது இயற்கை : அமைச்சர் பொன்முடி புது விளக்கம்
சென்னை : “”வருமானம் கூடும் போது விலைவாசி கூடுவது இயற்கை தான்,” என, அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் நடந்த விவாதம்:
டர்பன் போட்டி-135 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படு தோல்வி
டர்பன்: தென் ஆப்பிரிக்காவின் அபார ஆட்டத்தால், டர்பன் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது.
தொழில் துறையில் தடாலடி வீழ்ச்சி.. 2.7 சதவீதமாகக் குறைந்தது!
டெல்லி: இந்திய தொழில்துறை வளர்ச்சியில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11.3 சதவீதமாக இருந்த வளர்ச்சி, இந்த நிதி ஆண்டு அதே காலகட்டத்தில் வெறும் 2.7 சதவீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
வளர்ச்சிக்காக சீனா தந்த விலை: 258 நகரங்களில் அமில மழை
பீஜிங் : சீனா தனது அபரிமிதமான பொருளாதார முன்னேற்றத்திற்கு, மிக அதிகமான விலை கொடுத்திருக்கிறது. ஆம்., அதன் 258 நகரங்களில், அமில மழை பெய்திருப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விண்ணைத்தொடும் விலைவாசி எப்படி உயர்ந்தது? பிரதமர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்
புதுடில்லி: நாட்டில் கடந்த 2 ஆண்டில் விலைவாசி உயர்வு மக்களை பெரிதும் பாதிப்பதுடன் மத்திய அரசை பெரும் கவலையடையச்செய்துள்ளது.
கூட்டணி: பேச்சு நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஜெ அழைப்பு
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து விரைவில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்க இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.