அணு ஆயுத தாக்குதல் நடக்கும் : வடகொரியா ஆவேச எச்சரிக்கை

posted in: உலகம் | 0

சியோல் : “தென்கொரியா எல்லை மீறும் பட்சத்தில், அதன்மீது புனிதப் போர் தொடுப்போம். தேவைப்பட்டால், அணு ஆயுதங்களைப் பிரயோகிக்கவும் தயங்க மாட்டோம்’ என, வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இந்த மிரட்டலுக்கு, அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

277 கிராமங்களில் பணம் எடுக்க மொபைல் மினி ஏ.டி.எம்., துவக்கம்

திண்டுக்கல் : அனைவருக்கும் வங்கி சேவை திட்டத்தின் கீழ், ஐ.ஓ.பி., சார்பில் மொபைல் மினி ஏ.டி.எம்.,சேவை தற்போது 277 கிராமங்களில் துவக்கப்பட்டுள்ளது.

திமுகவுடனான கூட்டணி பலமாகவே உள்ளது, தொடரும்-காங்.

posted in: அரசியல் | 0

டெல்லி: தமிழக சுற்றுப்பயணத்தின்போது ராகுல் காந்தி பேசியதற்கு உள்நோக்கம் பார்க்கக் கூடாது. திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி பலமாகவே உள்ளது, அதில் எந்த மாற்றமும் இல்லை, இது தொடரும் என்று காங்கிரஸ் கட்சி விளக்கியுள்ளது.

டிச., 30ல் பால் கூட்டுறவு சங்கத்தினர் ஸ்டிரைக் 17 லட்சம் லிட்டர் வினியோகம் ஸ்தம்பிக்கும்

posted in: மற்றவை | 0

விருதுநகர் : ஆவின் ஊழியராக்கக் கோரி, பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள், டிச., 30ல் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

மாஜி கவர்னர் திவாரிக்கு மரபணு சோதனை

posted in: கோர்ட் | 0

புதுடில்லி : முதுபெரும் காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி தான் தன் தந்தை எனக் கூறி இளைஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், “டி.என்.ஏ., பரிசோதனைக்கு திவாரி ஆட்பட வேண்டும்’ என, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நேபாளத்திடம் மன்னிப்பு கேட்டது இலங்கை!

கொழும்பு: நேபாளத்தில் அமைதி ஏற்படுத்த ராஜபக்சேவிடம் நேபாளம் உதவி கோரப்பட்டதாக வெளியான பொய்யான தகவலுக்கு மன்னிப்பு கேட்டது இலங்கை.

தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு சமவாய்ப்பு தர கபில் சிபல் உறுதி

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “”தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சியை பேணிக் காக்க, நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கும், சமமான வாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்படும்,” என, மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

முட்டை, கறிக்கோழி விலை கிடுகிடு

சென்னை : வட இந்தியாவில் பெய்து வரும் மழை காரணமாகவும் , நியூஇயர் சீசன் என்பதாலும் இனி வரும் நாட்களில் முட்டை விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.