சட்டசபை தேர்தல் பணிகளை ஆரம்பியுங்கள்: தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு உத்தரவு
“தமிழகத்தில் காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து, இப்போதே தேர்தல் பணியை துவங்கிட வேண்டும். மாவட்ட தலைவர்கள் மாற்றம் குறித்து விரைந்து செயல்பட்டு, புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க வேண்டும்’ என, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறினார்.
பாக்.குக்குள் புகுந்து தீவிரவாதிகளை தாக்க அமெரிக்க திட்டம்-அனுமதி கோருகிறது
வாஷிங்டன்: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலை கொண்டு அட்டகாசம் செய்து வரும் அல் கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு போதிய நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வருவதால், பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளுக்கு எதிராக பெரும் தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்காக பாகிஸ்தானிடம் அது அனுமதி கோரியுள்ளது.
வெங்காய ஏற்றுமதிக்குத் தடை
புது தில்லி, டிச. 20: ஜனவரி 15-ம் தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு தாற்காலிகமாக தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வாங்க ஆளில்லை… நானோ உற்பத்தி குறைக்கப்பட்டது!
டெல்லி: ரூ 1 லட்சம் கார் என்று அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது ரூ 2 லட்சம் விலையில் விற்பனையாகிவரும் டாடா நானோ காருக்கு வாடிக்கையாளர்களிடம் மவுசு குறைந்துவிட்டது.
இலங்கையில் ஓய்ந்தது வெடிகுண்டு சத்தம்: துவங்கப் போகிறது கப்பல் போக்குவரத்து
“கப்பல் போக்குவரத்து துவக்கப்படும்’ என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளதை தென்மாவட்ட மக்கள் வரவேற்றுள்ளனர். இலங்கைக்கும், இந்தியாவிற்குமான கடல் வழிப் போக்குவரத்து என்பது இன்று நேற்றைக்கு ஏற்பட்டதல்ல. புராண காலம் தொட்டே இரு நாடுகளுக்கும் இடையில் கடல் வழி போக்குவரத்து நிலவி வந்துள்ளது. ராமாயண காலத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து தான், வானரப்படைகள் … Continued
ரயில்களில் ஐந்து இலக்க எண்கள் இன்று முதல் அமல்
சென்னை: அனைத்து ரயில்களிலும் இன்று முதல் ஐந்து இலக்க எண்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும் 17 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்தியத் தலைவர்களைக் கொல்லத் திட்டமா… புலிகளின் கண்டனமும், மறுப்பும்
கருணாநிதி, மன்மோகன் சிங் , சோனியா காந்தி உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு தங்களால் அச்சுறுத்தல் உள்ளதாக இந்திய உளவுத் துறை கூறியுள்ளதை வன்மையாகக் கண்டித்துள்ளது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.
ஊழலுக்கு எதிராக போர் தொடுங்கள் ஆவேசம்: டில்லி காங்.,மாநாட்டில் சோனியா கோபம்
ஊழலில் அல்லது முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ள முடியாது. ஊழல் அபாயத்தை ஒழிப்பதில், கட்சியினரும், அரசும் முனைப்புடன் செயலாற்ற வேண்டும்.
உயர்ந்த பதவியில் ஊழல் நபரா? கேள்விக்குறியாகும் அரசின் நம்பகத்தன்மை
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபரே, ஊழல் கண்காணிப்பு பிரிவின் தலைவராக எந்த நாட்டிலாவது ஆக முடியுமா? சினிமாவில் மட்டும் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்.
நீதிபதிகள் நீதியின் குரலாக இருக்க வேண்டும் : சொல்கிறார் அமைச்சர் துரைமுருகன்
அரூர் : “”நீதிமன்றம் மீது சாதாரண குடிமகனுக்கும் நம்பிக்கை வரும் வகையில், நீதிபதிகள் நீதியின் குரலாக இருக்க வேண்டும், ” என, தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.