கான்பூரில் அனல் மின் உலை அமைக்கிறது என்எல்சி
லக்னோ : தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்(என்எல்சி), உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அடுத்துள்ள கதம்பூரில் அனல் மின் உலை அமைக்கிறது.
மேலூர் அருகே ரூ. 105 கோடி மதிப்பில் நவீன வசதியுடன் “டெர்மினல் மார்க்கெட்’:அமைச்சர் தகவல்
மேலூர்:மதுரை மாவட்டம் மேலூர் அருகே முக்கம்பட்டியில் 105 கோடி ரூபாய் மதிப்பிலான “டெர்மினல் மார்க்கெட்’ (வேளாண் விற்பனை முனையம்) துவக்கப்பட உள்ளது.
சூரியனுக்கு உரிமை கொண்டாடும் ஸ்பெயின் நாட்டுப் பெண்
லண்டன் : ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார். ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் ஏஞ்சலஸ் துரன்(49).
தகுதியான மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க வங்கி கிளைகளுக்கு உத்தரவிட வேண்டும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
தகுதியான மாணவ, மாணவிகள் அனைவருக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகளின் நிர்வாகம் அதன் கிளை மேலாளர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.
தாமஸ் விலக மாட்டார்..ஆனால், 2ஜி வழக்கை கவனிக்கவும் மாட்டார்-மத்திய அரசு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கிலிருந்து தானாகவே விலகிக் கொண்டார் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ்.
நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் : புதிய மசோதா தாக்கல்
புதுடில்லி : குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகளில் சிக்கும், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் புதிய சட்ட திருத்த மசோதா நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது.
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி: தமிழக அரசு திட்டம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஒரு மருந்து கிடங்கு அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் இன்சுலின் பேனாவை அறிமுகப்படுத்துகிறது சனோபி அவென்டிஸ்
மும்பை : பிரான்சை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மருந்து தயாரிப்பு நிறுவனமான சனோபி அவென்டிஸ் நிறுவனம், அடுத்த ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவில் இன்சுலின் பேனாவை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இரண்டாவது ஒரு நாள் போட்டி: இந்தியா அபார வெற்றி
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
அல்-குவைதா பற்றி முஷாரப் தந்தார் தகவல்: “விக்கி லீக்ஸ்’
வாஷிங்டன் : அல்-குவைதா இயக்கத்தை சேர்ந்த சிலர், பாகிஸ்தானின் எல்லை பகுதிகளில் பதுங்கியிருப்பதாக அப்போதைய பாக்., அதிபர் முஷாரப் ஒத்து கொண்டார் என்பது, “விக்கி லீக்ஸ்’ ஆவணங்கள் மூலம் வெளிவந்துள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்திற்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருப்பது தான், பழங்குடிப் பகுதிகள். பஜாவுர், முகமது, கைபர், ஒராக்சய், குர்ரம், வடக்கு வாசிரிஸ்தான், … Continued