பிரச்னை எழுப்பிய அதிகாரி : ஒபாமா கூறிய புதிய தகவல்
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது இந்திய வருகையின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றைக்கூறி, தனது பத்திரிகை செயலர் ராபர்ட் கிப்சின் கால்கள் கன்றிப் போய்விட்டதாகச் சொல்லி சிரித்தார்.
காஷ்மீர் பெயரை நீக்கியது ஐ.நா., : இந்தியா வரவேற்பு; பாக்., எதிர்ப்பு
புதுடில்லி : இன்னும் தீர்க்கப்படாதப் பிரச்னை என்ற நெடுநாளையப் பட்டியலில் இருந்து, காஷ்மீர் பெயரை ஐ.நா., நீக்கியுள்ளது. இவ்விவகாரம், பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தேர்ச்சி பெறாதவர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை!
சென்னை: பள்ளியிறுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 9.4 சதவீதம்
பெங்களூரு : இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம், 9.4 சதவீதம் என்ற அளவில் இருப்பதாக இந்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தண்ணீர் மட்டுமல்ல சந்திரனில் வெள்ளியும் கண்டுபிடிப்பு
பூமியில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரத்தில் உள்ளது சந்திரன். மனிதர்கள் வாழ்வதற்கு மிகத் தேவையான காற்று, தண்ணீர் ஆகியவை இல்லை.
ஸ்பெக்ட்ரம் ஊழல் சர்ச்சை-அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ராஜா
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஏலத்தில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படக் காரணமாக அமைந்தார் என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடும் இழுபறிக்குப் பின்னர் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராஜா நேற்று இரவு பதவியிலிருந்து விலகினார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசுக்கும் பங்கு:நிதின் கட்காரி குற்றச்சாட்டு
புதுடில்லி:”2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழலில் வேறு சில மத்திய அமைச்சர்களுக்கும் தொடர்பு உள்ளது என, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
மந்திரிகள் சொத்து விவரம் வெளியிட பிரதமர் ஆர்வம்
புதுடில்லி : மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியல் குறித்த முழு விவரமும், விரைவில் இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது. பிரதமர் அலுவலகம் இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது.
ராஜா விவகாரத்தில் தலித் விரோத சாதி வெறியைக் கையாளும் அதிமுக, பாஜக-திருமா தாக்கு
சென்னை: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜாவுக்கு எதிராக அதிமுகவும், பாஜகவும் தங்களது தலித் விரோதப் போக்கை காட்டியுள்ளன என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை
புதுடில்லி : “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜாவுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, இன்று மீண்டும் நடக்கிறது.