அண்ணா பல்கலை மாணவர்களுக்கு இரட்டை பிஎச்.டி., வாய்ப்பு –
சென்னை: “நான்கு ஆண்டுகளில் அண்ணா பல்கலை, அமெரிக்க பல்கலை இரண்டிலும் பிஎச்.டி., பட்டம் பெற முடியும்,” என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர்ஜவகர் தெரிவித்தார்.
தமிழக மக்களை ஏமாற்றுகிறார் கருணாநிதி: ஜெ., பாய்ச்சல்
சென்னை : காவிரி பிரச்னையில், முன்கூட்டியே சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், தண்ணீர் திறந்துவிட முடியாது’ என கர்நாடக அரசு கைவிரித்தவுடன், “சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என கருணாநிதி அறிவித்திருப்பது, தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இயற்கை ரப்பர் விலை உயர்கிறது
கொச்சி : சர்வதேசஅளவில் இயற்கை ரப்பர் உற்பத்தி குறையும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், நம் நாட்டிலும் ரப்பர் அதிகம் உற்பத்தியாகும் பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளதால், உற்பத்தி சிறிது பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வர சீன பிரதமர் வென்ஜி விருப்பம் ; வியட்னாமில் இருநாட்டு பிரதமர்கள் முக்கிய சந்திப்பு
ஹனாய்: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த நிலையில் சீன பிரதமர் வரும் டிசம்பர் மாதம் இந்தியா வர விருப்பம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவல் செயலர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.
சிவில் சர்வீசஸ் தேர்வு முறை மாற்றத்தால் பாதிப்பா?
சிவில் சர்வீசஸ் தேர்வு’ முறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம், தமிழ் மீடியத்தில் படிக்கும் கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சியை பாதிக்கும் வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.
வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் சட்டம் 8-ந் தேதி தொடங்கும்: சட்டசபை கூட்டத் தொடரில் நிறைவேறுகிறது
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ.க்கள் சுதர்சனம், ஜெயபால் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் சபை ஒத்திவைக்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில் அரசு ஏற்கனவே பிறப்பித்த 4 அவசர சட்டங்களுக்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, சட்டங்களாக நிறைவேற்றப்படுகின்றன. இதில், தமிழ் வழியில் கல்வி கற்றவர்களுக்கு … Continued
டாலர் மதிப்பு சரிவால் ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்துவருவதால் ஜவுளி, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கோவை, திருப்பூர் ஜவுளி, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து சோகம் : எரிமலை வெடித்து சிதறியதில் 28 பேர் பலி
இந்தோனேசியா : இந்தோனேசியாவில், “மெரபி’ எரிமலை வெடித்துச் சிதறியதில், 28 பேர் உடல் கருகி பலியாயினர்; 14 பேர் தீக்காயம் அடைந்தனர்.
சர்வதேச தொழிலதிபர் விருது ; டாடா பெயர் பரிந்துரை
புதுடில்லி: பார்ச்சூன் பத்திரிக்கையின் 2010 ம் ஆண்டுக்கான உலகின் தலை சிறந்த தொழிலதிபர் விருதுக்கான இறுதிப் போட்டிக்கு டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வலது கை மணிக்கட்டை வெட்டினால் என்ன…? தீவிர பயிற்சியால் மீண்டும் எழுதுகிறார் பேராசிரியர்
மூவாற்றுப்புழா : பயங்கரவாதிகளால் பேராசிரியரின் வலது கை மணிக்கட்டு பறிபோன நிலையிலும், சிகிச்சைக்கு பிறகு, தீவிர பயிற்சியால் மீண்டும் எழுதத் துவங்கியுள்ளார்.