இண்டெர்நெட் பயன்படுத்தும் சீனர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
பீஜிங்: சீனாவில் இண்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஜூன்மாத கணக்கெடுப்பின்படி 420மில்லியன்மக்கள் இண்டெர் நெட்டை பயன்படுத்தியுள்ளனர் இது கடந்த ஆண்டு டிசம்பர் கணகெடுப்பை காட்டிலும் 36 மில்லியன் அதிகமாகும்.
அமெரிக்க பொருளாதார நடவடிக்கைகள்: நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அதிருப்தி
நியூயார்க்:”அமெரிக்கா தங்களது பொருளாதார நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, மேற்கொண்டுள்ள தற்காப்பு நடவடிக்கை கொள்கைகள் ஏற்புடையதல்ல’ என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
என் பெயரில் மோசடி திட்டம்:விஜயகாந்த் எச்சரிக்கை
சென்னை:”சில அரசியல் சூதாடிகள், சமூக விரோதிகளை தூண்டிவிட்டு, என் பெயரில் மோசடி செயலில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும்’ என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அரசு பணியை ராஜினாமா செய்தால் அப்பணிக்கான பலன் முடிந்து விடும் : ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை : அரசு பணியிலுள்ள ஒருவர் ராஜினாமா செய்து விட்டால், அப்பணிக்கான அனைத்து பலன்களும் தானாகவே முடிந்து விடும் என, மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பி.இ., அட்மிஷன்
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பகுதி நேர பி.இ., படிப்பில் சேர, அக். 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு தங்க மழை!* மல்யுத்தத்தில் அபாரம்
புதுடில்லி: காமன்வெல்த் போட்டியின் மல்யுத்தத்தில் இந்தியா “ஹாட்ரிக்’ தங்கம் வென்றது. ரவிந்தர் சிங், சஞ்சய், அனில் குமார் ஆகியோர் தலா ஒரு தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்.
ரியல் எஸ்டேட் துறைக்கு அதிக கடன் எதிரொலி : வங்கிகளின் லாபம் குறைகிறது
மும்பை : வங்கிகள், கடந்த ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கி உள்ளன. இந்த கடன் வசூலாகாத நிலை ஏற்பட்டால் வரும் 2011-12-ஆம் நிதி ஆண்டில், பொதுத்துறை வங்கிகளின் வரிக்கு முந்தைய லாபம் குறைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்: முஷாரப் ஒப்புதல்
வாஷிங்டன்: “இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்தோம்’ என, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
டாக்டர்களையே நம்பி இருக்கிறது அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதல்வர் பேச்சு
போரூர்: “”தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோரின் உயிரை காப்பாற்றும் வகையில், செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் என்னை நம்பியோ, அரசாங்கத்தை நம்பியோ இல்லை. டாக்டர்களை நம்பித் தான் உள்ளது,” என்று, முதல்வர் கருணாநிதி பேசினார்.
ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவ கல்லூரி: அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களுக்கு சிக்கல்
சென்னை : ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியில் சேர அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த மாணவர்களை, கல்லூரியில் சேர்க்க நிர்வாகம் மறுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.