மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா மறுப்பு?: 40,000 பேர் மாயமானதின் எதிரொலி!
கோலாலம்பூர்: மலேசியாவுக்கு வேலைக்காக போன 40 ஆயிரம் இந்தியர்கள் மாயமானதன் காரணமாக அங்கு வரும் இந்தியர்களுக்கு விசா வழங்குவதை மலேசிய அரசு நிறுத்தி வைக்க யோசித்து வருகிறதாம்.
பணம் பறிக்கும் தனியார் கல்லூரிகள்: சுப்ரீம் கோர்ட் கண்டனம்
புதுடில்லி: ‘இந்தியாவில் 99 சதவீத கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை’ என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது : பிரணாப் திட்டவட்டம்
ஒன்பது சதவீத வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும், முதலீடுகளையும் ஏற்படுத்தியுள்ளதால், பணவீக்கத்தின் தாக்கத்தை பொதுமக்கள் சற்று பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
தமிழகத்தில் ரூ.13 ஆயிரம் கோடி முதலீட்டில் 3 புதிய தொழிற்சாலைகள்
சென்னை : தமிழகத்தில் 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மூன்று புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
புதிய சாதனை படைத்தார் சச்சின்
கொழும்பு : டெஸ்ட் அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடி, புதிய சாதனை படைத்தார் இந்தியாவின் சச்சின். இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடக்கிறது.
சேவக் அதிரடி: இந்தியா பதிலடி!* இலங்கை வீரர் சமரவீரா சதம்
கொழும்பு: கொழும்பு டெஸ்டில் சேவக் அதிரடியாக 97 ரன்கள் விளாச, இந்திய அணி வலுவான இலக்கை நோக்கி முன்னேறுகிறது.
மானாமதுரையில் டிவி தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கிறது வீடியோகான்
சென்னை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், ரூ. 1500 கோடி முதலீட்டில், டிவி தயாரி்ப்பு தொழிற்சாலை அமைக்க உள்ளதாக வீடியோகான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கண்ணாடியால் ஆன விமானம்-ஏர் பஸ் திட்டம்!
பான்பரோ: எதிர்காலத்தில் விமானங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து ஏர்பஸ் நிறுவனம் முன் வைத்துள்ள ஒரு மாடல் (Airbus Concept Plane) பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்ப சுகாதார மையங்களில் 683 அரசு மருத்துவர்கள் விரைவில் நியமனம்
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 683 அரசு டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
புதிய அனல் மின் நிலையப் பணி; ஆய்வு செய்கிறார் ஸ்டாலின்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின் நிலைய கட்டுமானப் பணியை, துணை முதல்வர் ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார்.