தொடரை சமன் செய்யுமா இந்தியா?: இலங்கையுடன் இன்று 3 வது மோதல்
கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3 வது டெஸ்ட் போட்டி, இன்று கொழும்புவில் துவங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி.
ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர்
கோபிச்செட்டிப்பாளையம்: தனது வேலையைப் பார்ப்பதற்காக ஒரு ஆசிரியையை சட்டவிரோதமாக நியமித்து அவர் மூலம் பாடம் நடத்தி வந்துள்ளார் ஒரு உதவித் தலைமை ஆசிரியர்.
மானிய வட்டியுடன் வீட்டு கடன்
மதுரை : மத்திய அரசின் நகர்ப்புற ஏழை மக்களுக்கான மானிய வட்டியுடன் கூடிய, வீடுகட்ட கடன் பெற ஏற்கனவே பலர் விண்ணப்பித்துள்ளனர்.
வி.ஏ.ஓ., தேர்வு: ஆறு லட்சம் பேர் விண்ணப்பம் விற்பனை
சென்னை: டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த 2,653 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு, இதுவரை 6 லட்சம் பேர் போட்டி, போட்டுக் கொண்டு விண்ணப்பங்களை வாங்கியுள்ளனர்.
அரசு விழாக்களில் தமிழில் தான் பேச வேண்டும் : கருணாநிதி பேச்சு
கோவை : “”தமிழக அரசு விழாக்களில் பேசும் அதிகாரிகள், இனி தமிழில் தான் பேச வேண்டும். தமிழ் தெரியாதவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு தயாராக வேண்டும்,” என, முதல்வர் கருணாநிதி கோவையில் வேண்டுகோள் விடுத்தார்.
திங்கள், வெள்ளியில் தேர்தல் கிடையாது; ஓட்டுப் பதிவை அதிகரிக்க புதிய திட்டம்! குரேஷி ஆவல்
புதுடில்லி: தேர்தலில் ஓட்டுப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க வைப்பதற்காக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களை இதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுத்த தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
குறைந்த விலையில் மருந்து தயாரிக்க இந்தியா – இங்கிலாந்து ஒப்பந்தம்
புதுடில்லி : மக்கள் வாங்கக்கூடிய விலையில் முக்கியமான மருந்துகளை தயாரிப்பதற்கான கூட்டு முயற்சிக்கான ஒப்பந்தத்தில் இந்தியாவும் இங்கிலாந்தும் கையெழுத்திட்டுள்ளன.
தரம் குறைவான இயந்திரம் வாங்கியதில் இழப்பு : ரயில்வே அதிகாரிகளுக்கு தலா ஓராண்டு சிறை
சென்னை : ரயில்வே பணிகளுக்கு தரம் குறைவான இயந்திரம் வாங்கியதில் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ரயில்வே அதிகாரிகளுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
ஒபாமாவின் செல்வாக்கு சரிகிறது பில் கிளின்டனுக்கு மீண்டும் மவுசு
வாஷிங்டன்:அமெரிக்க மக்கள், தற்போதைய அதிபர் ஒபாமாவை விட, முன்னாள் அதிபர் பில் கிளின்டனை தான் பெரும்பாலனோர் விரும்புகின்றனர்.
காமன்வெல்த் விளையாட்டு நடக்குமா?கெடு முடிந்தது
புதுடில்லி : காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான மைதானங்களை கட்டி முடிப்பதற்கான கெடு நேற்றுடன் முடிந்தது. ஆனாலும், ஒரு மைதானம் கூட முழுமையாக தயாராகவில்லை. இதனால், போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.