ஏசி’, வாஷிங் மிஷின் பயன்படுத்துவோருக்கே கட்டண உயர்வு:முதல்வர்
சென்னை : “வீடுகளுக்கு “ஏசி’, பிரிட்ஜ், வாஷிங் மிஷின், மிக்சி போன்ற நவீன வசதிகளை அதிகமாக பயன்படுத்துவோருக்குத் தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
முஷாரப் புதிய கட்சி : பாகிஸ்தான் திரும்ப ஆர்வம்
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப், விரைவில் தன் புதிய கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்றும், பாகிஸ்தான் திரும்பும் தேதியையும் அவர் கூறுவார் என்றும் அவரது கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் இப்போது இல்லை: புதிய கமிஷனர் குரேஷி
புதுடில்லி : “”தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் முன்னரே சட்டசபை தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை; தேர்தல் பற்றி ஆலோசிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது,” என புதிய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியுள்ளார்.
அமெரிக்காவில் 4,12,000 கார்களை திரும்பப் பெறுகிறது டொயட்டோ
டோக்கியோ : ஜப்பானின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயட்டோ நிறுவனம், ஸ்டீயரிங்கில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அமெரிக்காவில் 4,12,000 கார்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
கொலைகாரர் சார்லஸ் சோப்ராஜுக்கு ஆயுள் தண்டனை உறுதியானது
காத்மாண்டு : நீச்சல் உடையில் அலையும் நபர்களை கொன்ற சார்லஸ் சோப்ராஜுக்கு, நேபாள சுப்ரீம் கோர்ட் ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அபார வெற்றி : காங்கிரஸ் படுதோல்வி
ஐதராபாத் : ஆந்திர சட்டசபை இடைத் தேர்தலில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, 11 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது.
ஆந்திர இடைத்தேர்தல்: ஜெய்ய்..,யிக்கிறது தெலுங்கானா கோஷம்;காங்., – நாயுடு கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்ல
ஐதராபாத்: ஆந்திர மாநிலம் தெலுங்கானா பகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் சந்திரசேகரராவ் கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.
மாணவர்களிடம் இன்ஜினியரிங் கல்லூரிகள் கெடுபிடி: முழு கட்டணத்தையும் உடனே கட்ட நிர்ப்பந்தம்
சென்னை : பொறியியல் படிப்பில் சேரும் குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள், கல்லூரியில் கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை;
உடனடித் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம்
சென்னை: பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவுகள் வெளியாவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிடமிருந்து மின்சாரத்தை வாங்குகிறது வங்கதேசம்
டாக்கா : இந்தியாவின் அண்டைநாடான வங்கதேசம், இந்தியாவிடமிருந்து ஆண்டுக்கு 250மெகாவாட் வீதம் 35 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை வாங்க முடிவு செய்திருப்பதாக டெய்லி ஸ்டார் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.