போலி என்கவுன்டர் விவகாரம்: குஜராத் மந்திரி ஷா கைது ஆவாரா?
காந்திநகர் : குஜராத்தில் சொராபுதீன் ஷேக் என்பவரை போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்ற வழக்கில், அம்மாநில உள்துறை அமைச்சர் அமீத் ஷாவிற்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது.
தனிச் சிறப்பு அடையாள அட்டை திட்டம் : 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
புதுடில்லி : நாட்டிலுள்ள குடிமக்கள் அனைவருக்கும், தனிச்சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்கு, 3,023 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
546 தமிழாசிரியர் விரைவில் நியமனம் : ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்
சென்னை : “விரைவில் 546 தமிழாசிரியர்கள், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த 56 மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வழங்கப்படும்’ என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
கடல் வழியாக பரவிய பிலிப்பைன்ஸ் பாசி : தமிழகத்துக்கு ஆபத்து
ராமநாதபுரம் : பிலிப்பைன்ஸ் நாட்டின் பாசிகள் கடல் வழியாக, மன்னார் வளைகுடாவில் ஊடுருவியது தெரிய வந்துள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
வெளிநாட்டவர்களுக்கு வேலை : கட்டுப்படுத்த மலேசியா திட்டம்
கோலாலம்பூர்: பயங்கரவாத நடவடிக் கைகளைத் தடுக்க 50க்கும் மேற்பட்ட திட்டங் களை மலேசிய அரசு உருவாக்கியுள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் நபர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது.
விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர் மரணம்
சிட்னி: விமான விபத்து [^]க்கான காரணத்தைக் கண்டுபிடிக்க உதவும் பிளாக் பாக்ஸ் எனப்படும் கருப்புப் பெட்டியை கண்டுபிடித்த டேவிட் வாரன் (85) காலமானார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவரது தந்தை 1953ம் ஆண்டில் விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதையடுத்து, விமான விபத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் வகையில் கருப்புப் பெட்டியை வாரன் தயாரித்தார். முதலில் விமானிகள் … Continued
சபாநாயகரை நோக்கி செருப்பு வீச்சு :67 பேர் சஸ்பெண்ட்
பாட்னா : முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, பீகார் சட்டசபையில் நேற்று இரண்டாவது நாளாக கடும் கூச்சல், குழப்பம், அமளி நிலவியது. சபாநாயகரை நோக்கி செருப்பும் வீசப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் தேவை : ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை : “ஏனாம் பகுதியில் கோதாவரி ஆற்றுப் படுகையில் இயற்கை எரிவாயு திட்டத்தை அமல்படுத்தும் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை ரிலையன்ஸ் நிறுவனம் கருத்தில் கொள்ள வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திமுக மட்டும் விற்பனை வரியைக் குறைக்காதது ஏன்?- விஜயகாந்த் கேள்வி
சென்னை: இந்தியாவிலேயே தி.மு.க அரசுதான் பெட்ரோலியப் பொருட்களின் மீது உயர்ந்தபட்சமாக வரி விதிக்கிறது. ஆந்திரா டெல்லியில் உள்ள மாநில அரசுகள் விற்பனை வரியை குறைக்கும்போது தமிழக அரசு மட்டும் விற்பனை வரியை குறைக்க மறுப்பானேன்? என்று கேட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
கார்ப் ஹோம் ஸ்மார்ட்’ மற்றும் ‘கார்ப் வைகிள் ஸ்மார்ட்’ திட்டங்கள் : கார்ப்பரேஷன் வங்கி அறிமுகம்
மங்களூரு : இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான கார்ப்பரேஷன் வங்கி, 8.25 சதவீத வட்டி விகிதத்திலான புதிய வீடு மற்றும் வாகனக் கடனுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.