உலகின் முதல் விமானியில்லா போர் விமானம்!: கண்டம் விட்டு கண்டம் பறக்கும் திறன் கொண்டது!!
லண்டன்: கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி இலக்குகளை மிகச் சரியாகத் தாக்கும், எதிரி நாட்டு போர் விமானங்களை வழியில் மறித்துத் தாக்கும் திறன் கொண்ட உலகின் முதல் விமானியில்லா போர் விமானத்தை பிரிட்டன் தயாரித்துள்ளது.
இனி 2 மற்றும் 17ம் தேதிகளில் பெட்ரோல் விலை மாறும்
புதுடில்லி: பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்படவுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப இந்த விலைகள் முடிவு செய்யப்படும்.
தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன: மு.கருணாநிதி
தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்தப் பாராட்டுகளால் மேலும் ஊக்கம் பெற்று பணியாற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
கால்பந்து போட்டி நடத்தி ஆட்களை தேர்வு செய்யும் நக்சலைட்கள்
கோல்கட்டா : கால்பந்து போட்டிகளை நடத்தி, அதில் சிறப்பாக விளையாடும் இளைஞர்களை மட்டுமே நக்சலைட்கள் தங்கள் அமைப்புக்கு தேர்வு செய்கின்றனர் என, தகவல் வெளியாகியுள்ளது.
72 நாட்கள் நீடிக்கக்கூடிய பேட்டரியுடன் கூடிய மொபைல் அறிமுகப்படு்த்துகிறது ஜென் மொபைல்ஸ்
புதுடில்லி : இந்தியாவில் வளர்ந்து வரும் மொபைல் நிறுவனமான ஜென் மொபைல் நிறுவனம், புதிய 72 நாட்கள் நீடிக்கக்கூடிய பேட்டரியுடன் கூடிய மொபைலை அறிமுகப்படுத்துகிறது.
அமெரிக்க பொருளாதாரம் என்ன ஆகும்?இந்தியாவுக்கு ஆபத்தில்லை என கணிப்பு
வாஷிங்டன்:”அமெரிக்க பொருளாதாரம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது’ என்று, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அப்சல் குரு என்ன மருமகனா? கட்காரி பேச்சு: காங்., கண்டனம்
டேராடூன் : “பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவை தூக்கில் போடாமல் தாமதம் செய்கிறீர்களே, அவர் என்ன உங்கள் மருமகனா’ என காங்கிரஸ் கட்சிக்கு, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கேள்வி எழுப்பியுள்ளார்.
டீசல் விலை உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு : ஆகஸ்ட் 1 முதல் ஸ்டிரைக் நடத்த பரிசீலனை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும், டோல்கேட் வரியை குறைக்கக் கோரியும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் லாரி ஸ்டிரைக் மேற்கொள்வது குறித்த முடிவு எடுக்க, அகில இந்திய மோட்டார் காங்கிரசின் நிர்வாகக்குழு கூட்டம், வரும் 12ல் டில்லியில் கூடுகிறது.
ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை
புதுடில்லி:சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரே நாளில், 75 தீர்ப்புகளை வழங்கி நீதிபதி சுதந்திரகுமார், உலக சாதனை படைத்துள்ளார்.மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியானவர் சுதந்திரகுமார்.
அரசு கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் இல்லை
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதுகலை பட்டப் படிப்பில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.