தாக்குதலில் இந்திய மாணவர் காயம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் ஒருவரை, வன்முறை கும்பல் தாக்கியுள்ளது.ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்.
தகவல் தொழில்நுட்ப பெங்களூரு முடங்கியது:ஆந்திராவில் சந்திரபாபு, வெங்கையா கைது
பெங்களூரு:பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நடந்த “பந்த்’ காரணமாக கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை : என்.எல்.சி., தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, நேற்று நள்ளிரவே தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங் துவங்கியது
சென்னை: பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங் இன்று (ஜூலை 5ம் தேதி) துவங்கியது.
30 ஆயிரம் பேரை பணியமர்த்த டிசிஎஸ் திட்டம்
மும்பை : இந்த நிதியாண்டில், 30 ஆயிரம் பேரை புதிதாக பணியமர்த்த திட்டமிட்டுள்ள டாடா கன்சல்டன்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா நிறுவனத்தின் வருடாந்திர கூட்டுக்குழு கூட்டம் மும்பையில், டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா தலைமையில் நடைபெற்றது.
பாக்கு மட்டை உணவு தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி
வாழப்பாடி : வாழப்பாடி பகுதியில் தயாரிக்கப்படும் பாக்கு மட்டை உணவுத் தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நன்றாக தூங்கினால் ஞாபக சக்தி வளரும்:ஆய்வில் கண்டுபிடிப்பு
லண்டன்:ஏதாவது முக்கியமான ஒன்றை மறந்து விட்டீர்களா? அப்படியானால் ஒரு குட்டித் தூக்கம் போடுங்கள்; மறந்தது ஞாபகம் வந்து விடும். ஆம்; ஞாபக சக்தியை வளர்க்க தூக்கம் உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ரூ.9 ஆயிரம் கோடியில் உருவான டெல்லி விமான நிலையம் பிரதமரால் திறந்து வைப்பு
உலகத்திலேயே 6-வது இடத்தை பிடித்து சாதனை படைக்கும் ரூ.9 ஆயிரம் கோடியில் உருவான டெல்லி விமான நிலையத்தை பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தார்.
மிக மிக மலிவான குவெர்ட்டி போன் : ஏர்போன் திட்டம்
மும்பை : அண்மைக் காலத்தில் மொபைல் போன் விற்பனைச் சந்தையில் நுழைந்த ஏர்போன் இந்தியா நிறுவனம், அண்மையில் பட்டி ஏக்யூ9 மற்றும் பட்டி ஏக்யூ9+என இரண்டு போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்து ள்ளது.
டேங்கர் லாரிகளுக்கு நிபந்தனை: உரிமையாளர்களின் மனு தள்ளுபடி
சென்னை:விபத்துக்குள்ளாகும் டேங்கர் லாரிகளுக்கு தண்டனை விதிக்க வகை செய்து ஆயில் நிறுவனங்கள் பிறப்பித்த நிபந்தனையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.