ஐ.டி., பி.பி.ஓ., துறைகளில் அதிகப் பணி நியமனங்கள்
மத்திய அமைச்சகத்தின் தொழிலாளர் நலத்துறை சர்வதேசப் பொருளாதார நெருக்கடிக்குப் பின் வேலை வாய்ப்புகள் குறித்து சமீபத்தில் 6வது காலாண்டு ஆய்வை நடத்தியது.
மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார் ஜெ.,:துணை முதல்வர் பேச்சு
தஞ்சாவூர்:””நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய சட்டசபை வளாகத்தில் கூட்டம் நடத்தப்பட மாட்டாது; பழைய வளாகத்திலேயே கூட்டம் நடத்தப்படும் என்று கூறிய ஜெயலலிதா, மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை என்று தெரிந்து தான் பேசுகிறார்,” என்று துணை முதல்வர் ஸ்டாலின், தஞ்சை திருமண விழாவில் பேசினார்.
பெட்ரோல், டீசல் விலை இனி எவ்வளவு : இன்று மத்திய அரசு முடிவு நிச்சயம்
புதுடில்லி : பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை இன்று உயரலாம். பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 25 முதல் 50 ரூபாய் வரையும் உயரும் என, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
அமைச்சர் மன்னிப்பு கேட்காவிட்டால் செம்மொழி மாநாட்டை நடத்த விடமாட்டோம் : கொ.மு.க., மகளிரணி
கோவை : “கள் இறக்க அனுமதி கேட்டு போராடும் கொங்கு மண்டல பெண்களை தொடர்ந்து இழிவாக பேசும் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்படும்; தவிர, செம்மொழி மாநாட்டையும் நடத்த விடமாட்டோம்’ என, கொங்கு முன்னேற்றக் கழக மகளிரணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்கம், பஞ்சாபிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம்
கோவை : தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கூறினார்.
இந்திய அணிக்கு மீண்டும் அவமானம் : ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது
ஹராரே : முத்தரப்பு தொடரில் இந்திய அணி அனுபவம்இல்லாத ஜிம்பாப்வே அணியிடம் மீண்டும் தோல்வி அடைந்து, பெரும் அவமானத்தை சந்தித்தது. பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதால் 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
மாத சம்பளம் ஆயிரங்களில்: சொத்து மதிப்போ கோடிகளில்
மும்பை : ஊழல் செய்து, “கோடிகளை’ அள்ளுவதில், அரசியல்வாதிகள் மட்டும் தான் சூரர்கள் என, நீங்கள் கருதினால், அந்த கருத்தை உடனே மாற்றுங்கள். அரசு அதிகாரிகள் பலர், “பலே கில்லாடி’களாக உள்ளனர்.
சட்டம் படித்தாலும், வக்கீலாக பதிவு செய்ய இனி தகுதி தேர்வு
புதுடில்லி: சட்டபடிப்பு முடித்தவர்கள், வக்கீலாக பதிவு செய்ய, இனி தகுதி தேர்வு எழுத வேண்டும்.
ராஜ்யசபா காங்கிரஸ் வேட்பாளர் யார்?:இன்றோ, நாளையோ அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியின் ஒரே ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டுக்கு வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் ஏறத்தாழ இறுதி செய்துவிட்டதாக தெரிகிறது.
நேபாள விவகாரம்: இந்தியாவுக்குஅமெரிக்கா யோசனை
காத்மாண்டு:”நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் தேக்க நிலையை போக்குவதற்கு இந்தியா முன்வர வேண்டும்’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.