பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 உயரும் : இன்னும் மூன்று நாளில் அறிவிக்க அரசு திட்டம்
புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 வரை உயரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 7ம் தேதி இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
ஓய்வூதிய பலன்கள் முழுவதையும் நிறுத்தி வைக்க முடியாது: ஐகோர்ட்
சென்னை: “ஊழியர்களுக்கான ஓய்வூதிய பலன்கள் முழுவதையும் போக்குவரத்துக் கழகம் நிறுத்தி வைக்க முடியாது’ என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் இருகூரைச் சேர்ந்தவர் பால்ராஜ்.
அடிப்படை வசதி இல்லாத 66 பொறியியல் கல்லூரிகள்!
சென்னை: அடிப்படை வசதிகளே இல்லை என, நோட்டீஸ் அனுப்பப்பட்ட கல்லூரிகள் சிலவற்றில், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் 10 ஆண்டுகளுக்கும் மேல் நடத்தப்படுபவை என தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல் : உலக நாடுகள் பல எதிர்ப்பு
ஜெருசலம் : நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல் மீது, இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும் பல அ.தி.மு.க.,வினர் தி.மு.க.,வில் சேர உள்ளனர் : ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை : “”அ.தி.மு.க., பிரமுகர்கள் இன்னும் பலர், விரைவில் தி.மு.க.,வில் சேர உள்ளனர்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
நாசாவை கை கழுவும் இந்திய விஞ்ஞானிகள் : அலறுகிறது அமெரிக்கா
மும்பை : “அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய விஞ்ஞானிகள், தங்கள் தாய் நாட்டுக்கு திரும்பிச் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், எதிர்கால விண்வெளி திட்டப் பணிகளுக்கு வெளிநாட்டு விஞ்ஞானிகளை சார்ந்து இருக்காத சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்’என, “நாசா’ அதிகாரி சார்லஸ் போல்டன் கூறியுள்ளார்.
ஒன்பதாம் வகுப்பில் செய்முறை தேர்வு அறிமுகம்
சிவகங்கை: இக்கல்வி ஆண்டு முதல், பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறைத் தேர்வு (பிராக்டிகல்) அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை வரம்புக்குள் கொண்டு வர அரசு பரிசீலனை
புதுடில்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி,சி.சி.ஐ.,), சங்கங்கள் பதிவுச் சட்ட வரம்பிற்குள் கொண்டு வந்து அடக்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஐ.பி.எல்., விவகாரம் ஏற்படுத்திய பரபரப்பை அடுத்து, பல்வேறு அமைப்புகளின் செயலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கருத்து அதிகமாக எழுந்திருக்கிறது.
எகிப்துக்கான தேயிலை ஏற்றுமதியை உயர்த்த இந்திய நிறுவனங்கள் திட்டம்
கோல்ட்டா: நடப்பு ஆண்டில் எகிப்து நாட்டுக்கான தேயிலை ஏற்றுமதியை உயர்ந்த இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
1,200 முன்னாள் பெண் புலிகளுக்கு வேலைவாய்ப்பு
கொழும்பு, மே 30: முன்னாள் பெண் புலிகள் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பை இலங்கையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அளிக்க முன்வந்துள்ளது.