புல்லட் புரூப் கார்: இறக்குமதிக்கு அனுமதி
புதுடில்லி: இந்தியாவின் பிரபல தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, புல்லட் புரூப் வசதி கொண்ட பி.எம்.டபிள்யூ., காரை இறக்குமதி செய்து, டில்லி பகுதியில் பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
திருப்பதி கோவில் உண்டியலில் அம்பானி மனைவி போட்டது என்ன?
திருப்பதி : தன் அணியான மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் குழு, இறுதிப் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, திருப்பதியில் தரிசனம் செய்த முகேஷ் அம்பானியின் மனைவி, இரண்டு சூட்கேஸ் பணத்தையும் ஒரு பெரிய பை நிறைய தங்க நகைகளையும் உண்டியலில் போட்டார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியை படம் பிடிக்க டிவி நிறுவனங்களிடம் ரூ.3.5 கோடி கேட்ட சோயப்
லாகூர்: தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய பாகிஸ்தான் டிவி நிறுவனங்களிடம் ரூ. 3.5 கோடி கேட்டுள்ளார் சோயப் மாலிக். ஆனால் எந்த டிவியும் அதை ஏற்கவில்லையாம்.
கொழும்பில் நடைபெறும் திரைப்பட விழாவை தமிழ் நடிகர்கள் புறக்கணிக்க வேண்டும்: சீமான்
கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவை தமிழ் திரைப்பட நடிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் தனது அறிக்கையில் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
அட்சய திருதியை எதிர்பார்த்து தங்கம் இறக்குமதி அதிகரிப்பு
மும்பை: மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி 27.8 டன்னாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் தங்கத்தின் விலை சற்று குறைந்தது தான்.
200 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழிமீண்டும் உருவாக்கப்படும் அதிசயம்
நியூயார்க்:அமெரிக்கத் தீவு ஒன்றில் 200 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழிகளை மீண்டும் உருவாக்குவதில் அந்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று ஈடுபட்டுள்ளது.
வக்கீல்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பிடிக்கும்: முதல்வர் கருணாநிதி உருக்கம்
சென்னை:”கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது ஒன்றும் பெரிதல்ல; அதுவும் வக்கீல்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது எனக்கு பிடிக்கும்,” என முதல்வர் கருணாநிதி பேசினார்.
பிளஸ் 2 தேர்வில் கடினமான கேள்வியால் தேர்ச்சி சதவீதம் விழுமோ?
பிளஸ் 2 பொதுத்தேர்வில் இந்தாண்டு கணித தேர்வில் அனைத்து கேள்விகளும் கடினமாக இருந்ததால், ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோப்பை வென்றது சென்னை கிங்ஸ் : சுரேஷ் ரெய்னா சூப்பர் ஆட்டம்
மும்பை : ஐ.பி.எல்., பரபரப்பான பைனலில் சுரேஷ் ரெய்னாவின் சூப்பர் ஆட்டம் கைகொடுக்க, சென்னை கிங்ஸ் அணி கோப்பை கைப்பற்றி அசத்தியது. சச்சின் களமிறங்கியும் 22 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாம் இடம் பெற்று ஆறுதல் தேடியது.
நாளை பாரத் பந்த்: தமிழகத்தி்ல் பஸ்-ரயில்கள் ஓடும்; கடைகள் திறந்திருக்கும்
சென்னை: தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 27) அதிமுக [^] தலைமையில் மதிமுக, இடதுசாரிகள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடும் என்று அரசு அறிவித்துள்ளது.