பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற 27ல் வெட்டுத் தீர்மானம்
புதுடில்லி:பெட்ரோல், டீசல் மற்றும் உர விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 27ம் தேதி, பார்லிமென்டில் வெட்டுத் தீர்மானம் கொண்டுவர இடதுசாரிகள் உட்பட 13 கட்சிகள் தீர்மானித்துள்ளன. அத்துடன் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன.
குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி
சென்னை : குடும்பத்தில் முதல் பட்டதாரியான மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் போது, கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பது தொடர்பான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு ரூ. 5 லட்சம் கடன் – தமிழக அரசின் புதிய திட்டம்
சென்னை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க 15 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் புதிய திட்டம் இந்த நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது.
முசிறி மாணவர்கள் 262 பேர் பிளஸ் 2 மறுதேர்வு எழுதினர்
பிளஸ் 2 இயற்பியல் பாடத்திற்கான விடைத்தாள் கட்டு காணாமல் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் 262 மாணவ-மாணவிகள் மறுதேர்வு எழுதினர்.
தன்னம்பிக்கையை வளர்க்க மாணவர்களை தீ மிதிக்கச் செய்த பள்ளி
சூரத்தில் உள்ள ரிவர்டேல் என்ற பள்ளியில் 10 முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களை தன்னம்பிக்கை வளர்ப்பு என்ற பெயரில் கண்ணாடிச் சிதறல்களும், நெருப்பும் உள்ள படுகை மீது காலணி இல்லாமல் நடக்கச் செய்துள்ளது பள்ளி நிர்வாகம்.
டிஎன்பிஎஸ்சி நேர்முகத் தேர்வில் செம்மொழி மாநாடு குறித்து அதிக கேள்விகள்
சென்னை: இந்து சமய அற நிலையத்துரை நிர்வாக அதிகாரி பணிக்கான நேர்முகத் தேர்வில் கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்த கேள்விகளே அதிகம் இடம் பெற்றதாம்.
காபூல் மாதுளை வந்தாச்சு
மதுரை: மதுரையில் சில வாரங்களுக்கு பின், மீண்டும் காபூல் மாதுளை வரத்து ஆரம்பித்துள்ளது. கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழக அரசு மனம் மாறியது : முல்லை பெரியாறு குழுவில் ஏ.ஆர்., லட்சுமணன் இடம் பெறுகிறார்
சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் பிடிவாதம் விலகியது. இது தொடர்பாக விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் அமைத்த ஐவர் குழுவில் தமிழக அரசு சார்பில் பிரதிநிதி இடம் பெறுவார் என முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார்.
ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம் பெற்ற 2 நிறுவனங்களில ஐடி ரெய்டு
மும்பை: ஐபிஎல் போட்டிகளை டிவிகளில் ஒளிபரப்பு செய்யும் உரிமம் பெற்றுள்ள இரண்டு நிறுவனங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இனி அரசுக்கு 50% இடங்கள்: புதுவையில் நடப்பாண்டு முதல் அமல்
புதுச்சேரி, ஏப். 20: புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலைப் படிப்புகளில் நடப்பு ஆண்டில் அரசுக்கு 50 சதவீதம் இடங்கள் பெறப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் இ. வல்சராஜ் கூறினார்.