சமச்சீர் கல்வி தீர்ப்பை அரசு வாழ்த்தி, வரவேற்க வேண்டும்: கருணாநிதி
சென்னை: “”சமச்சீர் கல்விக்கு வரும் தீர்ப்புக்கு வாழ்த்தும், வரவேற்பும் கூற வேண்டிய கடமை, தமிழக அரசுக்கு உள்ளது,” என, முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட் உத்தரவு குறித்து, கருணாநிதி அளித்த பதில் விவரம்:
ராஜா, கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது குறித்த விவாதம் நாளை துவங்குகிறது
புதுடில்லி: “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., எம்.பி., கனிமொழி, தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதன் மீதான விவாதம், நாளை (ஜூலை 21) துவங்கும்’ என, டில்லி சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது.
சமச்சீர் கல்வி மேல்முறையீட்டு மனு மீது விசாரணை எப்போது?
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் செவ்வாய்கிழமை தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வியாழனன்று விசாரணை நடைபெறும் என தெரிகிறது.
அமெரிக்கா தள்ளாட்டம்: அச்சப்படுகிறது சீனா
பீஜிங்: அமெரிக்கா தற்போது தனது பெரும் கடன் சுமையில் இருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு
சென்னை : தங்கம், வெள்ளி சந்தையில் இன்று விலை குறைவு காணப்படுகிறது.
நில அபகரிப்பு புகார்: கைது அபாயத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்
சேலம்: நில அபகரிப்பு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.
பிற மாநில மாணவர்களுக்கு ஜுலை 24ம் தேதி கலந்தாய்வு-
பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்திருக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜுலை 24ம் தேதி நடைபெற உள்ளது.
மின் திருட்டு, மின்வாரிய சொத்து திருடுவோர் மீது குண்டாஸ்! : தயாராகிறது அரசின் அடுத்த திட்டம்
மின் திருட்டால் நஷ்டமடைந்துள்ள தமிழக மின்வாரியம், மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
கொள்முதல் விலையை உயர்த்துகிறது தனியார் பால் நிறுவனம்
சேலம் : தனியார் பால் நிறுவனம், பால் கொள்முதல் விலையை, லிட்டருக்கு, 1.25 ரூபாய் உயர்த்தி வழங்க திட்டமிட்டுள்ளது.
லட்சக்கணக்கில் அகதிகள் குவிகின்றனர் : பசி, பட்டினியால் சாகும் அவலம்
மொகதிசு : “உலகிலேயே சோமாலியா நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி, பசி, பட்டினி, மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர்’ என ஐ.நா.,வின் அகதிகளுக்கான உயர் கமிஷன் தெரிவித்துள்ளது.