விரல் ரேகை பதிவுக்கு அரசு டாக்டர்கள் எதிர்ப்பு
மதுரை:அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் வருகை பதிவை கண்காணிக்க, விரல் ரேகை பதிவு கருவி அமைப்பதற்கு, டாக்டர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியாவுக்கு ரூ.21 கோடி: அமெரிக்கா உதவி
வாஷிங்டன், ஏப்.15: பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியாவுக்கு சுமார் ரூ.21.60 கோடியை அமெரிக்கா வழங்கவுள்ளது.
திமுகவினர் பேட்டி தர கருணாநிதி கட்டுப்பாடு
சென்னை, ஏப்.15: தி.மு.க. தொடர்பான செய்திகளை என்னையும், பொதுச் செயலாளர் அன்பழகனையும் தவிர, வேறு யாரும் வெளியிடக் கூடாது என்று அக் கட்சியின் தலைவரும் முதல்வருமான கருணாநிதி கட்டுப்பாடு விதித்துள்ளார்.
சீனாவில் பூகம்பம், திபெத் பீடபூமியில் 400 பேர் பலி கட்டடங்கள் தரைமட்டம்: 10 ஆயிரம் பேர் காயம்
பீஜிங்:சீனாவின் திபெத் பீடபூமியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 400 பேர் பலியாயினர்; 10 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், 2008ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சம் பேர் பலியாயினர்.
எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கு மே 17ம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்
சென்னை : எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு, மே மாதம் 17ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங், வரும் ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரை நடக்கிறது.
முழு உடல்’ காட்டும் ஸ்கேனர் கருவிகள் :இந்தியாவிலும் பொருத்த திட்டம்?
புதுடில்லி : தற்போது அமெரிக்க விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்டு வரும், முழுஉடல் பரிசோதனைக் கருவிகள் (ஸ்கேனர்), விரைவில் இந்திய விமான நிலையங்களிலும் வர உள்ளது.
மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி 6 மடங்கு அதிகரிப்பு
புதுடில்லி: இந்தியா, தங்கம் பயன்பாட்டில் உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. நம் நாட்டில், நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி, சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 6 மடங்கு (4.80 டன்) அதிகரித்து 27.70 டன்னாக உயர்ந்துள்ளது.
விவாகரத்துக்குப்பின் மனைவி வீட்டில் கணவன் வசிக்கலாம்: கோர்ட் தீர்ப்பு
மும்பை : விவாகரத்து கோரிய தம்பதிக்கு அதை வழங்கிய கோர்ட், மனைவியின் பெயரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கணவர் தொடர்ந்து வசிக்கலாம் என, உத்தரவிட்டது.
இளைஞர் காங். தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய வாசன் கோஷ்டி – 2வது இடத்தில் கார்த்தி
சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கோஷ்டியே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேசமயம், புத்தெழுச்சியுடன் செயல்பட்ட கார்த்தி சிதம்பரம் கோஷ்டியினர் 2வது இடத்தைப் பிடித்து நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.