அமெரிக்காவில் தமிழக விஞ்ஞானிக்கு முக்கியத்துவம்
ஹெüஸ்டன், ஏப்.11: அமெரிக்காவில் உள்ளமின் தொகுப்புகளில் புதிய தொழில்நுட்பத்தை தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கட் செல்வமாணிக்கம் கொண்டு வரவுள்ளார்.
எனது பெயரில் பேரவை அமைத்தால் கடும் விளைவுகள் ஏற்படும்: மு.க.அழகிரி எச்சரிக்கை
முக அழகிரி பேரவை என்ற பெயரில் எந்த அமைப்பையும் நான் அங்கீகரிக்கவில்லை. அப்படி ஏதாவது அமைப்பு செயல்பட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மத்திய அமைச்சர் முக அழகிரி எச்சரித்துள்ளார்.
கார்கள் விலை விரைவில் அதிகரிக்கும்
புதுடில்லி: ‘பொருட்களின் விலை, வட்டி வீதம் மற்றும் எக்சைஸ் வரி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால், கார் தயாரிப்பாளர்கள், தங்களின் உற்பத்தி பொருள் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்’ என, இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சாதாரண வீடுகளுக்கு மின் கட்டணம் உயராது: முதல்வர் கருணாநிதி
சென்னை, ஏப்.9: சாதாரண வீடுகளுக்கு மின் கட்டணம் உயராது என்று முதல்வர் கூறினார். அதே சமயம், தாங்கக் கூடியவர்களுக்கு சிறிய அளவில் மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு: நுழைவுச் சீட்டு கிடைக்காதவர்கள் டிஆர்ஓவிடம் அனுமதிச் சீட்டு பெறலாம்
கிருஷ்ணகிரி, ஏப்.8: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குருப்-2 எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு கிடைக்காதவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து அனுமதிச் சீட்டு பெற்று தேர்வெழுதலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் பி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ராஜபட்ச கூட்டணி
கொழும்பு, ஏப்.9: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மகிந்த ராஜபட்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
ரயில்வே மேம்பாலத்தில் தலைகுப்புற கார்… கவிழ்ந்தது : அரைகுறை பணியால் பல்லாவரத்தில் விபரீதம்
பல்லாவரம் : அரைகுறையாக பணிகள் முடிக்கப்பட்டுள்ள பல்லாவரம் ரயில்வே மேம்பாலத்தின் மீது வேகமாக சென்ற ஒரு கார், ரயில்வே தண்டவாளத்தின் மீது தலைகுப்புற விழுந்தது.
திறந்தநிலை பல்கலை பட்டம் வாங்கினால் அரசு வேலை கிடைக்குமா?
சென்னை:”எஸ்.எஸ்.எல்.சி., படிக்காமல் திறந்தநிலை பல்கலைகளில் பட்டம் பெறுவோரை அரசு வேலையில் நியமிக்க முடியாது,” என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அதிக சம்பளம் பெற்று தரும் மரைன் இன்ஜினியரிங், நாட்டிக்கல் சயின்ஸ்: நரசய்யா பேச்சு
மதுரை: ”மரைன் இன்ஜினியரிங், நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புகள், உலகில் அதிக சம்பளம் பெற்று தருவதாகவுள்ளன,” என, மதுரையில் நேற்று நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் கடல் சார் துறை நிபுணர் கே.ஆர்.ஏ.நரசய்யா பேசினார்.
மின்வெட்டு குறித்து பொதுநல மனு: அரசுக்கு அனுப்பி வைக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை: ‘தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னையை தீர்க்க, தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரும் மனுவை, அரசு பரிசீலிக்கும்’ என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.