அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் விரைவில் சித்த மருத்துவ பிரிவு: ஸ்டாலின்
சென்னை:”தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சித்த மருத்துவ பிரிவு துவக்கப்படும். மக்கள் நலன் கருதி, நவீன மருத்துவர்களும், சித்த மருத்துவர்களும் பேதமின்றி பணியாற்ற வேண்டும்,” என, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
ஆளுநர் அனுமதி இன்றி 1200 போலீஸôரை தேர்வு செய்ய மாயாவதி அரசு முடிவு
லக்னெü, ஏப். 2: ஆளுநரின் உரிய சட்ட அனுமதி இன்றி 1,200 முன்னாள் ராணுவத்தினரை காவல் துறையில் சேர்க்க மாயாவதி தலைமையிலான உத்தரப் பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்குடன் திருமணம்: சான்றிதழை வெளியிட்டார் ஆயிஷா
கராச்சி, ஏப். 2: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்குடன் தனக்கு திருமணம் நடந்துள்ளதற்கு ஆதாரமாக திருமணச் சான்றிதழை வெளியிட்டுள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷா சித்திக்.
பிளஸ் 2 தேர்வில் தவறான கேள்விகள் : 18 மதிப்பெண்கள் அளிக்க உத்தரவு
சென்னை : பிளஸ் 2 வேதியியல், கணக்குப்பதிவியல் கேள்வித்தாள்களில் தவறான கேள்விகள் இடம் பெற்றதற்காக, அதற்குரிய 18 மதிப்பெண்களை அளிப்பதற்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இலங்கை வடக்குப் பகுதி மறுவாழ்வுப் பணிகளில் இந்தியா தீவிரம்
கொழும்பு, ஏப். 1: இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதில் இந்தியா தீவிரமாகப் பங்காற்றி வருகிறது என, இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே. கந்தா தெரிவித்தார்.
திமுக தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன்: அழகிரி
சென்னை, ஏப்ரல் 1: திமுக தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவேன் என்று மு.க.அழகிரி வியாழக்கிழமை தெரிவித்தார்.
விரைவில் ஆப்பிரிக்காவிலும் ஏர்டெல் சேவை
புதுடில்லி : மிக விரைவில் ஆப்பிரிக்கா கண்டத்திலும் தனது தொலைத் தொடர்பு சேவையை விரிவுபடுத்த பார்தி ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.
மாருதி சுசூகிக்கு பைப்லைன் மூலம் இயற்கை எரிவாயு சப்ளை
புதுடில்லி: அரியானாவின் மானேசர் பகுதியில் அமைந்துள்ள மாருதி சுசூகி நிறுவன தொழிற்சாலைக்கு, பைப்லைன் மூலம் இயற்கை எரிவாயு வினியோகத்தை, ‘கெய்ல்’ இந்தியா நிறுவனம் துவக்கியது.
தொண்டர்கள் தங்களை அழித்துக் கொள்ளக் கூடாது: அனைத்து கட்சியினருக்கும் வைகோ அறிவுரை
ஈரோடு: ”எந்த இயக்கத்திலும் தொண்டர்கள் தங்களை அழித்துக் கொள்ள கூடாது. தோல்வியைத் தாங்கி எதிர்த்து போராடும் தைரியம் இருக்க வேண்டும்,” என, வைகோ பேசினார்.ம.தி.மு.க., சார்பில் மே 28ல் நடக்கும் கேரள எல்லை முற்றுகைப் போராட்டம் குறித்து விளக்குவதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ ஈரோடு மாவட்டத்தில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
எல்லா குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி : வரலாற்று சட்டம் இன்று அமல்
புதுடில்லி : வரலாற்று சிறப்புமிக்க சட்டமான, ஆறிலிருந்து 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு ‘கல்வி அடிப்படை உரிமை மற்றும் கட்டாயக் கல்வி’ சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.