சச்சினுக்கு ரூ.20 லட்சம் அபராதம்
மும்பை, மார்ச் 31: குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவர்கள் வீசப்படாததால் மும்பை இண்டியன்ஸ் அணித் தலைவர் சச்சின் டெண்டுல்கருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை முன் கூட்டியே அறியும் சக்தி தேரைகளுக்கு உண்டு
லண்டன், மார்ச் 31: நிலநடுக்கம் ஏற்படப்போவதை சுமார் 5 நாட்களுக்கு முன்னதாகவே அறியும் சக்தி தேரைகளுக்கு உண்டு என ஆய்வில் தெரியவந்துள்ளது.
உங்களிடம் பான்கார்டு உள்ளதா? இல்லையென்றால் நீங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும்
புதுடில்லி: உங்களிடம் பான்கார்டு உள்ளதா? இல்லையென்றால் உடனே பான்கார்டுக்கு அப்ளை செய்யுங்கள்! இல்லையென்றால் உங்கள் வருமான வரி தொகையில் 20 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும்.
சட்டசபையில் ‘100’ஐ தொட்டது தி.மு.க.,
சட்டசபையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 100ஐ தாண்ட, தி.மு.க., நான்கு ஆண்டுகளாக முயற்சித்து, தற்போது தான் செஞ்சுரி அடிக்க முடிந்துள்ளது. சபாநாயகரையும் சேர்த்து, தி.மு.க., உறுப்பினர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
மே 3ம் தேதி முதல் பொறியியல் விண்ணப்பம்; ஜூன் 28ல் கவுன்சிலிங்
சென்னை : ”பொறியியல் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பங்கள் மே 3ம் தேதி முதல் வழங்கப்படும். ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறும்,” என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
5ம் தேதி துவங்குவதாக இருந்த லாரி ஸ்டிரைக் வாபஸ் : கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசு உத்தரவு
நாமக்கல் : ” பதினைந்தாயிரம் ரூபாய் செலுத்தினால் நாடு முழுவதும் லாரிகள் இயக்க அனுமதி வழங்கப்படும் என, மத்திய அரசு உறுதியளித்துள்ளதால், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் (லாரி உரிமையாளர்கள் சங்கம்) சார்பில், வரும் 5ம் தேதி முதல் நடக்க இருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பல்கலைகளுக்கு அனுமதி வீண்: நோபல் ராமகிருஷ்ணன் பேட்டி
லண்டன்:இந்தியாவில், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்படுவதால் பெரிய பலன் ஏதும் ஏற்படாது என, நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உலகில் நீளமான புத்தக தலைப்பு: கின்னஸ் சாதனைக்கு ஸ்ரீவி., தொழிலாளி முயற்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் செட்டியக்குடி நகை தொழிலாளி மணிகண்டன், கின்னஸ் சாதனைக்காக, புத்தக தலைப்பை 330 வார்த்தைகளில் அமைத்துள்ளார்.
டிபாசிட் இழப்பின் பின்னணியில் சதி : ஜெ., குற்றச்சாட்டு
சென்னை : பென்னாகரம் தேர்தலில் தி.மு.க., வென்றதன் பின்னணியில் மிகப் பெரிய சதி நடந்திருப்பதாக, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டி உள்ளார்.
வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள பணம் நாளை முதல் தினமும் வட்டி அமல்
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில், வங்கிகளில், சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் கணக்கில் உள்ள பணத்திற்கு, ஏப்ரல் 1ம் தேதி (நாளை) முதல் தினசரி அடிப்படையில் வட்டி வீதம் கணக்கிடப்பட உள்ளது.