பென்னாகரம் ஓட்டு எண்ணிக்கை : தி.மு.க , 4 வது சுற்றில் 10 ஆயிரம் ஓட்டுக்கள் முன்னிலை பா.ம.க., வுக்கு 2 வது இடம்
தர்மபுரி : இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 4 வது சுற்றின்படி தி.மு.க., வேட்பாளர் இன்பசேகரன் 17 ஆயிரத்து 734 ஓட்டுக்கள் பெற்று தற்போது பா.ம.க., வேட்பாளரை விட 10 ஆயிரத்து 325 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார்.
ஒபாமா திடீர் ரகசிய ஆப்கானிஸ்தான் பயணம்
காபூல்: அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்றிரவு திடீரென ஆப்கானிஸ்தான் வந்தார்.
டேங்கர் லாரியில் ரூ. 3 கோடி கஞ்சா கடத்தல் விசாரணையில் கும்பல் தொடர்பு தெரிந்தது
சென்னை:ஆந்திராவில் இருந்து சென்னைக்கு டேங்கர் லாரி மூலம் கடத்தி வரப்பட்ட மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பிடிபட்டது. இது தொடர்பாக ஒருவரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
சச்சின் அணி அசத்தல் வெற்றி *ஹர்பஜன் அதிரடி
மும்பை: டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சச்சினின் மும்பை இந்தியன்ஸ் அணி, 41 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது.
ஐ.ஓ.சி.,யிடம் இருந்து ரூ. 1,400 கோடி புதிய ஆடர்: எல் அன்ட் டி
மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய பொறியியல் கட்டுமான நிறுவனமான எல் அன்ட் டி(லார்சன் அன்ட் டூயூப்ரோ), இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனிடம்(ஐ.ஓ.சி.,) இருந்து ரூ. 1,400 கோடிக்கு புதிய ஆடர் பெற்றுள்ளது.
ஆசிரியர்களின் பணிக்கால விவரம் ‘இன்டர்நெட்’டில் வெளியிட ஏற்பாடு
திண்டுக்கல்:ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் பணிக்காலம் குறித்த விவரங்கள், இணையதளத்தில் வெளியிடுவதற்காக சேகரிக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்விற்கான, மூப்பு (சீனியாரிட்டி பேனல்) பட்டியல் மாநில அளவில் தயாரிக்கப் படுகிறது.
நீலகிரியில் ரூ.40 கோடி மதிப்பில் மென்பொருள் ஆய்வு மையம்
ஊட்டி:”இந்தியாவில் முதல் முறையாக ஊட்டி அல்லது குன்னூரில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மென் பொருள் ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்படும்,” என மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
மாஸ்கோ ரயிலில் குண்டுவெடிப்பு ; 40 பேர் பலி ; 20 பேர் காயம்; பயங்கரவாதிகள் கைவரிசை
மாஸ்கோ : ரஷ்ய தலைநகர் சென்ட்ரல் மாஸ்கோவில் உள்ள மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் 20 க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாகவும் முதற்கட்ட தகவல் தெரிவிக்கிறது.
தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு : பற்றாக்குறையால் மின்வாரியம் அதிரடி
கோடை காரணமாக தமிழகத்தில் நீர், காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், மின் தேவை அதிகரித்துள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க தினமும் மூன்று மணி நேரம் மின்தடை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு
சென்னை : அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.