30 மாநிலங்களில் தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம்
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம் இந்த மாதத்துக்குள் அமல் செய்யப்படுகிறது.
சைக்கிளை நிறுத்த இடமில்லாமல் தவிக்கும் டில்லி முதல்வர் மகன்
புதுடில்லி: பார்லிமென்ட்டுக்கு சைக்கிளில் வரும் டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப்புக்கு சைக்கிளை நிறுத்துவதற்கு இடமளிக்க காவலர்கள் மறுத்து வருகின்றனர்.
மரண தண்டனையிலிருந்து தப்பித்த ஹெட்லி அமெரிக்காவிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அறிவிப்பு
சிகாகோ : ஹெட்லி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை ஒப்புக் கொண்டுள்ளதால் அவருக்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்று அமெரிக்க அட்டர்னி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் : சில முக்கிய அம்சங்கள்
சென்னை : 2010-11ம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டை தமிழக நிதித்துறை அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கூட்டம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழக சட்டப்பேரவை கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
கோல்டு காயின்’ வழங்க பா.ம.க., ஆலோசனை
தர்மபுரி :பென்னாகரம் தொகுதி தேர்தலில் பெண்களை கவர முடிவு செய்துள்ள பா.ம.க., ‘கோல்டு காயின்’ வழங்கிட ஆலோசனை செய்து வருகிறது.
தானமாக பெற்ற ரத்தத்தைக் கொட்டி தாய்லாந்தில் போராட்டம்
பாங்காக்: தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட தக்சின் சினவத்ராவின் ஆதரவாளர்கள் நடத்தி வரும் போராட்டம் [^] மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. தானமாக ரத்தத்தைப் பெற்று அதை பிரதமர் வீட்டின் முன்பு கொட்டி போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வெளிநாடுகளில் ரூ90000 கோடி முதலீடு செய்யும் ஓஎன்ஜிசி
டெல்லி: வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை கைப்பற்றுவதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் (ரூ.90 ஆயிரம் கோடி) அளவுக்கு முதலீடு செய்ய தயாராக இருப்பதாக ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.
மும்பை அணி அசத்தல் வெற்றி : சுருண்டது காம்பிர் அணி
புதுடில்லி : ஐ.பி.எல்., தொடரில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ் அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.
தொலைதூர கல்வியில் ஊனமுற்றோருக்கு இலவச கல்வி : சென்னை பல்கலை துணைவேந்தர் திருவாசகம் அறிவிப்பு
சென்னை : ”தொலைதூர கல்வி முறையில் ஊனமுற்றோருக்கு இலவச கல்வி தரப்படும்,” என சென்னை பல்கலையின் துணைவேந்தர் திருவாசகம் பேசினார்.
2012ம் ஆண்டுக்குள் சென்னை – தூத்துக்குடி காஸ் பைப்லைன்
சென்னை : ‘விஜயவாடா – சென்னை, சென்னை – தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு (காஸ்) கொண்டு செல்ல பைப்லைன் அமைக்கும் பணி, 2012ம் ஆண்டு முடியும்’ என்று, பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்துள்ளார்.