காம்பிர் அணி அசத்தல் வெற்றி: வீழ்ந்தது வார்ன் அணி
ஆமதாபாத்: ஐ.பி.எல்., தொடரில் காம்பிர் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணியின் வெற்றிநடை தொடர்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் வார்ன் வழிநடத்தும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2வது வெற்றியை ருசித்தது.
பிளஸ் 2 கணிதத்தேர்வில் நூற்றுக்கு நூறு கிடைக்குமா? கேள்வித்தாள் மிகவும் கடினம் என மாணவர்கள் புகார்
சென்னை : பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று நடந்த கணிதப் பாட கேள்வித்தாள், எதிர்பார்த்த வகையில் அமையவில்லை என்று பரவலாக புகார் எழுந்துள்ளது.
ஊசி மூலம் ரத்தத்தில் வைரசை செலுத்தி புற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை அறிமுகம்
புதுடில்லி : ரத்தத்தில் வைரசை செலுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கும் முறை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வந்தாரை வாழ வைக்கும் மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் கருணாநிதி பூரிப்பு
சென்னை:””வந்தாரை வரவேற்று வாழ வைக்கும் மனவளம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு,” என முதல்வர் கருணாநிதி பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.
பல் மருத்துவர்களுக்கு ஜப்பானில் கிராக்கி: விசா விதிமுறை தளர்த்தப்படும்
டோக்கியோ:”ஜப்பானில் முதியவர்கள் மற்றும் குறைந்து வரும் மக்கள் தொகையை கவனிக்க உதவும் வகையில் வெளிநாட்டு நர்சுகள் மற்றும் பல் மருத்துவர்களுக்கான விசா விதிமுறைகளை தளர்த்துவதற்கான வாய்ப்பு உள்ளது’ என, அந்நாட்டு அரசு தெரிவித்தது.
27ம் தேதி ஒரு மணி நேரம் ‘லைட்’ அணைச்சுடுங்க
புதுடில்லி : பூமி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடு வரும் 27ம் தேதி டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை விளக்குகள் அணைக்கப்பட உள்ளன.
டெபாசிட் வட்டியை மாற்றியமைந்தது: ஐ.ஓ.பி.
சென்னை : டெபாசிட் வட்டியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(ஐ.ஓ.பி.,) மாற்றியமைத்துள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான டெபாசிட் வட்டியை இவ்வங்கி மாற்றி அமைத்துள்ளது.
தனி ஈழ கொள்கையை கைவிட்டது இலங்கை கட்சி
கொழும்பு, மார்ச் 14: விடுதலைப் புலிகள் ஆதரவு தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டணி தனி ஈழ கொள்கையை கைவிட்டுள்ளது.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா கருணாநிதி உதவி இல்லாமல் நிறைவேற்றி இருக்க முடியாது: சோனியா காந்தி
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற புதிய சட்டமன்ற-தலைமைச் செயலக வளாக திறப்பு விழாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி முன்னிலை வகித்து பேசியதாவது:-
நிகர்நிலை பல்கலை 1.32 லட்சம் மாணவர்கள் படிப்பு பாதிக்காது : மாற்று ஏற்பாடு செய்ய குழு திட்டம்
சென்னை:நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை இழந்த, 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் படிக்கும் ஒரு லட்சத்து 32 ஆயிரம் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.என்.தாண்டன் குழு முடிவு செய்துள்ளது.