அடுத்தது என்னவோ? அலறும், தனியார் பள்ளிகள் : கல்வித்துறை மீது அதிருப்தி
கோவை : தேர்வு காலத்தில், தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக, தமிழக பள்ளி கல்வித்துறை மீது பள்ளி நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்படும்
புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தலாம் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் கருத்து தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் விற்பனைக்கு வரும் ‘3 டி’ டிவி
நியூயார்க்: தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்பில் புதிய புரட்சியாக 3டி டிவிக்கள் அடுத்த வாரம் விற்பனைக்கு வருகின்றன.
உலக கோடீஸ்வரர் பட்டியல்; டாப் 10 ல் முகேஷ் – லட்சுமி மிட்டல் இடம் பிடித்தனர்
நியூயார்க்: உலக கோடீஸ்வரர் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி, இரும்பு உலகின் ராஜா என வர்ணிக்கப்படும் லட்சுமி மிட்டல் டாப் -10 பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
கல்வி உதவித்தொகை பெற மீண்டும் வரவேற்பு
சென்னை: ‘மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை அளவிற்கு கூட விண்ணப்பங்கள் வரவில்லை’ என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களுக்கு தி.மு.க.,வின் பணி நெல்லை மாநாட்டில் அழகிரி பட்டியல்
திருநெல்வேலி:முஸ்லிம்களுக்காக தி.மு.க., பல்வேறு பணிகளை செய்துள்ளது என மத்திய அமைச்சர் அழகிரி பேசினார்.நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 62வது ஆண்டு மறுமலர்ச்சி மாநாடு நடந்தது.
நளினி விடுதலை தொடர்பான அறிக்கை : இன்று தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு
சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினியின் விடுதலை குறித்து, ஆலோசனை குழு அளித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புலிகளை பலப்படுத்தும் ‘சூப்பர் சக்திகள்’ அபாயம்
கொழும்பு:””வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிளைகளை பலப்படுத்தும் நோக்கத்துடன் சில “சூப்பர் சக்திகள்’ இயங்கி வருகின்றன,” என இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே கூறினார்.
மம்தா, முலாயம், லாலு கோஷ்டிகள் திடீர் பல்டி : மத்திய அரசை எதிர்க்க மாட்டோம் என அறிவிப்பு
புதுடில்லி : பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா விவகாரத்தில், மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்த மம்தா, முலாயம் மற்றும் லாலு கோஷ்டியினர், திடீர் திருப்பமாக தற்போது அடக்கி வாசிக்கத் துவங்கியுள்ளனர். “மத்திய அரசை எதிர்க்க மாட்டோம்’ என, இவர்கள் பல்டி அடித்துள்ளனர்.
கபில்தேவுக்கு ஐ.சி.சி., கவுரவம்
துபாய் : ஐ.சி.சி., தலைசிறந்த வீரர்களுக்கான “ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் முறைப்படி சேர்க்கப்பட்டார்.