கல்வி நிறுவனங்களுக்கு கடன் வழங்க தேசிய கல்வி நிதி கழகம் துவக்க திட்டம்
புதுடில்லி : “”உயர் கல்வி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக தேசிய கல்வி நிதி கழகத்தை அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசு உறுதியுடன் உள்ளது – பிரதமர்
டெல்லி: லோக்சபா மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, அவர்களுக்கும் அதிக அதிகாரம் கிடைக்கச் செய்வதில் அரசு உறுதியுடன் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
பண மோசடி- மகனை கடத்தி விட்டதாக நித்தியானந்தா மீது புதிய புகார்கள்
சேலம் நித்தியானந்தா பண மோசடி [^] செய்து விட்டதாக சேலம் போலீஸில் ஒருவர் புகார் [^] கொடுத்துள்ளார். அதே போல நித்தியானந்தாவிடம் படிக்கச் சென்ற தனது மகனுடன் தான் தொடர்பு கொள்ள முடியவில்லை, அவனை மீட்டுத் தர வேண்டும் என்று ஒருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
சாமியார்களின் தவறுகளை அரசு வேடிக்கை பார்க்காது: முதல்வர் கருணாநிதி
சென்னை, மார்ச் 4: சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சாமியார்களின் தவறுகளை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
200 நடுநிலைப் பள்ளிகள் நிலை உயரும்
கோவை, மார்ச் 4: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில், 200 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட உள்ளன என்று, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் எஸ்.கார்மேகம் தெரிவித்தார்.
பொன்சேகாவை கைது செய்த “மேஜர் ஜெனரல் மானவடு” உயிருக்கு ஆபத்தாம்: வெளிநாட்டில் தஞ்சம்
ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்த நடவடிக்கையில் தலைமை ஏற்று செயற்பட்ட மேஜர் ஜெனரல் சுமித் மானவடு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி திடீரென வெளிநாடு சென்றுள்ளார்.
சமையல் எரிவாயு தட்டுப்பாடு விரைவில் நீங்கும் : மத்திய அரசு
புதுடில்லி : புதிதாக மூன்று எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படத் துவங்கும் நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெருவதில் தற்போது நிலவிவரும் தட்டுப்பாடு நீங்கிவிடும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
உலக அளவில் சிறந்ததுஜெய்ப்பூர் போலீஸ் நிலையம்
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள போலீஸ் நிலையம் சிறந்த போலீஸ் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித் துறை, தொழிலாளர் நலத்துறையில் 324 பேர் பணி நியமனம்
சென்னை: துணை முதல்வர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தொழிற்சாலைகள் ஆய்வாளர் துறை ஆகியவற்றில் 324 பேருக்கு, பணி நியமன உத்தரவுகளை நேற்று வழங்கினார்.
ஸ்கேன் செய்ய மறுத்த பெண்கள்: விமானத்தில் செல்ல அனுமதி மறுப்பு
லண்டன்: விமான நிலையத்தில் ஸ்கேன் செய்து கொள்ள மறுத்த முஸ்லிம் பெண்கள் இருவருக்கு பாகிஸ்தான் செல்லும் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது.