மருத்துவத்தில் எடுபடாதுமாயாஜாலம் : பாய்கிறது தடைச்சட்டம்
கவர்ச்சிகர விளம்பரங்களை வெளியிட்டு, அப்பாவி நோயாளிகளிடம் பணம் அபகரிக்கும் “போலி டாக்டர்கள்’ மீதான பிடியை, தமிழக அரசு இறுக்கியுள்ளது; மோசடி நபர்களை “மாயாஜால மருத்துவ சிகிச்சைகள் தடைச்சட்டத்தின்படி’ கைது செய்ய, நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பொதுக்கூட்டம், விழாக்களுக்கு மின்சாரம் திருட்டு : சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை : பொதுக்கூட்டங்கள், கோவில் விழாக்களின் போது மின்சார இணைப்பை சட்டப்படி பெறுகிறார்களா என்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மின் திருட்டு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிராட்மேனோடு ஒப்பிடாதீர்கள்: சச்சின்
மும்பை :””கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனுடன் என்னை ஒப்பிட வேண்டாம்,” என, சச்சின் கேட்டுக் கொண்டுள்ளார்.
விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் சலுகை: இருந்தபோதும் டிராக்டர் விலை கூடும்
லூதியானா: ‘உணவு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்க, பீகார், சட்டீஸ்கர், ஒரிசா மற்றும் பிற மாநிலங்கள் மீது மத்திய பட்ஜெட்டில் கவனம் செலுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது’ என, பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
கலைஞர் வீட்டு வசதி திட்டம்:முதல்வர் கருணாநிதி இன்று துவக்கம்
திருச்சி:திருச்சியில் இன்று, “கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை’ தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார்.
புதிய சட்டசபையில் 19ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்
சென்னை: தமிழக அரசு கட்டி வரும் புதிய சட்டசபையில் வருகிற 19ம் தேதி 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் க.அன்பழகன் தாக்கல் செய்யவுள்ளார்.
ஆஸி: தமிழ் தம்பதி மீது ஆஸி.யில் தாக்குதல்-எதிர்த்துப் போராடி தப்பினர்
மெல்போர்ன்: மெல்போர்ன்: இந்தியாவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மணியும், இலங்கைத் தமிழரான அவரது கணவரும் ஆஸ்திரேலியா [^]வில் இனவெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
டென்மார்க் வாக்கெடுப்பு- 98.2% தமிழர்கள் தமிழ் ஈழத்திற்கு ஆதரவு
கோபன்ஹேகன்: டென்மார்க்கில் நடந்த தமிழீழ தனியரசை வலியுறுத்தும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 98.2% தமிழர்கள் ஆதரவு [^] தெரிவித்துள்ளனர்.
பென்னாகரம் இடைத் தேர்தல்-வீரப்பன் மகள்களை இழுக்கும் திமுக?
பென்னாகரம்: பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் இரு மகள்களையும் அழைத்து திமுகவுக்காக பிரசாரம் செய்ய வைக்க திமுக தரப்பில் கடுமையாக முயற்சித்து வருகிறார்களாம்.
வங்கி தொடங்க தயாராகும் அம்பானிகள்- டாடா- பிர்லா
டெல்லி: அம்பானிகள், டாடா-பிர்லாக்களும் இனி வங்கிகள் துவங்கப் போகிறார்கள்.