விலை உயர்வில் இருந்து பாமரனைக் காக்க முன்னுரிமை : பட்ஜெட் கூட்டத்தில் ஜனாதிபதி திட்டவட்டம்
“”பணவீக்கத்தில் இருந்து பாமர சாதாரண மக்களை பாதுகாக்க அரசு அதிக முன்னுரிமை அளிக்கும். இருந்தாலும், உள்நாட்டில் விவசாய உற்பத்தி குறைவு மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் விலையேற்றத்தால், உணவுப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகியுள்ளது.
யானைமலையை குடையும் எண்ணம்அரசுக்கு இல்லை: தங்கம் தென்னரசு
சென்னை:”யானைமலையை குடையும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை’ என, அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மேக்னசைட் எடுப்பு : விலையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை : சேலம் மாவட்டத்தில் மேக்னசைட் தாதுப்பொருளுக்கான விலையை, 25 ஆண்டுகளுக்கு வசூலிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொது ஏலத்தில் 1,564 டன் மேக்னசைட் தாதுவை விற்கவும் ஐகோர்ட் அனுமதித்துள்ளது.
இந்திய கல்விக் கொள்கைக்கு அமெரிக்காவைப் பார்த்து காப்பியடிக்கக் கூடாது: பொன்முடி
வேலூர், பிப். 22: இந்திய கல்விக் கொள்கைக்கு அமெரிக்காவையோ, பிற நாடுகளையோ பார்த்துக் காப்பியடிக்கக் கூடாது; அது, நமது தேவைக்கு ஏற்றாற்போல இருக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறினார்.
இந்தியத் தேயிலைக்கு துபையில் கிராக்கி
துபை, பிப். 22: இந்திய தேயிலைக்கு துபையில் தொடர்ந்து கிராக்கி நிலவுகிறது. இந்தியாவிலிருந்து தேயிலை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் துபை இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஏட்டிக்கு போட்டி எதிர்கட்சிகள் : கருணாநிதி
சென்னை: ஆளும்அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு எதிராக அறிக்கை தயார் செய்து ஏட்டிக்கு போட்டி என செயல்படுவதுதான் இன்றைய எதிர்கட்சியின் பண்பாடாக இருக்கிறது என தமிழக முதல்வர் கருணாநிதி எதிர்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறையில் புதிய அணுகுமுறைகள்: கபில் சிபலுக்கு அமெரிக்கா பாராட்டு
வாஷிங்டன், பிப்.20: இந்தியாவில் கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபலின் சீரிய நடவடிக்கைகளே காரணம் என்று அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளாக் கூறியதாவது: ÷இந்திய கல்வித் துறையில் அயல்நாடுகளின் பங்களிப்பை அதிகரிக்கும் சட்ட மசோதா … Continued
பொருளாதார மந்தம் நீங்கியது: ஓட்டல் அறை வாடகை விர்ர்ர்
மும்பை: பொருளாதார மந்தத்தால் கடந்த ஓர் ஆண்டாக வீழ்ச்சியடைந்திருந்த ஓட்டல் அறைகளின் சராசரி வாடகை (ஏ.ஆர்.ஆர்.,), இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 20 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகளில் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவே சட்டம்:ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
சென்னை:”தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும், லாப நோக்கில் கல்வி வியாபாரமாகக் கூடாது என்பதை உறுதி செய்யவும் தான் சட்டம் கொண்டு வரப்பட்டது’ என, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதிலளித் துள்ளது.
இறுதிச்சடங்கு செய்த பெண்கள் ஒரிசாவில் அதிரடி புதுமை
புவனேஸ்வர்:பழைய பழக்க வழக்கங்களை உடைத் தெறியும் வகையில், ஒரிசாவில், மூதாட்டி ஒருவரின் இறுதி சடங்கை, ஆண்களின் துணையின்றி பெண்களே செய்து முடித்துள்ளனர்.ஒரிசா மாநிலம், புவனேஸ்வரிலிருந்து 500 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள நுவபரா மாவட்டம் காடியாலா கிராமத்தில் உள்ளது “மிஷன் சக்தி’ என்ற அமைப்பு.