பயங்கரவாதி ஹெட்லி நோட்டம் விட்டுச் சென்றான்?
புனே : அமெரிக்கப் புலனாய்வு பிரிவின் விசாரணையில் இருக்கும் ஹெட்லி, கோரேகான் ஜெர்மன் பேக்கரிக்கு வந்து அங்குள்ள இடங்களைப் பார்வையிட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 29-ந்தேதியுடன் அன்புமணி உள்பட 6 பேர் எம்.பி. பதவி முடிவடைகிறது; வைகோ மேல்சபை எம்.பி. ஆகிறார்
டெல்லி மேல்சபை எம்.பி.க்கள் மாநிலங்களில் இருந்து, எம்.எல். ஏ.க்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்தந்த மாநிலங்களில் காலியாகும் எம்.பி.க்கள் பதவிக்குப் பதிலாக புதிய எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மனிதன் உடலில் 6284 தடவை நோய் தாக்கும்: ஆய்வில் தகவல்
இங்கிலாந்தில் உள்ள ஒரு இணைய தளம் மனி தர்களின் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்கள் குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டது. 3 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு தொழில்துறை உற்பத்தி 16.8% அதிகரிப்பு
புதுடில்லி : தொழில் துறை உற்பத்தி 2009, டிசம்பர் மாதத்தில் 16.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி அதிகரித்ததே ஆகும்(சென்ற ஆண்டு டிசம்பரில் 0.2%).
மாணவரது சந்தேகங்களுக்கு சி.பி.எஸ்.இ.,யின் இலவச சேவை
புதுடில்லி: மாணவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்கும் சேவையை சி.பி.எஸ்.இ., இலவசமாக வழங்குகிறது.
ஒரு வருடத்தில் அக்னி 5 ஏவுகணை சோதனை: அப்துல் கலாம் பேச்சு
சென்னை:””ஐந்தாயிரம் கிலோ மீட்டர் சென்று தாக்கக்கூடிய அக்னி 5 ஏவுகணை ஒரு வருட காலத்தில் சோதனை செய்யப்படும்,” என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.
பட்ஜெட்டில் தமிழகம் நிறைய எதிர்பார்க்கிறது : அமைச்சர் மம்தாவிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை
“தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். குறிப்பாக திண்டுக்கல் – விழுப்புரம் அகல ரயில் பாதை திட்டத்தை உடனடியாக துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
17 வயதாகும் சிறுவன் சஜீவனின் பரிதாப நிலை: அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களே கொஞ்சமாவது உதவமுடியுமா?
வன்னிப்போர் காரணமாக தனது 2 கைகளையும் இழந்து, இரண்டு தங்கைகளையும் பறிகொடுத்து, சித்தசுவாதீனமுற்ற தந்தையுடனும், தாயாருடன் இந்தியாவில் தங்கியுள்ள சிறுவன் சஜீவன், தனது இழந்த கைகளில் ஒரு கையாவது செயற்கையாக பொருத்தும் நோக்கில் புலம்பெயர் தமிழர்களிடம் உதவ முடியுமா? என தனது நிலையை விளக்கி வேண்டுகோள் விடுத்துள்ளளார்.
ராமர், சீதை சிலைகளை கட்டிப் பிடித்தபடி இறந்த குரங்கு
மொய்ராபரா(மே.வங்கம்) : பழங்குடியினரால் தாக்கப்பட்ட குரங்கு ஒன்று, கோவில் கருவறையிலிருந்த ராமர்,சீதை சிலைகளைக் கட்டிப் பிடித்தபடியே இறந்தது.மேற்குவங்க மாநிலத் தலைநகர் கோல்கட்டாவிலிருந்து, 30 கி.மீ., தொலைவிலுள்ள பஸ்குர் மொய்ராபரா என்ற கிராமத்தில், நாகதேவதையான மானசா தேவிக்கு ஒரு கோவில் இருக்கிறது. அதன் கருவறையில் மானசாதேவி அருகில் ராமர், சீதை விக்ரகங்களும் இருக்கின்றன.
அந்நிய முதலீட்டு கொள்கையில் தளர்வு : மத்திய அரசு அறிவிப்பு
புதுடில்லி : அந்நிய நேரடி முதலீடு ரூ.1200 கோடிக்கு மேல் இருந்தால் மட்டுமே, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.