ரோட்டில் காஸ் டேங்கர் கவிழ்ந்ததால் பாதிப்பு தொடர்கிறது:2 நாள் போக்குவரத்து அவதி: பள்ளி, கல்லூரிகள் மூடல்
கருமத்தம்பட்டி:கோவை அருகே என்.எச். 47 ரோட்டில் கவிழ்ந்த காஸ் டேங்கர் லாரி இரண்டு நாட்களாக அப்புறப்படுத்த முடியாமல் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணம்மீட்டுக் கொண்டு வரக் கோரி மேலும் ஒரு மனு
புதுடில்லி:சுவிஸ் நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் டிபாசிட் செய்துள்ள கருப்புப் பணத்தை, மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டொயோட்டாவுக்கு ரூ.9,200 கோடி நஷ்டம்
டோக்கியோ : குறையுள்ள சுமார் ஒரு கோடி கார்களைத் திரும்பப் பெறும் அறிவிப்பால் டொயோட்டாவுக்கு ரூ.9,200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அணு ஒப்பந்தம் அமலுக்கு வந்தது
வாஷிங்டன் : இந்தியா & அமெரிக்கா இடையிலான அணு ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, இந்தியாவுக்கு அமெரிக்க நிறுவனங்கள் யுரேனியம் சப்ளை செய்யும்.
பன்னாட்டு நிறுவனங்களின் சதி மரபணு கத்தரி : ம.பி., அரசு குற்றச்சாட்டு
திருவனந்தபுரம் : “”மரபணு கத்தரிக்காயை அறிமுகப்படுத்தும் முயற்சிக்கு, பன்னாட்டு நிறுவனங்களின் சதிதான் காரணம். மரபணுப் பயிர்களை ம.பி.,யில் அனுமதிக்க மாட்டோம்.
நீதிபதி கிருஷ்ணா தலைமையில் ஆராய 5 பேர் குழு : தெலுங்கானா விவகாரத்தில் அரசு அறிவிப்பு!
புதுடில்லி : தெலுங்கானா தனி மாநில கோரிக்கை குறித்து ஆய்வு செய்யவும், ஆந்திராவில் உள்ள அனைத்துப் பிரிவு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தவும், ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா தலைமையில் ஐந்து பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதன் மூலம், தெலுங்கானா போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் ஆராய்ச்சியாளர்கள் வருகை எப்போது? : சேது சமுத்திர திட்டத்தில் அடுத்த பிரச்னை
ராமநாதபுரம் : சேது சமுத்திர திட்டம் மீண்டும் துவங்கவுள்ள நிலையில், அதற்கான ஆய்வுப் பணிகளுக்கான ஆராய்ச்சியாளர்கள் குழு வருகை குறித்த விவரம் தெரிவிக்கப்படாமல் உள்ளது.
கூடன்குளம் அணுமின் நிலையம்: 40 சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு
வள்ளியூர்: கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு சர்வதேச அணுசக்தி உற்பத்தியாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த 40 விஞ்ஞானிகள் ஆய்வுக்காக இன்று வந்துள்ளனர்.
லண்டன் நிதித்துறையில் 48 ஆயிரம் பேர் வேலையிழப்பு
லண்டன் : கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் லண்டனில் 17000 மூத்த நிதித்துறை அலுவலர்கள் உட்பட 48000 பேர் பதவி இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெறாத நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கு நோட்டீஸ்!
தமிழகம் முழுவதிலும் செயல்படும் அங்கீகாரம் பெறாத பள்ளிகளை கண்டறிந்து, அப்பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.