ஒரு நிமிடம் பேசினால் ரூ.1.50 லட்சம் கட்டணம்
லண்டன் : பிரிட்டனின் முன்னாள் பிரதமரான டோனி பிளேர் ஒரு நிமிடச் சொற்பொழிவுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாகப் பெறுகிறார்.
புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தால் பட்டா
சென்னை : அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி 3 ஆண்டுகள் குடியிருந்தால் போதும். அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும்’’ என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
அரசு உத்தரவை மீறி மாணவர் சேர்க்கை நடத்தும் பள்ளிகள்
மதுரை : பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை முன்னதாகவே நடத்தக் கூடாது என அரசு அறிவித்த பின்பும், மதுரையில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
கொசுவை விரட்ட மூலிகை மருந்து : கல்லூரி மாணவி சாதனை
கூடலூர் : கொசுவை விரட்ட வேப்பங்கொட்டையில் இருந்து மூலிகை மருந்து தயாரித்த கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரி மாணவிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி தேர்வு : மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் தகவல்
திருச்சி: “தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தால், விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, விவசாயம் நடக்காத காலத்தில், வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்யவுள்ளோம்’ என, மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் கூறினார்.
செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 52 கோடியை தாண்டியது
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 52 கோடியை தாண்டி உள்ளது.
ஜெ., வழக்கு விசாரிக்க நீதிபதிக்கு விருப்பமில்லை
பெங்களூரு:””தன் மீதான சொத்து குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்யுமாறு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரிய மனுவை விசாரிக்க விரும்பவில்லை,” என்று கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிப பச்சாப்புரே தெரிவித்தார்.
மும்பையில் பயங்கரவாதிகள் இருவர் ஊடுருவல் : போலீசார் உஷார்
மும்பை : மும்பையில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் ஊடுருவியிருப்பதாக புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆங்கில உச்சரிப்புத் திறனை வளர்க்க டிஜிட்டல் லேங்குவேஜ் லேப்’ அறிமுகம்
திருப்பூர், ஜன.28: வளர்ந்த நாடுகளுக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவி பறும் பள்ளி மாணவர்களிடம் ஆங்கில உச்சரிப்புத் திறனை வளர்க்க பள்ளி கல்வித்துறை சார்பில் டிஜிட்டல் லேங்குவேஜ் லேப் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக, இம்முறையில் ஆங்கில பயிற்சி அளித்தல் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி தேர்தல் வெற்றி சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த அடி என்கிறார் கருணா
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது சர்வதேச சமூகத்துக்கு கிடைத்த ஒரு அடி என்று இலங்கை அமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.