ஆந்திராவில் அரசு நிர்வாகம் ஸ்தம்பிப்பு : பணியாற்ற மந்திரிகள் மறுப்பு
ஐதராபாத் : தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த ஆந்திர மாநில அமைச்சர்கள், தங்கள் பணிகளை செய்ய மறுப்பதால், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. இதற்கிடையே, தெலுங்கானா கூட்டு நடவடிக்கை போராட்டக் குழு, இன்று முதல் காலவரையற்ற “பந்த்’திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், தெலுங்கானா பகுதிகளில் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரூ. 4.5 கோடி பணிகளை ஒன்றரை நிமிடத்தில் ஆய்வு செய்த அமைச்சர்
திருநெல்வேலி : தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் நடந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது, ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் பணிகளை ஆய்வு செய்தார்.
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஏராளமான மனித குண்டுகள் தயார்
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஏராளமான மனித குண்டுகள் தயார் நிலையில் ஏமனில் உள்ளதாக எஃப்.பி.ஐ. விசாரணையில் நைஜீரிய பயங்கரவாதி ஒமர் பாரூக் அப்துல் முத்தலிப் தெரிவித்துள்ளான்.
3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மார்ச்சில் நடக்கிறது
புதுடில்லி: ‘மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், 3ஜி மொபைல் சர்வீசுக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் துவங்கும்’ என, மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
நலவாரியத்தில் பதிவு செய்திருந்தும் உதவித்தொகை கிடைக்கவில்லை: கால்கள் செயல் இழந்தவர் தவிப்பு
தேனி:விபத்தில் இரு கால்களும் செயல் இழந்த வாலிபர், நல வாரியத்தில் பதிவு செய்தும் உதவித் தொகை பெற முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.
இந்தியா சுக்கு நூறாகி விடும் வைகோ திடீர் எச்சரிக்கை
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உலகத் தமிழ் பேரமைப்பு சார்பில், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பொது அரங்கம் நடந்தது.இதில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது:
தேனி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றோர் சொத்து ஜப்தி? டி.ஆர்.ஒ.,வுக்கு உத்தரவு
மதுரை:தேனி காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த சீதாராம் இன்வெஸ்மென்ட் பங்குதாரர் ஜக்கையன், மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த ரிட் மனு:எங்கள் நிறுவனம் மூலம் 1996 முதல் மக்களிடம் டிபாசிட் பெற்று அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு கடன் கொடுத்தோம்.
வன்னி பகுதியில் ஏராளமான கண்ணி வெடிகள் : தமிழர்களை குடியமர்த்துவதில் தாமதம்
பெரியதம்பணை : அடர்ந்த காட்டுக்குள் கண்டறியப்பட முடியாத நிலையில், புலிகள் கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருப்பதால், அவைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதிகளில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதில், காலதாமதம் ஏற்படும், என ராணுவ முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அல்-கொய்தா தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் ஒழித்துக் கட்டுவோம்- ஒபாமா
வாஷிங்டன்: தீவிரவாதிகள் உலகின் எந்த இடத்தில் இருந்துகொண்டு சதி திட்டங்களை தீட்டினாலும் அவர்களை அமெரிக்கா ஒழித்துக்கட்டும் என அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ்., போல ஐ.இ.எஸ்., வருகிறது?
புதுடில்லி: கல்வித் துறைக்கென்று ஐ.இ.எஸ்., என்ற புதிய சேவையை ஏற்படுத்த முடியுமா என்று மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.