கர்கரேவின் புல்லட் புரூப்பை குப்பை தொட்டியில் போடவில்லை- துப்புறவுத் தொழிலாளி பல்டி
மும்பை: தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டபோது மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கர்கரே அணிந்திருந்த புல்லட் புரூப் உடையை நான் குப்பைத் தொட்டியி்ல் போட்டு விட்டேன் என்று முன்பு சாட்சியம் அளித்த துப்புறவுத் தொழிலாளி தற்போது அதுகுறித்து தனக்குத் தெரியாது என்று பல்டி அடித்துள்ளார்.
தெலுங்கானா கலவரம் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமலாகுமா? கவர்னரை மாற்றவும் முடிவு
தெலுங்கானா இப்போது இல்லை என்று மத்திய அரசு அறிவித்ததால் நேற்று ஆந்திராவில் தெலுங்கானா பகுதியில் பயங்கர கலவரம் வெடித்தது.
போர்ப்ஸ் பட்டியல் தகவல் 8 அமெரிக்க கம்பெனிக்கு தலைமை வகிக்கும் இந்தியர்
வாஷிங்டன் : அமெரிக்காவின் 8 மிகப் பெரிய கம்பெனிகளுக்கு இந்தியர்கள் தலைமை வகிப்பதாகவும், வேறெந்த நாடும் இந்தப் பெருமை பெறவில்லை என்றும் போர்ப்ஸ் பத்திரிகை பட்டியல் தெரிவிக்கிறது.பட்டியல் வருமாறு:
கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார்
ரியோடி ஜெனிரோ : கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கத்தில் பிரேசிலை சேர்ந்த 100 வயது பாட்டி, விமானத்தில் 4,000 மீட்டர் உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து தரையிறங்க திட்டமிட்டுள்ளார்.
தொழில்துறைக்கு புதிய இணையதளம்: துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கினார்
சென்னை: தமிழக தொழில்துறையின் முழுமையான வழிகாட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தை, துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழகம் முன்னிலையில் இருந்து வருகிறது. 2006 மே முதல் இதுவரை தமிழகத்தில் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் உற்பத்தி தொழில்களில் வந்துள்ளன. இதன் மூலம், 2.20 லட்சம் பேருக்கு … Continued
ஏழுவகை இதய குறைபாடுகளுக்கு ஒரே ஆபரேஷன் உலகில் முதலாவதாக ‘மியாட்’ டாக்டர்கள் சாதனை
மணப்பாக்கம் : உலகிலேயே முதல் முறையாக இதயத்தில் ஏற்பட்ட ஏழுவிதமான கோளாறுகளை ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து சென்னை, மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
அனைவருக்கும் இடைநிலை கல்வி தமிழகத்துக்கு ரூ.151.44 கோடி
தேனி : அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த, நடப்பு ஆண்டுக்கு 151.44 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.
ஓராண்டில் 1,808 கோடி யூனிட் மின் உற்பத்தி : என்.எல்.சி., புதிய சாதனை
நெய்வேலி : என்.எல்.சி., சேர்மனாக அன்சாரி பொறுப்பேற்ற ஓராண்டில் மின் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது. என்.எல்.சி., சேர்மனாக கடந்தாண்டு டிச., 17ம் தேதி அன்சாரி பொறுப்பேற்றார்.
மாணவிக்கு பொறியியல் படிப்பில் இடம் ஒதுக்க ஐகோர்ட் உத்தரவு டிசம்பர் 24,2009,00:00 IST
சென்னை : “தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு, பொறியியல் படிப்பில் இடம் ஒதுக்க மறுத்தது தவறு’ என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் அவருக்கு இடம் ஒதுக்க பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்: அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய முடிவு
புதுடில்லி: அரசு எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா ஆகியோர், அடுத்த மாதம் 13ம் தேதி முக்கிய ஆலோசனை மேற் கொள்கின்றனர்.