அடுத்த கல்வி ஆண்டில் 200 பள்ளிகள் தரம் உயர்வு பள்ளி கல்வி இயக்குனர் பேச்சு
பழநி:அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், அடுத்த கல்வி ஆண்டில்(2010-2011), 200 பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும், என பள்ளிக்கல்வி இயக்குனர் பி.பெருமாள்சாமி தெரிவித்தார்.
அனைவரையும் ஈர்க்கும் வகையில் ரூ. 26 கோடியில் மெரீனா நவீனம்:கல்வெட்டை திறந்து முதல்வர் பார்வை
சென்னை: மெரீனா கடற்கரை, 26 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. கல்வெட்டு அருகே மரக்கன்றுகளை நட்டு, முதல்வர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார்.
மாணவர்கள் விசாவில்பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் அதிகரிப்பு
லண்டன்:படிப்பதற்காக செல்வதாகக் கூறி இந்தியர்கள் பலர், மாணவர்களுக்கான விசாவை பெற்று பிரிட்டனில் குடியேறுவது அதிகரித்துள்ளது.பிரிட்டனில் தங்குவதற்கு பல காரணங்கள் தேவை.
கண்டக்டருக்கே விசுலு!
குளிரடிக்கும் காலை; குன்னூர் பஸ் ஸ்டாண்ட்டிலிருந்து மேட்டுப்பாளையம் கிளம்புகிறது அந்த அரசு பஸ். வேகமாய் ஓடி வந்து நாலு பேர் பஸ் ஏற, “ஏங்க, இவ்வளவு அவசரம், அடுத்த பஸ்ல வரலாமே’ என்றால், “இதுல போனாத்தான் இன்னிக்கு நாளு நல்லாயிருக்கும்,’ என்று புதிர் முடிச்சுப் போட்டார்கள். அவர்கள் முடிப்பதற்குள் ஒரு கணீர்க்குரல்…
ரேசன் கார்டு செல்லுபடியாகுமா ? இணையதளத்தில் வெளியீடு
சென்னை : உங்கள் ரேசன் கார்டுகள் செல்லுபடியாகுமா இல்லை ரத்து செய்யப்பட்டு விட்டதா என பார்க்க வேண்டுமா ? இதற்கான தகவல்களை தமிழக அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் கார்டுதாரர்கள் கார்டுக்கான எண்ணை பதிவு செய்து விவரங்கள் அறிந்து கொள்ளலாம். ரேசன் கார்டுகள் வரும் 31 ம் தேதியுடன் காலவதியாகிறது. இந்தகார்டுகள் அடுத்த ஆண்டு வரை … Continued
நள்ளிரவு இரண்டு மணி வரை உழைக்கிறேன்: மம்தா பானர்ஜி
“நான் டில்லியில் இருக்கிறேனா… கோல்கட்டாவில் இருக்கிறேனா என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை; ஆனால், நள்ளிரவு 2 மணி வரை என் அமைச்சக வேலைகளை பார்க்கிறேன்,” என்று காட்டமாக லோக்சபாவில் பதிலளித்துள்ளார் மம்தா பானர்ஜி.
சிறிய கார் தயாரிப்பில் டொயோட்டா
சென்னை: இந்திய வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு, சிறிய கார்களை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தயாரித்து வருகிறது.
தேர்தல் பணியில் முதன் முறையாக கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு
வந்தவாசி: தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தி, தேர்தல் கமிஷன் சாதனை செய்துள்ளது.
தமிழர்கள் குடியமர்த்தல் ரூ. 385 கோடி உதவி
வாஷிங்டன் : முகாம்களில் வசிக்கும் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகளுக்காக, இலங்கைக்கு 385 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
தாய்மார்களுக்கு அடிக்கிறது ‘லக்’:காத்திருக்கிறது வேலை வாய்ப்பு
மும்பை:குழந்தை பெற்ற தாய்மார்கள், தங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லையே என, இனி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.