காங்கிரஸ் எம்பி தலைக்கு ரூ. 50 லட்சம்- தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அறிவிப்பு
ஹைதராபாத்: ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. ராஜகோபாலின் உடல் நிலை மோசமானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகின் சிறந்த நிர்வாகிகள் முகேஷுக்கு 5ம் இடம்
புதுடெல்லி : இந்திய பங்கு சந்தைகளில் அதிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் தலைசிறந்த நிர்வாகிகள் பட்டியலில் 5ம் இடம் பிடித்துள்ளார்.
இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம்: முதலாவது பிரசாரக் கூட்டத்தில் மஹிந்த
இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம். எமது விவசாயிகளின் உழைப்பால் நாட்டைக் கட்டியெழுப்புவோம். இவ்வாறு அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அனுமதியின்றி இயங்கும் பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை:ஐகோர்ட்டில் அரசு தகவல்
சென்னை:”அனுமதியின்றி தமிழகம் முழுவதும் இயங்கும் பள்ளிகளை மூடுவதற்கு, தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது’ என சென்னை ஐகோர்ட்டில் அரசு பிளீடர் தெரிவித்துள்ளார்.நாகப்பட்டினம் மாவட்டம், வாய்மேடு கிராம ஊராட்சித் தலைவர் பழனியப்பன் என்பவர் தாக்கல் செய்த மனு:
காகிதத்தில் மலர்ந்த திருக்குறள்
காரைக்குடி : காரைக்குடி ஓவிய ஆசிரியர் பார்த்திபன், திருக்குறள் காகிதப்பூ மலையை வடிவமைத்து உள்ளார். இவர் ஓவியத்தில் புதுமை படைக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். இதனால் ஓவியத்தில் புதிய முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
உரிய நேரத்தில் முடிவு மத்திய அரசுக்கு நன்றி
சென்னை : மீனவர் சட்டத்தை நடப்பு தொடரில் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று கூறியதற்காக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவாருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி
வாஷிங்டன்: பூமியைப் போலவே நீர் நிறைந்த, அதைவிட 2.7 மடங்கு பெரிய Ôசூப்பர் பூமிÕ கிரகத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வேர்டு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பூமிக்கு அருகே அதைவிட 2.7 மடங்கு பெரிதாக மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கைக்கு, உலக வங்கி 77 மில்லியன் டொலர்கள் உதவி
உலக வங்கி, இலங்கைக்கு 77 மில்லியன்கள் டொலர்களை உதவியாக வழங்கும் ஒப்புதலை அளித்துள்ளது. இந்த ஒப்புதல் நேற்று வாசிங்டனில் வழங்கப்பட்டது
கசாப் அந்தர்பல்டி வாக்குமூலம்
மும்பை : மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் உயிருடன் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப் இன்று வாக்குமூலம் அளித்தான். அதில் எனக்கும் மும்பையில் நடந்த தாக்குதலுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளான். மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் இருக்கும் சிறப்பு கோர்ட்டில் அவன் வாக்குமூலம் அளித்தான். கோர்ட் உத்தரவுப்படி இந்த வாக்குமூலம் டேப் செய்யப்பட்டது.
67 ஆண்டு கால அரசியல் பணியில் அனுபவம் : பிரதமராக வேண்டியவர் வேட்பாளராக முடிந்தது
புதுடில்லி : இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்த பெருமைக்கு சொந்தக்காரர். ரத யாத்திரை மூலம் இந்திய மக்களை சந்தித்து தனது இமேஜூம், பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்த காரணமாக இருந்தவருமான அத்வானி, பிரதமர் பதவியில் அமருவார் என்ற எதிர்பார்ப்பு முடியாமல் போனது என்பது பெருவாரியான மக்களின் ஏகோபித்த எண்ணமாக எழுகிறது. லால் … Continued