கோபன்ஹேகன் மாநாட்டு அரங்கில் நுழைய முயற்சி : மிளகு ஸ்பிரே அடித்து விரட்டிய போலீசார்
கோபன்ஹேகன் : டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் புவி வெப்ப தடுப்பு மாநாட்டின் அரங்கினுள் நுழைய முயற்சி கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் மிளகு ஸ்பிரே அடித்து விரட்டினர்.
‘ஜாக்கெட்’: அரசின் கட்டுப்பாடு-ஆசிரியைகள் கடும் அதிருப்தி
சென்னை: நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது குறித்து ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தனியார் பள்ளிகளை நான்கு வகையாக பிரித்து புதிய கட்டணம் நிர்ணயிக்க திட்டம்
தனியார் பள்ளிகளின் அமைவிடங்கள் அடிப்படையில், நான்கு பிரிவுகளாக பிரித்து, கட்டணம் நிர்ணயம் செய்ய, கட்டண சீரமைப்புக் குழு திட்டமிட்டுள்ளது.
தமிழக பஸ் எரிப்பு வழக்கு – மதானி மனைவி கைதாகிறார் – கைவிடும் கட்சிகள்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கலமசேரியில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து தீவைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி விடுதலையான மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் மனைவி சுபியா மதானி கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு உதவ முக்கிய கட்சிகள் மறுத்து விட்டன.
அடிக்கடி சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்று நோய் அபாயம் அதிகரிப்பு
சான்பிரான்ஸிஸ்கோ: அடிக்கடி எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒன்றுக்கு மேற்பட்ட கார் இருந்தால் கூடுதல் வரி
புதுடெல்லி: போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் வரி விதிக்க டெல்லி அரசு பரிசீலனை செய்து வருகிறது.
கல்வித்துறைக்கே தெரியாமல் குமரி மாவட்டத்தில் 54 பள்ளிகள்
குமரி மாவட்டத்தில் 326 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 166 பள்ளிகள் விதிகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டது. இதில் 54 பள்ளிகள் கல்வித் துறைக்கு தெரியாமலேயே செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
பேஸ் புக்” கில் தந்தையை கண்டுபிடித்த பிரிட்டிஷ் சிறுமி
பிரிட்டனில் 14 வயது சிறுமி ஒருத்தி, சிறுவயதில் பிரிந்துபோன தனது தந்தையை இணைய தளத்தின் “பேஸ் புக்” மூலம் கண்டுபிடித்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.
மக்களுக்காக கூட்டணி வைக்க விஜயகாந்த் தயாராம்!
வந்தவாசி: தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் நிச்சயம் கூட்டணி வைக்கத் தயார் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
நெல்லையில் ரூ.40 லட்சம் சிக்கியது
நெல்லை : திருச்செந்தூர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா செய்வதற்கு நெல்லை ஓட்டல்களில் சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.