தெலுங்கு தேசத்துடன் மாஜி முதல்வர் மகன் ஜெகன் கைகோர்ப்பு : சோனியா முடிவை எதிர்த்து அதிர்ச்சி திருப்பம்
“தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற காங்கிரஸ் மேலிடத்தின் அறிவிப்பை எதிர்த்து, காங்., எம்.பி.,யும், ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன்மோகன் ரெட்டி, போர்க்கொடி தூக்கியுள்ளார்.
தமிழீழ தேசிய தலைவரின் மகள் துவாரகாவின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
தமிழீழ தேசிய தலைவரின் மகள் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காயப்பட்ட போராளிகளுடன் துவாரகாவும் சரணடையச் சென்றதாகக் கூறப்படுகிறது.
நேரடி எம்.ஏ., பட்டம் பெற்ற 100 வக்கீல்களின் பதிவு ரத்து
சென்னை : பள்ளிப் படிப்பு படிக்காமல், திறந்தவெளி பல்கலை மூலம் எம்.ஏ., படித்து, பின் சட்டப் படிப்பு முடித்த 100 வக்கீல்களின் பதிவை, தமிழ்நாடு பார் கவுன்சில் ரத்து செய்துள்ளது. இந்த எண்ணிக்கை ஆயிரம் வரை எட்டும் எனக் கூறப்படுகிறது.
புவி வெப்பம் குறைக்க வாய்ப்பு இல்லை ? வளர்ந்த – வளரும் நாடுகள் இடையே மோதல்
கோபன்ஹேகன்: புவிவெப்ப உயர்வு மற்றும் பருவகால மாற்றம் தொடர்பாக உலக அளவில் ஒரே சட்ட வரைவு ஏற்படுத்துவதில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் இடையே கருத்து வேற்றுமை எழுந்துள்ளது. இதனால் கோபன்ஹேகன் மாநாட்டில் பயனுள்ள சட்ட திட்டம் ஏற்படும் என்பதில் சந்தேகமே. இதற்கிடையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இந்த மாநாட்டில் பங்கேற்பாரா என்ற கேள்வி … Continued
சேது சமுத்திர திட்ட நிபுணர் குழு அறிக்கை : அரசு நிலையை அறிவிக்க கோர்ட் உத்தரவு
ராமர் சேது பாலத்தை சேதப்படுத்தாமல், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக, நிபுணர் குழு அளித்த அறிக்கை பற்றிய நிலையை, மத்திய அரசு இரண்டு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்’ என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோதுமை விலை குறையும்: வருகிறது ஆன்-லைன் வர்த்தகம்
புதுடில்லி: குறிப்பிட்ட மாநிலங்களில் ஆன்-லைன் வர்த்தகம் மூலம் கோதுமையை விற்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வெளிச் சந்தையில் கோதுமை விலை குறைய வாய்ப்புள்ளது. டில்லியில் அக்டோபர் மாதம் 13 ரூபாய்க்கு விற்ற கோதுமை ஒரு கிலோ இப்போது 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோதுமை மாவு அக்டோபரில் 15 ரூபாய்; இப்போது 18 ரூபாய்.
அலரி மாளிகை இன்று ஒரு அன்னதான சபையாகி விட்டது அதற்குச் சம்பந்தன் வருவாரா எனக் காத்திருக்கிறார் மஹிந்த: ஹக்கீம்
அலரிமாளிகை இன்று ஒரு அன்னதானசாலை. இந்த அன்னதான சாலைக்கு சம்பந்தன் வருவாரோ வரமாட்டாரோ என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த. இப்படி இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் இணைத் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆட்சி அமலாகாது
புதுடெல்லி : ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அவசியமில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து நான்காவது நாளாக நடக்கும் போராட்டத்தால் ஆந்திராவில் அரசு நிர்வாகம் முடங்கிப் போயுள்ளது.
இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு
ராஜ்கோட் : இந்திய அணி ஒரு நாள் போட்டியில் அதிக பட்ச ரன் குவித்து சாதனை படைத்துள்ளது. ராஜ்கோட்டில் இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தை பிரிக்கும் எண்ணம் இல்லை : ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி ‘பளீர்’ பதில்
சென்னை : தெலுங்கானாவைத் தொடர்ந்து, தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பிரிவினை கோஷம் தமிழகத்தில் எழுந்தது. “தமிழகத்தைப் பிரிக்கும் எண்ணம் இல்லை’ என திட்டவட்டமாக அறிவித்ததன் மூலம், பா.ம.க., ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி “பளீர்’ பதிலடி கொடுத்துள்ளார்.