ஆந்திர குழப்பத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறல் : பந்த், வன்முறையால் மாநிலம் முழுவதும் ஸ்தம்பிப்பு
ஐதராபாத் : தெலுங்கானா தனி மாநில விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இதற்கிடையே, தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் நேற்று நடந்த, “பந்த்’ மற்றும் வன்முறை காரணமாக மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்தது.
காதல் திருமணம் செய்த பெண் பெற்றோருடன் செல்ல மறுப்பு
மதுரை:மதுரை பேரையூர் அருகே காதல் திருமணம் செய்தவர்கள் மீது தேவையின்றி புகார் கொடுக்கக்கூடாது என, பெற்றோருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.மதுரை பேரையூரைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார்(23). இவரும், அதே ஊரைச் சேர்ந்த உமா மகேஸ்வரியும் காதலித்தனர். உமா மகேஸ்வரியின் பெற்றோர் இதை எதிர்த்தனர். உமா மகேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தனர்.
பீகாரில் 300 அரசு அதிகாரிகள் கோடீஸ்வரர்கள்
பாட்னா : பீகாரில் ஊழல் பெருச் சாளிகளாக விளங்கும் அரசு அதிகாரிகளில் 300 பேர் கோடீஸ்வரர்களாக இருக்கின்றனர் என்று ஊழல் கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது.
பள்ளிப் படிப்பை முடிக்காதவர்களும் பட்டம் பெறலாம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி அன்புச்செல்வன் கல்விமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி:
சொத்து மதிப்பு உயர்வில் இந்தியர்கள் முதலிடம்
மும்பை : கடந்த 6 மாதங்களில் தங்களது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாக 68 சதவீத இந்திய முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நமக்கு கடும் போட்டியாக உள்ள சீனாவில் இது வெறும் 46 சதவீதம்தான்.
நோபல் பரிசை பெற்றார் அமெரிக்க அதிபர் ஒபாமா
ஆஸ்லோ : அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நேற்று வழங்கப்பட்டது. வன்முறை இல்லாத போராட்டத்துக்கு வழிவகுத்த மகாத்மா காந்தி, உலக அமைதிக்கான முயற்சியில் முக்கிய பங்கு வகிப்பதாக ஒபாமா தன்னுடைய உரையில் புகழாரம் சூட்டினார்.
93 எம்எல்ஏக்கள் ராஜினாமா
ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி வேறுபாடு இன்றி, 93 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஆந்திராவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை-யுஎஸ் சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுத்தம்!
பெங்களூர்: உலகின் மிகப்பெரிய கண்டெய்னர் ஷிப்பிங் நிறுவனமான மெர்ஸ்க் லைன் தனது அமெரிக்க- சென்னை நேரடி கப்பல் போக்குவரத்தை வரும் பிப்ரவரி 5-ம் தேதி முதல் நிறுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
பள்ளிகளில் நூலக வகுப்பிற்கு நேரம் ஒதுக்கீடு செய்ய உத்தரவு
திண்டுக்கல்: பள்ளிகளில் நூலக வகுப்பிற்கு மாணவர்கள் செல்ல நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்த வேண்டும்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு இடைத்தேர்தலில் விலக்கு கூடாது: ஐகோர்ட்டில் மனு தாக்கல்
சென்னை: தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு, தேர்தல் நடத்தை விதிகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கக் கூடாது எனக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.