11 நாட்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் சந்திரசேகர ராவ் : தனி தெலுங்கானா உருவாக்க மத்திய அரசு சம்மதம்
புதுடில்லி : ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு நேற்று ஒப்புதல் தெரிவித்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மத்திய அரசு பணிந்தது. இதையடுத்து, சந்திரசேகர ராவ் தன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.
பின்லேடனை கொல்லாமல் அல்-காய்தாவை தோற்கடிக்க முடியாது: அமெரிக்க இராணுவ தளபதி
சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லேடனைக் கொல்வது அல்லது உயிருடன் பிடிப்பது ஆகிய ஏதாவது ஒன்றின் மூலமே அல்- காய்தாவை தோற்கடிக்க முடியும் என்று ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படைகளுக்கான இராணுவ தளபதி ஸ்டேன்லி மிக்கிறிஸ்டல் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர்
திருச்செங்கோடு: கொக்கராயன்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை, முன்னாள் மாணவர் தத்தெடுத்துக் கொண்டார்.
புலிகள் தன்மீது தாக்குதல் நடத்தும் சாத்தியம் உண்டு என்கிறார் சரத் பொன்சேகா
விடுதலைப் புலிகள் தம் மீது தாக்குதல் நடத்தக் கூடிய சாத்தியம் உள்ளது என்று முன்னாள் இராணுவத்தளபதியும், ஜனாதிபதி தேர்தல் எதிரணிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா அச்சம் வெளியிட்டுள்ளார்.
துபாயில் தாவூத் இப்ராகிம் ரூ.3,300 கோடி முதலீடு
புதுடெல்லி : மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், துபாயில் ரூ.3,300 கோடி முதலீடு செய்திருப்பதாக போதை மருந்து கடத்தலுக்கு நிதியுதவி வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ள நரேஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
என்னை துரத்தி, வீட்டை பறிக்க மிரட்டல் : ஐ.பி.எஸ்., மகனின் தாய் மனு : நீதிபதி உத்தரவு
கோல்கட்டா : வீட்டை கைப்பற்ற நினைத்த மகனுக்கு எதிராக, ஒரு தாய் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். முதல்வர், டி.ஜி.பி.,யிடம் புகார் தெரிவித்தும் பயன் இல்லாததால் இப்போது கோர்ட் படி ஏறியுள்ளார்.
விடாமல் துரத்தும் பருந்து: பயந்து வாழும் வாலிபர்
தலச்சேரி : மருத்துவமனையில் பணியாற்றும் வாலிபரை பழிதீர்க்கும் எண்ணத்துடன் பருந்து ஒன்று விடாமல் துரத்தி துரத்தி கொத்தி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அடுத்த கோடியேறியில் உள்ள மலபார் புற்றுநோய் மைய கேன்டீனில் பணியாற்றி வருபவர் ஷிஜின்ராஜ். இவர், எப்போது வெளியே சென்றாலும் அவருக்காக காத்திருக்கும் பருந்து ஒன்று பறந்து வந்து அவரை … Continued
தெலுங்கானா கேட்டு போராடும் சந்திரசேகர ராவ் சீரியஸ்: தனி மாநிலம் வழங்குவது குறித்து காங்., தீவிர பரிசீலனை
தெலுங்கானா தனி மாநிலம் கேட்டு, சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வரும் டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவின் உடல்நிலை சீரியசாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஆந்திராவில் பெரிய அளவில் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஓடும் பஸ்சில் பயங்கர கொள்ளை-6 பேர் கும்பல் துணிகரம், சுமோவில் தப்பியது
பெரம்பலூர்: சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் பயணிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.