மதுரையில் 2 பெரிய ஐடி நிறுவனங்கள்!-அமைச்சர் தகவல்
திருச்சி: ஐடி துறை வாய்ப்புகளை மாநிலத்தின் கிராமப்புற இளைஞர்களுக்கும் கிடைக்க வழி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழக அரசு.
ஐ.ஐ.டி., மாணவருக்கு ரூ.27 லட்சம் ஊதியத்தில் வேலை
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யில் படிக்கும் 4 மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ரூ.27 லட்சம் ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது.
ஊனமுற்றோர் நலவாழ்வு விருதுகள் சேலம் கலெக்டருக்கு பிரதிபா வழங்கினார்
ஊனமுற்றோர் நல்வாழ்வுத்துறை தேசிய விருதுகள் நேற்று டில்லியில் வழங்கப்பட்டன. மொத்தம் உள்ள 52 விருதுகளில் தமிழகத்துக்கு மட்டும் 9 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த மறுவாழ்வு அளித்த மாவட்டமாக சேலம் மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் 24 புதிய தொழில் பயிற்சி மையங்கள்
சென்னை: தமிழகத்தில் 24 புதிய தொழில் பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான இடங்களை தமிழக அரசு தேர்வு செய்திருப்பதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
ரஷ்ய கேளிக்கை விடுதியில் பட்டாசு விபத்து விருந்தில் பங்கேற்ற 100 பேர்பலி; 100 பேர் காயம்
மாஸ்கோ : ரஷ்யாவில் உள்ள கேளிக்கை விடுதியில் ஆண்டு விழாவை கொண்டாடிய நேரத்தில் பட்டாசு கூடாரத்தில் விழுந்து தீ பற்றிக்கொண்டது. இதில் 100 பேர் பலியாயினர். 100 க்கும் மேற்பட்டார் காயமுற்றனர். ரஷ்யாவில் அடுத்தடுத்து துயரச்சம்பவம் நடந்து வருவது அரசுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது.
அடுத்த ஐந்தாண்டில் கட்டாய உயர்நிலை கல்வி : கபில் சிபல் தகவல்
புதுடில்லி : அடுத்த ஐந்தாண்டில் உயர்நிலைப் பள்ளி கல்வியை அடிப்படை உரிமையாக்க, மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
புவிவெப்பம்: விழிப்புணர்வுக்காக எவரெஸ்ட்டில் கேபினட் கூட்டம்!
காத்மாண்டு: புவிவெப்பம் குறித்த விழிப்புணர்வுக்காக நேபாள நாட்டு அமைச்சரவைக் கூட்டம் இன்று எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் நடைபெறுகிறது. இதற்காக அங்கு நேபாள அமைச்சர்கள் திரண்டுள்ளனர்.
லிம்கா சாதனைக்காக செய்தித்தாளில் ஓவியம்
புதுச்சேரி : பாரதியார் பல்கலைக்கூடத்தில் லிம்கா சாதனைக் காக மாணவர்கள் செய்தித் தாளில் ஓவியம் உருவாக்கியுள்ளனர்.
போலி மருந்து தயாரிப்பு பற்றி தகவல் தந்தால் ஊக்கத் தொகை
சென்னை : போலி மருந்து தயாரிப்பவர்கள் பற்றி தகவல் தருவோருக்கு, 25 லட்சம் ரூபாய் வரை ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போலி மருந்துகள் மற்றும் கலப்பட மருந்துகளை கட்டுப்படுத்த, மத்திய அரசின் மருந்துகள் மற்றும் அழகு சாதனச் சட்டத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் … Continued
ரூ.15,000 சம்பளம் வரை பிஎப் சேமிப்பு கிடைக்கும்
புதுடெல்லி: பிஎப் பிடித்தம் செய்வதற்கான சம்பள உச்சவரம்பு, ரூ.6,500ல் இருந்து ரூ.15,000 ஆகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, டெல்லியில் நாளை நடைபெறும் பிஎப் மத்திய வாரிய கூட்டத்தில் வெளியாகிறது.