குறைகிறதா ‘கேட்’ தேர்வு மீதான மதிப்பு?
சென்னை: ‘கேட்’ தேர்வுகளில் ஏற்பட்டுள்ள தொடர் குளறுபடி அத்தேர்வுகளின் மீதான மதிப்பையே கேள்விக்குறியாக்கி உள்ளதாக கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
தொடருது சீனாவின் கள்ளமருந்து வியாபாரம் : ‘மேட் இன் இண்டியா’ என்று லேபிள்
புதுடில்லி : சமீபத்தில் ராஜஸ்தானில் போலி மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நைஜீரிய சம்பவத்துக்குப் பிறகும் சீனா தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பொது வினியோக திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் : பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்
புதுடில்லி: “”உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால் விலைவாசி உயர்ந்துள்ளது. இதை சமாளிக்க வேண்டும் என்றால், பொது வினியோகத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் தான், சாதாரண மக்கள் நிவாரணம் பெற முடியும்,” என, அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
பகுதிநேர வேலையின்றி இந்திய மாணவர்கள் தவிப்பு
லண்டன்: மேல் படிப்புக்காகஇங்கிலாந்து செல்லும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள், தங்கள் படிப்பு, தங்குமிடம், உணவு இவற்றை சமாளிக்க போதுமான பணம் கிடைக்காததால் எப்படியாவது பிழைக்க வேண்டும் என்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
இந்திய நிறுவனங்கள் ரூ.786 கோடி நன்கொடை
புதுடெல்லி: பங்குச்சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள 760 நிறுவனங்கள் கட்சிகள், அறக்கட்டளை களுக்கு வழங்கிய மொத்த நன்கொடை, ரூ.786 கோடி ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 8 சதவீதம் அதிகம்.
மீண்டும் புதிதாக ஒரு இந்தியத் துரோகம்? : ஈழத் தமிழ் இளைஞர்களை மீண்டும் பலிக்கடா ஆக்கும் தந்திரம்
சிங்கள தேசத்தில் பலம் பெற்றுவரும் சீன ஆதரவுத் தளத்தினைச் சிதைப்பதற்கான கருவியாக ஈழத் தமிழ் இளைஞர்களை மீண்டும் பலிக்கடா ஆக்கும் தந்திரத்தை இந்தியா கைக்கொள்ள முயற்சிக்கின்றது. இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு நாளிதழ் இன்றைய பதிப்பின் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
உலகப் பொருளாதாரம் எங்கு செல்கிறது
திரும்பிப் பார்ப்பதற்குள் ஒரு வருடம் முடிந்து விட்டது. உலகை உலுக்கிய பொருளாதார பிரச்னை, உலக நாடுகள் அனைத்திற்கும் பரவ ஆரம்பித்தது. எரிந்த தீ அணைந்து விட்டதா? இன்னும் எரிந்து கொண்டிருக்கிறதா? விடை தெரியத்தான் இந்தக் கட்டுரை.
விமானப் படை விமானங்களுக்கு டயர் தயாரிக்கும் பணியில் எம்.ஆர்.எப்., தீவிரம்
சென்னை: இந்திய விமானப் படை விமானங்களுக்கு டயர் தயாரிக்கும் பணியில் எம்.ஆர்.எப்., நிறுவனம் தீவிரமாக இறக்கி உள்ளது. பொதுவாக இந்திய விமானப் படைக்கு தேவையான டயர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுகிறது.
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் : துவக்க அரசு உத்தரவு
விருதுநகர் : அனைவருக்கும் இடைநிலைக்கல்வி வழங்கும் திட்டம் துவக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை அடுத்ததாக, மத்திய அரசு “ராஷ்டிரிய மத்திம சிக்ஷ அபியான்'(அனைவருக்கும் இடைநிலைக்கல்வி) திட்டத்தை முதலில் தமிழகம், மத்தியபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்துகிறது.
பள்ளிகளில் சாலை பாதுகாப்பு பாடம்: முதல்வர் வலியுறுத்தல்
சென்னை:””பள்ளி அளவிலேயே, சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை பற்றிய பாடம் இடம்பெற வேண்டும்,” என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தினார்.சாலை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற போக்குவரத்து மேலாண்மை பற்றிய தேசிய கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.