திருமணப் பதிவு கட்டாயம்-90 நாளி்ல் பதிவு செய்ய வேண்டும்
சென்னை: தமிழகத்தில் திருமணப்பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் குற்ற வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை கதிகலங்க வைக்கும் அமெரிக்க தமிழர்களின், இலங்கை தயாரிப்புகளை புறக்கணிக்கும் போராட்டம்
புலம்பெயர் தமிழர்கள், அமெரிக்க வாழ் தமிழர்கள் என பலரும் இன்று ஒரு வித்தியாசமான, ஆனால் இலங்கைக்கு பெரும் வலியைத் தருகிற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதுதான் இலங்கைத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம்.
மும்பை தாக்குதலில் பலியான வீரர்கள் குடும்பங்களுக்கு பெட்ரோல் ‘பங்க்’ உரிமம்:
மும்பை: மும்பைத் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பெட்ரோல் “பங்க்’ உரிமம் வழங்கும் நடவடிக்கை தீவிரமாக நடப்பதாக மத்திய அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.
2.1 கோடி சீன செல்போன் இன்றுடன் இணைப்பு ரத்து
பெங்களூர் : சர்வதேச மொபைல் அடையாள எண் (ஐஎம்இஐ) இல்லாத சுமார் 2.1 கோடி சீன செல்போன்களின் இணைப்பு இன்றிரவு 12 மணியுடன் ரத்தாகிறது. சர்வதேச அளவில் ஒவ்வொரு செல்போனையும் அடையாளம் காண வசதியாக ஐஎம்இஐ எண் தரப்படுகிறது.
வானில் சுற்றி வரும் விண்வெளி நிலையத்தை இன்று வெறும் கண்ணால் பார்க்கலாம்
கோவை: விண்ணில் இருந்தபடியே விண்வெளியை ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து, 1998ம் ஆண்டு முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுவி வருகின்றன. 73 மீட்டர் நீளம், 108.5 மீ அகலம் உடைய இந்த நிலைய கட்டுமானப்பணிகள் 2010 வரை நடைபெறும்.
13வது திருத்தத்திற்கு மேல் செல்லத் தயார்;முன்னாள் புலிகளின் ஆதரவையும் ஏற்பேன்: பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா பேட்டி
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் செல்லமுடியும் எனவும், முன்னாள் புலி உறுப்பினர்கள் எனக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு முன்வந்தால் அதனை இன்முகத்துடன் வரவேற்பேன் என்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் இரு பயிற்று மொழி வசதி ஏற்படுத்துவது கடினம்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
காஞ்சிபுரம்:அரசு பள்ளிகளில் இருவேறு பயிற்று மொழி வசதியை ஏற்படுத்துவது இயலாத காரியம் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.சென்னை மண்டல கல்வித் துறை ஆய்வுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது.
கிளிநொச்சிக்கு செல்ல பயந்த சரத் பொன்சேகாவை தைரியப்படுத்திய மஹிந்த: பாதுகாப்புத்தரப்பு
எனக்கு இதுவரை தோல்வியே இல்லை என்று கூறும் பொன்சேகா, கிளிநொச்சிக்குப் போகவே பயந்து கொண்டிருந்தார். அவரை ஜனாதிபதி ராஜபக்சதான் சமாதானப்படுத்தி, தைரியப்படுத்தினார் என்று இலங்கை பாதுகாப்புத்தரப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் ரூ.30,000 கோடியில் லட்சுமி மித்தலின் உருக்கு ஆலை!
டெல்லி: இரும்பு எஃகுத் தொழிலில் உலகிலேயே முன்னிலை வகிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான லட்சுமி மித்தலின் ஆர்செலார் மித்தல் நிறுவனம் கர்நாடகத்தில் உருக்கு ஆலைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.