அமெரிக்க பெண்ணுக்கு ரூ.1,500 கோடி இழப்பீடு
நியூயார்க் : அமெரிக்காவில் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 16 ஆண்டுகள் ஆகியும் நுரையீரல் பாதிப்பால் முடங்கிக் கிடக்கும் பெண்ணுக்கு சிகரெட் நிறுவனம் ரூ.1,500 கோடி இழப்பீடு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மின் கம்பியை பிடித்த பாகனை : காப்பாற்றிய பாசக்கார யானை
ஓசூர் : ஓசூர் அருகே மின் கம்பியில் தொங்கிய யானைப் பாகனை யானை காப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமாக 50 வயது மதிக்கத்தக்க “சுமா’ என்ற யானை உள்ளது.
மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த வேண்டாம்:மந்திரி பவாருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம்
சென்னை: மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல், மீன் பிடித்தலை ஒழுங்குமுறைப் படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டாமென, மத்திய அமைச்சர் சரத் பவாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில் எல்.ஐ.சி., ஏஜன்ட்கள் வழக்கு : கமிஷன் முறையை மாற்றக்கூடாது
புதுடில்லி : எல்.ஐ.சி.,ஏஜன்ட்களுக்கு வழங்கப்படும் கமிஷன் முறையை மாற்றி, அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர்.
பயன்படுத்தாத நகைக்கு வட்டி தருகிறது எஸ்பிஐ
மும்பை : பயன்படுத்தாத பழைய தங்க நகைகளை வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறீர்களா… அவற்றை ஸ்டேட் பாங்க்கில் டெபாசிட் செய்து, வட்டியும் பெறலாம். மதிப்பு மீது கடனும் பெறலாம். கோல்டு டெபாசிட் திட்டத்தை நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
பாடங்களை எழுதிய பிறகே பாட திட்டம் வரவேண்டும்
சென்னை : சமச்சீர் கல்வி பாட திட்டம் தயாரிக்கும் பணி நடக்கிறது. இதற்காக ஒன்று மற்றும் 6ம் வகுப்புகளுக்கு பாட புத்தகங்கள் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக குறிப்புதவி நூல்கள் சேகரித்தல், ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் போன்ற ஆயத்த பணிகள் நடக்கின்றன.
ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன: கலைஞர்
பிரபாகரன் மீது புகார் கூறி முதல்வர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்தன. இது தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தலாய்லாமாவின் உதவியாளர் ஏழுவயது சிறுமி
ஏழு வயதுச் சிறுமி ஒருத்தி, தனது முற்பிறவியில் தான், தலாய்லாமாவின் உதவியாளராக இருந்ததாகக் கூறிவருகிறாள். இந்தச் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆசார்ய சாம்பவி (7), தனது பெற்றோர்களுடன் உத்தரபிரேதசம் வாரணாசியில் வசித்துவந்தாள். எல்லாக் குழந்தைகள் போலவே சாதாரணமாக இருந்தவள், வளர வளர திபெத் பற்றியும் அதன் விடுதலை பற்றியும், புத்த மதம் பற்றியும் … Continued
கிளிநொச்சி வெறுமையாகக் காட்சியளிக்கிறது; தமிழரின் கலாசார அடையாளங்கள் எதுவுமில்லை: ஏ-9 வீதியால் பயணித்த பத்மினி எம்.பி. கவலை
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஏ9 பாதையூடாக நேற்றுப் பயணித்தபோது கிளிநொச்சி நகரின் வெறுமையைக் கண்டேன். அந்தப் பிரதேசத்தில் உள்ள தமிழர்களின் அடையாளங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளதை நேரில் பார்த்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
காஷ்மீர் பேச்சுவார்த்தை-சீனாவையும் இழுக்க முயலும் ஹுரியத்
ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சீனாவையும் சேர்க்க வேண்டும் என அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாட்டு கட்சித் தலைவரான மீர்வைஸ் உமர் பாரூக் கோரிக்கை விடுத்துள்ளார்.